India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று பல்வேறு கட்சி நிகழ்வுகளில் பங்கேற்க திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்தார். அவரை அகில இந்திய காங்கிரஸ் சிறுபான்மையினர் துணை தலைவர் ஜானி ஜாவித் சால்வை அணிவித்து வரவேற்றார். மேலும், அவருக்கு காங்கிரஸ் தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை நேற்று பல்வேறு கட்சி நிகழ்வுகளில் பங்கேற்க திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்தார். அவரை அகில இந்திய காங்கிரஸ் சிறுபான்மையினர் துணை தலைவர் ஜானி ஜாவித் சால்வை அணிவித்து வரவேற்றார். மேலும், அவருக்கு காங்கிரஸ் தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
தமிழ் வளர்ச்சிக்காக பாடுபடும் ஆர்வலர்களை கண்டறிந்து அவர்களின் தமிழ் தொண்டினை அரசு பெருமைபடுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான தமிழ் செம்மல் விருதினை பெற www.tamilvalarchithurai.tn.gov.in என்ற வலைதளத்தில் விண்ணப்பித்தினை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி அலுவலகத்திற்கு ஆகஸ்டு 12ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
திருப்பத்தூர் ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் அமைந்துள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் இன்று மாலை 5 மணி அளவில் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் கண்ணகி திடீரென நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர், அங்கு இருக்கும் ரத்த வங்கிகளையும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் சமையல் அறைகளை ஆய்வு மேற்கொண்டார்.
2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் அதிமுக அனைத்து இடங்களிலும் தோல்வியடைந்தது. இந்நிலையில், தோல்விக்கான காரணங்கள் குறித்து இன்று முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் ஜோலார்பேட்டை முன்னாள் எம்.எல்.ஏ.-வும் முன்னாள் வணிகவரித் துறை அமைச்சருமான வீரமணி, வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பொறுப்பேற்றதிலிருந்து மாவட்டத்தில் குற்ற செயல்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். மேலும், இன்று மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மொபைல் பயன்படுத்தும் நபர்கள் தேவையற்ற செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்றும், அதில் கேட்கும் அனைத்து விதமான அனுமதிகளை முடிந்தளவு தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளி செல்லா குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் சிறப்பு முகாம் இன்று (ஜூலை 12) ஆம்பூர் கன்கார்டியா மேல்நிலைப்பள்ளியில் நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில் பள்ளி செல்லா மாணவர்களை பள்ளியில் சேர்த்து அவர்களுக்கு இந்த கல்வி ஆண்டிற்கான புத்தகங்களை ஆட்சியர் வழங்கினார். மேலும், பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறி விளக்கினார்.
திருப்பத்தூர் ஆட்சியரகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஆகஸ்ட் 20ம் தேதி காலை 10 மணி அளவில் ஆட்சியரகத்தில் ஆட்சியர் தர்ப்பக ராஜ் தலைமையில் ஓய்வூதியர்கள் குறை தீர்வு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் அரசு கூடுதல் செயலாளர் பங்கேற்கிறார். எனவே ஓய்வூதியர்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை நேரடியாக அல்லது மின்னஞ்சல் மூலம் ஜூலை 29-க்குள் ஆட்சியர் நேர்முக உதவியாளரிடம் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாணியம்பாடி தாலுகா பத்தாப்பேட்டையில் செயல்படும் தனியார் உணவகத்தில் இன்று காலை அதே பகுதியை சேர்ந்த சுபாஷ் காலை உணவு வாங்கி உள்ளார். சட்னியில் பல்லி இருந்ததை கண்டு கடை உரிமையாளருக்கு தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் கடையில் உணவருந்திய 3 குழந்தைகள் உள்பட 8 பேர் முன்னெச்சரிக்கையாக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பத்தாப்பேட்டை பகுதியை சேர்ந்த சுபாஷ் என்பவர் மேட்டுப்பாளையம் பகுதியில் தனியார் உணவகத்தில் காலை டிபன் வாங்கி வந்துள்ளார். அதனை சாப்பிட்ட 3 குழந்தைகள் உட்பட 8 பேருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உணவகத்தில் வைக்கப்பட்ட சட்டினியில் பல்லி இருந்தது எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.