India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அம்மன் கோயில்களுக்கு மூத்த குடிமக்களை இலவச ஆன்மிக சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை செயல்படுத்தி வருகிறது. ஆடி மாதம் அழைத்துச் செல்லப்படும் இந்த சுற்றுலா செல்ல விரும்புவோர் விண்ணப்பிக்க இன்று (ஜூலை 17) கடைசி நாளாகும். இந்து மதத்தை பின்பற்றும் 60 முதல் 70 வயது கொண்ட முதியோர் இத்திட்டத்திற்கு HRCE இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலை பகுதியை அடுத்து புதூர் நாடு பகுதியில் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 200 பழங்குடி இன மாணவ மாணவியருக்கு நேற்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் நல்லதம்பி முன்னிலையில் மாணவியர் விடுதி திறந்து வைக்கப்பட்டது. திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தர்பகராஜ் உடன் இருந்தார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் பல்வேறு கிராமங்களில் இருக்கும் தூய்மைப் பணியாளர்களிடம் சிறிது நேரம் உரையாடினார். மேலும், தூய்மைப் பணியாளர்கள் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் முன்வைத்தனர். இந்த நிகழ்வில் அரசுத்துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
திருப்பத்தூர் அருகே புதூர் நாடு மலை கிராமத்தில் உள்ள அரசு ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியில் 300 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். அங்கு திடீர் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட கலெக்டர் தர்ப்பகராஜ் மாணவ மாணவிகளுக்கு சமைக்கும் சமையலறைக்கு சென்று சமைத்து வைக்கப்பட்டுள்ள உணவு நல்ல முறையில் சமைக்கப்பட்டுள்ளதா என சாப்பிட்டு தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஜவ்வாது மலை புதூர்நாடு ஊராட்சியில் 3 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட மாணவர் மாணவியர் விடுதி திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் தர்பக ராஜா, திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி ஆகியோர் பங்கேற்று மாணவர் விடுதியை தொடங்கி வைத்தனர். இந்நிகழ்வில் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இந்திய அஞ்சல் துறையில் 44228 GDS பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். 18 வயது முதல் 40 வயதுக்கட்பட்ட 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் முதல் இதற்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் ஆக.5ஆம் தேதிக்குள் <
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் வட்டம், கரும்பூர் பகுதியில் அமைந்துள்ள அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பக ராஜ் நேற்று ஆய்வு செய்தார். அப்போது மாணவர்கள் பயன்படுத்தும் கழிப்பறையை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். மேலும் முறையாக நீர் வருகிறதா என்பதையும் குழாய்களை திறந்து பார்த்து நேரடியாக ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது விடுதி காப்பாளர் மற்றும் மாணவர்கள் இருந்தனர்.
ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரிமலை ஊராட்சியில் பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று திருப்பத்தூர் மாவட்ட திமுக செயலாளரும், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான க.தேவராஜி நேற்று கொட்டும் மழையிலும் நேரில் சென்று பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது ஜோலார்பேட்டை
வட்டார வளர்ச்சி அலுவலர் துரை, பொறியாளர் ரங்கசாமி,
ஒன்றிய கவுன்சிலர் லட்சுமி செந்தில் குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் குறைதீர்வு நாள் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாளில் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் தர்மராஜ் நேற்று(ஜூலை 15). இந்த நிகழ்வில் அரசுத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை பத்து மணி முதல் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் நடைபெற்ற திங்கள் தின குறை தீர்ப்பு கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் இருந்தும் பல்வேறு வகையான கோரிக்கைகள் அடங்கிய 346 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sorry, no posts matched your criteria.