Tirupathur

News July 12, 2024

திருப்பத்தூர்: விஏஓ பணியிட மாறுதல் கலந்தாய்வு

image

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வருவாய் கோட்டம் திருப்பத்தூர் மற்றும் நாட்றம்பள்ளி வட்டத்திற்குட்பட்ட வருவாய் கிராமங்களில் பணியாற்றி வரும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு நேற்று இரவு நடைபெற்றது. இந்த கலந்தாய்வில் 27 கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிடமாறுதல் பெற்றுள்ளதாக வருவாய்த்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 12, 2024

திருப்பத்தூர்: மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

image

திருப்பத்தூர் மாவட்டம் மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இத்திட்டத்தின்கீழ் 7 மாற்றுத்திறனாளிகள் உள்பட வெவ்வேறு துறைகளில் 11 நபர்களுக்கு தீர்வு காணப்பட்டு அதற்கான ஆணைகளை ஆட்சியர் தர்ப்பகராஜ், எம்பி அண்ணாதுரை வழங்கினர். இம்முகாமில் பல்வேறு துறைகளின் வாயிலாக 346 மனுக்கள் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News July 11, 2024

அமைச்சரை சந்தித்த எம்எல்ஏ-க்கள்

image

திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும், ஜோலார்பேட்டை எம்எல்ஏவுமான க.தேவராஜி, ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அ.செ.வில்வநாதன் நேற்று தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் வேலுவை அவரது கட்சி அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தனர். அப்போது அவருக்கு பட்டு வேட்டி அணிவித்து மரியாதை செய்தனர். உடன் திமுக மாவட்ட நிர்வாகிகள் இருந்தனர்.

News July 11, 2024

திருப்பத்தூர் மாணவிகளுக்கு எஸ்பி சான்றிதழ்

image

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பாக பெண் ‘குழந்தைகளை காப்போம்; பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ (BETA BACHAD BETI PADHAO – BBBP) திட்டத்தின்கீழ் 80 பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு கராத்தே பயிற்சி வழங்கப்பட்டு நேற்று (ஜூலை 10) பயிற்சி முடித்ததற்கான சான்றிதழ் மற்றும் Yellow Belt ஆகியவை வழங்கப்பட்டது. இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், பள்ளி மாணவிகளுக்கு வழங்கினார்.

News July 10, 2024

திருமண நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர்

image

மாநில பெற்றோர் ஆசிரியர் கழக துணை தலைவரும், மாவட்ட ஊராட்சி குழு தலைவரும், நாட்டறம்பள்ளி மேற்கு ஒன்றிய செயலாளருமான என்.கே.ஆர். சூரியகுமார் இன்று பச்சூர், பந்தாரப்பள்ளி ஆகிய ஊராட்சி முக்கிய பிரமுகர்கள் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். நிகழ்வில் பச்சூர் ஆசிரியர் ரவி, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் கபிலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News July 10, 2024

திருப்பத்தூர்: மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் அறிவிப்பு

image

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தாலுகா சின்னகல்லுபள்ளியில் அமைந்துள்ள மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியில் நாளை (ஜூலை 11) காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு துறைகளின் சார்பில் கோரிக்கை மனுக்கள் பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தங்கள் குறைகளை தெரிவித்து பயனடையுமாறு பொதுமக்களுக்கு திருப்பத்தூர் கலெக்டர் தர்ப்பகராஜ் அழைப்பு விடுத்துள்ளார்.

News July 9, 2024

திருப்பத்தூரில் குறும்பட போட்டி அறிவிப்பு

image

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், குறும்பட போட்டி குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், பெண்களுக்கு எதிரான சைபர் புல்லிங், டிஜிட்டல் ட்ரோலிங் ஆகியவற்றுக்கு எதிரான விழிப்புணர்வு என்ற தலைப்பின்கீழ் வீடியோ ஒன்றை 4 நிமிடங்களுக்குள் தயாரித்து adspcwctpt@gmail.com அனுப்ப வேண்டும். இப்போட்டியில் யார் வேண்டுமானாலும் பங்கு பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 9, 2024

மாநில அளவில் தங்கம் வென்ற திருப்பத்தூர் மாணவி

image

சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் சனிக்கிழமை (ஜூலை 6) நடைபெற்ற தமிழ்நாடு மாநில ஜூனியா் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வாணியம்பாடி கல்லூரி மாணவி தங்கம் வென்றாா். இப்போட்டியில், யு-18 பிரிவு ஈட்டி எறிதலில் வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரி இளங்கலை முதலாமாண்டு வணிகவியல் துறை மாணவி ஜி.கீா்த்திகா முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ் பெற்றாா்.

News July 8, 2024

ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்த மனுக்கள்

image

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் பொது சுகாதாரம், வேலைவாய்ப்பு, குடிநீர் வசதி, இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை போன்ற கோரிக்கைகள் அடங்கிய 402 மனுக்கள் ஆட்சியரால் பெறப்பட்டது. மனுக்களை பெற்ற ஆட்சியர் அதன் மீது விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

News July 8, 2024

ரூ.4.07 லட்ச மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கிய ஆட்சியர்

image

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் 25 பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.75 ஆயிரம் மதிப்பில் அதிநவீன படிக்கும் கருவி (Modular Reading Device) மற்றும் 5 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பில் எழுத்துகளை பெரிதாக்கி படிக்க உதவும் உருப்பெருக்கி (Magnifier) என மொத்தம் ரூ.4.07 இலட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.

error: Content is protected !!