Tirupathur

News July 26, 2024

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

image

திருப்பத்தூர் ஸ்டேட் வங்கி அருகே மின்கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த நிகழ்விற்கு திருப்பத்தூர் நகர செயலாளர் எம்.காசி தலைமை தாங்கி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். ஆர்பாட்டத்தில், மின்கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். மாதம் ஒருமுறை மின்கணக்கீடு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

News July 26, 2024

திருப்பத்தூரில் படைவீரர் குறை தீர்க்கும் முகாம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் படை வீரர் குறை தீர்க்கும் முகாம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் இன்று(ஜூலை 26) நடைபெற்றது. இதில் முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர்களிடமிருந்து
மனுக்கள் பெறப்பட்டு அதன் மீது உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் அரசு துறை அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

News July 26, 2024

மக்களுடன் முதல்வா் திட்ட முகாமில் 944 மனுக்கள் 

image

திருப்பத்தூா் வட்டாரத்துக்குட்பட்ட குரிசிலாபட்டு கிராமத்திலும், கந்திலி வட்டாரத்துக்குட்பட்ட கெஜல்நாயக்கன்பட்டியிலும் முகாம்கள் நடத்தப்பட்டன. இதில் எம்எல்ஏ மற்றும் ஆட்சியர் பங்கேற்று, அப்பகுதி மக்கள் அரசு சேவைகளைப் பெறுவதற்கு ஏதுவாக முகாம்களில் செயலி மூலம் பதிவு செய்ததின் வாயிலாக 215 மனுக்களும் பிற துறைகளின் கோரிக்கைகளாக 729 மனுக்கள் என மொத்தம் 944 மனுக்கள் பெறப்பட்டன.

News July 26, 2024

ஒன்றிய அரசை கண்டித்து திமுக சார்பில்  ஆர்ப்பாட்டம்

image

2024-2025ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டிற்கான நிதியை சரியாக ஒதுக்காத பாஜக அரசை கண்டித்து திமுக சார்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.  திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் காலை 9 மணியளவில் திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான
க.தேவராஜி கலந்துகொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து கண்டன உரை நிகழ்த்த உள்ளார்.

News July 26, 2024

சிசிடிவி கேமரா பொருத்த காவல்துறை அறிவுரை

image

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் அறிவுறுத்தலின் பெயரில், மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் இன்று செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது. குற்றங்களை தவிர்க்க மூன்றாவது கண் எனும் சிசிடிவி கேமராவை தங்கள் வீடுகளில் பொதுமக்கள் பொருத்த மாவட்ட காவல்துறை சார்பில் இன்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இதன் மூலம் குற்றவாளிகளை எளிதில் அடையாளம் காணலாம் எனவும் அதில் தெரிவித்துள்ளது.

News July 25, 2024

திருப்பத்தூரில் இலவ சித்த மருத்துவ முகாம்

image

திருப்பத்தூர் புதுப்பேட்டை சி.கே. ஆசிரமம் பகுதியில் அமைந்துள்ள மகாத்மா காந்தி முதியோர் இல்லத்தில் ஆண்டியப்பனூர் அரசு சித்த மருத்துவப் பிரிவு மற்றும் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி சார்பில் நாளை காலை 9.30. மணி அளவில் இலவச சித்த மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. பொதுமக்கள் இந்த முகாமை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

News July 25, 2024

முன்னாள் படைவீரர் 5 பேருக்கு உதவி

image

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று முன்னாள் படைவீரர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் படைவீரர் நல தொகுப்பு நிதியின் கீழ்
முன்னாள் படைவீரர் 05 நபர்களுக்கு ரூ.1,70,000
மதிப்பிலான உயர் கல்வி பயில்வதற்கான உதவித்தொகை மற்றும் திருமணநிதி
உதவித்தொகை ஆகிய நலத்திட்ட உதவிகளை கலெக்டர் க.தர்ப்பகராஜ் வழங்கினார். இதில் 50 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.

News July 25, 2024

இரவு 7 மணிக்கு வரை லேசான மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. இந்த வகையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

News July 25, 2024

விவசாய குறை தீர்வு கூட்டத்திற்கு அழைப்பு

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் நாளை காலை 10.30 மணிக்கு கலெக்டர் தலைமையில் நடக்கிறது. கூட்டத்தில் அனைத்து துறை மாவட்ட அலுவலர்களும்,  விவசாயிகளின் குறைகளை நேரடியாக கேட்டறிந்து தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே கலெக்டர் விவசாயிகள் அனைவரும் கலந்து கொள்ள மாவட்ட தர்பகராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.

News July 24, 2024

மது பாட்டில் விற்பனை எஸ்பி நேரடி ஆய்வு

image

வாணியம்பாடி அடுத்த வெள்ளைகுட்டை கிராமத்தில் சட்டவிரோதமாக மது பாட்டில் விற்பதாக வந்த தகவலின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் ஆகியோர் இன்று நேரடியாக திடீரென ஆய்வு செய்தனர். இந்த நிகழ்வால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

error: Content is protected !!