India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் பீடி, சுண்ணாம்புக்கல் மற்றும் சுரங்கத்தொழிலாளர்கள், சினிமா தொழிலாளர்களுடைய குழந்தைகள் 1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை படிப்போர் கல்வி உதவித்தொகை பெற https://scholarships.gov.in இணையதளத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் மாற்றுத்திறனாளி ஒருவர் காதொலிக்கருவி வேண்டி ஆட்சியரிடம் மனு அளித்தார். மனுவை விசாரித்த ஆட்சியர் க.தர்ப்பகராஜ் உடனடியாக பரிசீலனை செய்து மாற்றுத்திறனாளிக்கு ரூ.3,500 மதிப்பிலான காதொலிக்கருவியை வழங்கினார். இதில் அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் வெளியிட்ட செய்தி குறிப்பில், தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டு கழகம் (டாம்கோ) மூலம் கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மாவட்டத்தில் வசிக்கும் கிறிஸ்தவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பாா்சி ஜெயின் ஆகிய சிறுபான்மையினா் கடன் பெற விண்ணப்பங்களை பூா்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் ஆட்சியா் அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும் என அறிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழக அரசு மின் வினியோகத்தை குறைக்கவும், விவசாயிகளின் நலனுக்காகவும் பிரதான் மந்திரி கிஷான் உர்ஜா சுரஷேவம் உத்தான் மஹாபியா யோஜனா என்ற திட்டத்தின கீழ், மானிய விலையில் சோலார் பம்பு செட்டுகள் அமைத்துக் கொள்ள விருப்பம் உள்ள விவசாயிகள் திருப்பத்தூர் வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளரை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜோலாா்பேட்டை அடுத்த சின்னமோட்டூா் ஊராட்சியில் பால்வளத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறையின் சாா்பில் சிறப்பு முகாம் நேற்று(ஜூலை 6) நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசிய மாவட்ட ஆட்சியர் க.தா்ப்பகராஜ் திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கால்நடை சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன என தெரிவித்தாா்.
திருப்பத்தூர் மாவட்ட அரசு ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் மேல்நிலை, உயர்நிலை நடுநிலைப்பள்ளி ஆசிரியர் பணியிடத்திற்கும், தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் பணியிடமானது மாதத் தொகுப்பூதியத்தின் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் ஜூலை 10ஆம் தேதிக்குள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையினர் தனி நபர் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் இன்று (ஜூலை 5) தெரிவித்துள்ளார். தனிநபர் கடன் பெற திருப்பத்தூர் மாவட்டத்தில் வசிக்கும் சிறுபான்மையினர்கள் இத் திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பங்களை பூர்த்தி செய்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் உரிய ஆவணகளுடன் சமர்ப்பிக்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரி மூன்றாம் ஆண்டு கணினி அறிவியல் படிக்கும் மாணவி மலேசியா நாட்டில் நடந்த சர்வதேச அளவிலான சிலம்பம், கம்பு சண்டை போட்டியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். மாணவிக்கு கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் பாராட்டு விழா நேற்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கல்லூரி நிர்வாகிகள், பேராசிரியைகள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டு மாணவியை வாழ்த்தினர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து வைகாசி மாத அமாவாசைக்கு நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் ஊஞ்சல் சேவை நடக்கிறது. இதனை முன்னிட்டு திருப்பத்தூரில் இருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் திருப்பத்தூரில் இருந்து சிறப்பு கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் அறிவுறுத்தலின் பெயரில் மாவட்ட காவல்துறை இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், எங்கள் நிறுவனம் சார்ந்த வலைதள பக்கங்களை லைக் மற்றும் ஷேர் செய்தால் சுலபமாக பணம் ஈட்டலாம் என பொய்யாக விளம்பரப்படுத்தி மக்களை நம்பவைத்து ஏமாற்றி பணம் பறிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள் நடைபெறுகின்றன. எனவே பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.