India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆய்வுப்பணிக்காக வந்திருந்த சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் ஆர். சுப்பிரமணி , பட்டு தேவானந்த் ஆகியோரிடம் வாணியம்பாடி பார் அசோசிகேஷன் சார்பில் வாணியம்பாடியில் நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்று அதன் செயலாளர் பூபதி, முன்னாள் தலைவர் சம்பத், பொருளாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட நிர்வாகிகள், வழக்கறிஞர்கள் சார்பில் கோரிக்கை மனுவை அளித்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பெருமாபட்டு ஊராட்சிக்கு உட்பட்ட ஜலகாம்பாறை அருள்மிகு ஸ்ரீ முருகன் ஆலயத்தில் ஆடிக் கிருத்திகை திருவிழா இன்று வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விழாவில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். உடன் விழா குழுவினர் மற்றும் பொதுமக்கள் உள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்ட திருப்பத்தூர் கிராமிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜானுக்கு கிடைத்தது. இந்த ரகசிய தகவலின் அடிப்படையில் திருப்பத்தூர் கிராமிய காவல் நிலைய போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு கதிரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பிரவீன் என்பவரை 1 கிலோ கஞ்சாவுடன் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியை சேர்ந்த உமா என்பவர் 2019 ஆண்டு பழங்குடியினர் சாதி சான்றிதழ் கோரிய நிலையில் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. எனவே இது குறித்து வழக்கு தொடர்ந்த அவருக்கு அப்போதைய ஆட்சியர் பரிசீலிக்க வேண்டும் என்று ஐகோர்ட் கூறியிருந்தது. ஆனால் அவர் நடவடிக்கை எடுக்காததால் தற்போதைய ஆட்சியர் ஆக 22ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இன்று மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் மற்றும் குடியிருப்பு கட்டிடம் கட்டுவதற்காக இடத்தை தேர்வு செய்யும் பணியினை சென்னை உயர்நீதிமன்ற நீதி அரசர் சுப்ரமணியன் பட்டு தேவானந்தா நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்தனர். உடன் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி மீனா குமாரி மற்றும் பலர் உள்ளனர்.
ஜோலார்பேட்டை, தாமலேரிமுத்தூர் ஏரியில் அதே பகுதியை சேர்ந்த குமார், சுரேஷ், சிங்காரவேலன், முரளி & கட்டேரி பகுதியை சேர்ந்த பிரபுவுடன் மின் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பிரபுவின் அண்ணன் சத்தியமூர்த்தியை நேற்று நேரில் அழைத்து ஊர் முக்கியஸ்தர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது எதிர் தரப்பினர் சத்தியமூர்த்தியை தாக்கியதில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் நேற்று(ஜூலை 26) வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நடத்தப்பட்டு, விவசாயிகளிடமிருந்து மனுக்கள் பெறப்பட்ட நிகழ்வுகளில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் இருந்து விவசாயிகள் கலந்து கொண்டனர்.
திருப்பத்தூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட புதூர் நாடு, சேம்பரை ஆகிய மலை கிராமங்கள் மற்றும் தமிழக ஆந்திர எல்லை பகுதியில் உள்ள மலை கிராமங்களில் சாராயம் காய்ச்சுதல், விற்பனை செய்தல், கடத்தல் ஆகியவற்றை முற்றிலுமாக தடுக்க ஒரு சப்- இன்ஸ்பெக்டர் மற்றும் 5 போலீசார் அடங்கிய குழு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் மலை கிராமங்களில் முகாமிட்டுள்ளதாக மாவட்ட எஸ்பி தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் செயின்ட் சார்லஸ் பள்ளியில் வருங்கால வைப்பு நிதி சிறப்பு முகாம் ஜூலை 29 காலை 9 முதல் மாலை 5.45 மணி வரை நடைபெற உள்ளது என வேலூர் மண்டல வருங்கால வைப்புநிதி கமிஷனர் ரித்தேஷ் பக்வா தெரிவித்துள்ளார். இதனை வருங்கால வைப்புநிதி உறுப்பினர்கள், தொழிலதிபர்கள், ஓய்வூதியம் பெறுவோர் ஆகியோரின் குறைதீர் முகாம் மற்றும் சேவை வழங்கும் தளமாகவும், தகவல் பரிமாற்ற அமைப்பாகவும் செயல்படுத்த அறிவுறுத்தி உள்ளது.
திருப்பத்தூர் ஸ்டேட் வங்கி அருகே மின்கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த நிகழ்விற்கு திருப்பத்தூர் நகர செயலாளர் எம்.காசி தலைமை தாங்கி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். ஆர்பாட்டத்தில், மின்கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். மாதம் ஒருமுறை மின்கணக்கீடு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
Sorry, no posts matched your criteria.