Tirupathur

News March 3, 2026

திருப்பத்தூர் கலெக்டர் ஆபிசில் குவிந்த மனுக்கள்!

image

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. இதில், மொத்தம் 768 மனுக்கள் பெறப்பட்டன. மேலும், 3 மாணவர்களுக்கு ரூ.1 லட்சத்து 59 ஆயிரத்து 470 கல்வி கடன் உதவி, ஒருவருக்கு இ-பட்டா. 3 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.26 ஆயிரத்து 500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சிவசவுந்தரவல்லி வழங்கினார். மேலும் மற்ற மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

News March 3, 2026

ஜோலார்பேட்டையில் தட்டி தூக்கிய திமுக!

image

ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் ஊராட்சியைச் சேர்ந்த அதிமுகவினர் 50-க்கும் மேற்பட்டோர், அக்கட்சியிலிருந்து விலகி நேற்று திமுகவில் இணைந்தனர். ஜோலார்பேட்டையில் உள்ள திமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, ஜோலார்பேட்டை மத்திய ஒன்றியச் செயலாளர் கவிதா தண்டபாணி தலைமை தாங்கினார். இச்சம்பவம் அப்பகுதி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News March 3, 2026

திருப்பத்தூர்: பெண்ணிடம் அத்து மீறியவருக்கு தர்ம அடி!

image

திருப்பத்தூர்: நாட்டறம்பள்ளி அருகே நேற்று வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் மூவர், தனியாக இருந்த 30 வயது பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றனர். அந்தப் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பொதுமக்கள், தப்பியோட முயன்றவர்களில் ஒருவரைப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். தப்பியோடிய மற்ற இருவரை நாட்டறம்பள்ளி போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

News March 3, 2026

திருப்பத்தூர் இரவு ரோந்து பணி விவரம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை ரோந்து பணியில் காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்தில் உட்கோட்ட போலீஸ் அதிகாரியை மேற்கொண்டு தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி என்னும் பெயரும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!

News March 3, 2026

திருப்பத்தூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு நல உதவி

image

திருப்பத்தூர் ஆட்சியரக மக்கள் குறை தீர்வு கூட்டரங்கில் நடைப்பெற்ற மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது.இதில் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு மனுக்கள் தொடர்பான குறைகளை உடனுக்குடன் தீர்வு காணுமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சிவ சௌந்தர வல்லி உட்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்

News March 2, 2026

திருப்பத்தூர்: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

image

பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக 2015-ல் தொடங்கப்பட்டது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் (ம) பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News March 2, 2026

திருப்பத்தூர்: ATM கார்டு இருக்கா? ரூ.10 லட்சம் இலவச காப்பீடு!

image

திருப்பத்தூர் மக்களே, ஏடிஎம் கார்டு வச்சு இருக்கீங்களா? ஆர்.பி.ஐ விதிப்படி அப்போ உங்களுக்கு ரூ.50,000 – 10 லட்சம் வரையான (Complimentary Insurance) இலவச இன்சூரன்ஸ் இருக்கு. இதற்கு நீங்க எந்த காசும் கட்ட வேண்டாம். உங்க ஏடிஎம் கார்டை மாதம் தவறாம பயன்படுத்தினாப் போதும். இந்த இன்சூரன்ஸ் இல்லைன்னு சொன்னா இங்கு<> க்ளிக் <<>>செய்து புகார் தெரிவியுங்க. இந்த இலவச இன்சுரன்ஸை அனைவரும் தெரிஞ்சுக்க ஷேர் பண்ணுங்க!

News March 2, 2026

திருப்பத்தூர் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளின் எண்கள்

image

தற்போதைய சூழலில் தலைவிரித்தாடும் லஞ்சத்தை கட்டுப்படுத்த இந்த எண்களை தெரிஞ்சிக்கோங்க. திருப்பத்தூர் DSP-04179-299100, வடக்குமண்டல பிரிவு எஸ்.பி-044-22321090 / 22321085, லஞ்ச ஒழிப்பு கட்டுப்பாட்டு அறை-044-22321090/22321085, TOLL FREE NO-1064, மாவட்ட கண்காணிப்பு அலுவலர்-7373004517 .*யாரேனும் லஞ்சம் வாங்கினால் உடனடியாக CALL பண்ணவும். உங்கள் விவரங்கள் ரகசியம் காக்கப்படும். நண்பர்களுக்கும் பகிருங்கள்

News March 2, 2026

ஜோலார்பேட்டை எம்எல்ஏ அறிக்கை

image

திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும், ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏவுமான தேவராஜி வெளியிட்ட அறிக்கையில், திமுக சட்டசபை தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு கருத்து கேட்பு கூட்டம் திமுக துணை பொதுச்‌ செயலாளர் கனிமொழி தலைமையில் நாளை (மார்.3) காலை 10 மணியளவில் வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஜேபிஎம் மஹால் நடைபெறுகிறது. இதில் திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்கலாம் என தெரிவித்துள்ளார்.

News March 2, 2026

திருப்பத்தூர்: சொந்த வீடு கட்ட அரசு தரும் சூப்பர் OFFER!

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <>pmay-urban.gov.in<<>> என்ற இணையதளம் மூலம் இதற்கு விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!