India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலை அருகே தனியார் பேருந்தில் கடத்தப்பட்ட 7 கிலோ சந்தனக் கட்டைகளை போலீசார் இன்று (ஜூலை 21) பறிமுதல் செய்தனர். தனியார் பேருந்தில் சந்தனக்கட்டையை கடத்திச் சென்ற விஷ்ணு என்பவரை போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று இரவு 7 மணி வரை மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால் கடந்த சில வாரங்களாக பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து, நீர் நிலைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் ஜூன் 1ஆம் தேதி முதல் இன்று வரை அதிகபட்சமாக 20.8 செ.மீ மழை பெய்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம், தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்பவர்கள் பற்றி மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு ரகசிய தகவல் அளிக்க 24 மணி நேரமும் ஹெல்ப்லைன் மூலம் 91599 59919 என்ற எண்ணிற்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்.இந்த தகவல் கொடுப்பவர்கள் குறித்த விவரங்கள் ரகசியம் காக்கப்படும் என மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் இன்று (ஜூலை 20) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் 2 துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், 3 ஆய்வாளர்கள், 5 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 73 காவலர்கள் ஆறு குழுக்களாக பிரிந்து அனைத்து பகுதிகளிலும் தீவிர மதுவிலக்கு வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஜூலை 25ஆம் தேதி காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் நடைபெறவுள்ளது. இதில் திருப்பத்தூர் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்து கொள்ளுமாறு ஆட்சியர் இன்று கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழகத்தில் பல இடங்களில் காவல்துறை அதிகாரிகள் இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, திருப்பத்தூர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முத்துமாணிக்கம் போலீஸ் அகாடமிக்கு மாற்றம் செய்து சட்டம் ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவால் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
திருப்பத்தூர் கலெக்டர் தர்பகராஜ் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், 10ம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து 5 ஆண்டுகள் ஆகியும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் அரசு மாதாந்திர உதவித்தொகை பெற இணையதளத்தில் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்து ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் மேலும் விவரத்திற்கு ஆட்சியர் வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்புகொள்ள அறிவுறுத்தினார்.
இன்று மாலை 6.10 மணி முதல் பௌர்ணமி தொடங்க உள்ளதால் திருவண்ணாமலை கிரிவலம் பாதைக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகைபுரிவார்கள் . இந்நிலையில் அவர்களின் வசதிக்கேற்ப திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் பொதுமக்கள் சிரமம் இன்றி பயணம் செய்ய சிறப்பு பேருந்துகளை திருப்பத்தூர் போக்குவரத்துத் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்ற எம்பி கதிர் ஆனந்த் மக்களை சந்தித்து நன்றி தெரிவித்துவருகிறார். அந்த வகையில் திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் பகுதியில் நேற்று மாலை ஆம்பூர் எம்எல்ஏ வில்வநான் தலைமையில் மேல் குப்பம், வடச்சேரி, பாப்பனப்பள்ளி, சின்னபள்ளிகுப்பம், வடகரை, வீராங்குப்பம் ஆகிய பகுதிகளில் வாக்காளர்களையும்,தொண்டர்களையும், நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.