Tirupathur

News July 15, 2024

ஆணையத்தில் உறுப்பினராக சேர ஆட்சியர் அழைப்பு

image

தமிழ்நாட்டில் உள்ள கிறிஸ்துவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள், வேதியர்கள், சீஷப்பிள்ளைகள், பாடகர்கள், கல்லறை பணியாளர்கள் போன்றோரின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி மேம்பாட்டிற்காக நல வாரியம் அமைக்க அரசு ஆணையிட்டுள்ளது. எனவே நல வாரியத்தில் உறுப்பினராக சேருவதற்கான விண்ணப்ப படிவங்களை மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகங்கள் மூலம் பெற்று கொண்டு பயனடையுமாறு ஆட்சியர் க.தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.

News July 15, 2024

கிறித்துவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் ஆட்சியர் தகவல்

image

தமிழகம் முழுவதும் சொந்தக் கட்டடங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு கூடுதல் பணி மேற்கொள்ளவும். கட்டிடத்தின் வயதிற்கேற்ப மானிய தொகை உயர்த்தியும் வழங்க அரசு ஆணையிட்டுள்ளது. அதன் படி திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள தகுதியுடைய கிறிஸ்தவ தேவாலயத்தவர்கள் விண்ணப்பித்து பயனடையுமாறு ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News July 15, 2024

காலை உணவு திட்டத்தில் 1555 பேர் பயன் – ஆட்சியர்

image

தமிழகம் முழுவதும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இன்று காலை உணவுத்திட்டமானது விரிவுபடுத்தப்பட்டது. அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளான ஜோலார்பேட்டை, ஏலகிரி மலை, வாணியம்பாடி, ஆம்பூர், நாட்டறம்பள்ளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள 18 பள்ளிகளில் உள்ள 1555 மாணவ மாணவிகளுக்கு காலை உணவு திட்டத்தின் மூலம் உணவு வழங்கப்பட்டதாக மாவட்ட கலெக்டர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.

News July 15, 2024

திருப்பத்தூர் ஆட்சியர் அழைப்பு

image

திருப்பத்தூர் மாவட்ட செஞ்சிலுவை சங்க மாவட்ட கிளைக்கு நிர்வாக தலைவர், துணைத்தலைவர், பொருளாளர் மற்றும் இதர பதவிகளுக்கான தேர்தல் நாளை காலை 11 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் நிரந்தர உறுப்பினர்கள் தங்களுடைய ஆயுள் உறுப்பினர் அட்டை, ஆதார் அட்டை ஏதேனும் ஒன்றுடன் தவறால் கலந்து கொள்ள ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

News July 15, 2024

பெண்களுக்கு ரூ.2 லட்சம் வரை கடனுதவி: கலெக்டர் தகவல்

image

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பில் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கு கடன் உதவி வழங்கப்படுவதாக கலெக்டர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார். பொதுக்கால கடன் திட்டம், தனிநபர் கடன் திட்டம் மூலம் அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படும். பெண்களுக்கான புதிய பொற்கால கடன் திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை வழங்கப்படுகிறது.

News July 14, 2024

காலை உணவு திட்டம் குறித்த ஆட்சியர் தகவல்

image

முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை ஊரகப் பகுதிகளில் அமைந்துள்ள அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளில் விரிவாக்கம் செய்யும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆம்பூர் அடுத்த கரும்பூர் இந்து அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் நாளை நடைபெற உள்ளது. இதில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 14, 2024

ஆம்பூரில் யானை நடமாட்டம் – எம்.பி ஆய்வு

image

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் வட்டத்திற்குட்பட்ட வடபுதுப்பட்டு பகுதியில் யானை நடமாட்டம் இருப்பதாக தகவல் அறிந்தவுடன் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த் நேரடியாக சென்று பார்வையிட்டார். மேலும் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் காட்டு யானையை வனப்பகுதிக்கு விரட்ட வனத்துறைக்கு உத்தரவிட்டார். உடன் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன், மாவட்ட வன அலுவலர் மகேந்திரன் மற்றும் வனத்துறை அலுவலர்கள் உள்ளனர்.

News July 14, 2024

யானையை வனப்பகுதிக்கு விரட்ட ஆட்சியர் உத்தரவு.

image

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கீழ்முருங்கை பகுதியில் நேற்று இரவு முதல் ஒற்றை கொம்பு காட்டு யானை ஊருக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் சுற்றி திரியும் ஒற்றை கொம்பு யானையை ஊருக்குள் நுழையாதவாறு அடர்ந்த வனப் பகுதிக்கு விரட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் வனத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

News July 14, 2024

ஏலகிரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

image

திருப்பத்தூர் மாவட்டத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்கும் ஏலகிரி மலையில் இன்று வார விடுமுறை ஞாயிற்றுக்கிழமை என்பதால் சுற்றுலாப் பயணிகள் வரத்து அதிகரித்துள்ளது. மேலும் படகு இல்லம், இயற்கை பூங்காவில் குடும்பம் குடும்பமாக சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர். சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்துள்ளதால் அப்பகுதி வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News July 14, 2024

திருப்பத்தூரில் மழை

image

திருப்பத்தூரில் கடந்த இரண்டு நாட்களாக இரவு நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் திருப்பத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஜெய்பீம் நகர், வள்ளுவர் நகர், பாச்சல், ஆசிரியர் நகர், அச்சமங்கலம் ஆகிய பகுதிகளில் நண்பகல் முதல் சாரல் மழை பொழிந்து வருகிறது. இதனால் ஏற்பட்டுள்ள குளிர்ந்த சூழலால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

error: Content is protected !!