Tirupathur

News August 3, 2024

45 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்

image

வேலூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 45 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து டிஐஜி சரோஜ்குமார் தாகூர் இன்று (ஆகஸ்ட் 3) உத்தரவிட்டுள்ளார். பணியிட மாற்றம் பெற்ற காவல் ஆய்வாளர்கள் விரைவில் அவர்களுக்கு மாற்றப்பட்ட காவல் நிலையத்தில் பொறுப்பு ஏற்றுக் கொள்வார்கள் என தெரிவித்துள்ளார்.

News August 3, 2024

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை அறிவுறுத்தல்

image

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் அவர்களின் அறிவுறுத்தலின் பெயரில் இன்று காலை 11.15 மணி அளவில் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பொதுமக்கள் வாகனங்களில் செல்லும் போது பாதுகாப்பு உபகரணங்கள் அணிவதன் மூலம் பல விபத்துக்களை தவிர்க்கலாம். மேலும், வாகனங்களில் செல்லும் போது சீட் பெல்ட் அணியவும், ஹெல்மெட் அணியவும் மாவட்ட காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.

News August 3, 2024

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை தகவல்

image

திருப்பத்தூர் எஸ்பி அலுவலகம் சார்பில் கடந்த மாதம் ‘பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ எனும் திட்டத்தின் கீழ் சைபர் குற்றங்களிலிருந்து பெண் குழந்தைகளை காக்கும் வகையில் 4 நிமிட விழிப்புணர்வு குறும்பட போட்டிகள் அறிவிக்கப்பட்டது. ‘அச்சம் தவிர் உன் பயமே அவன் ஆயுதம்’, ‘லைக் கமெண்ட் ஷேர்’ ஆகிய 3 படங்கள் காவல்துறை சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

News August 3, 2024

திருப்பத்தூரில் ஆயுதப்படை மைதானத்தில் நூலகம்

image

திருப்பத்தூர் அடுத்த ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் கிராமத்தில் ஆயுதப்படை மைதானம் அமைந்துள்ளது. மேலும் இங்குள்ள ஆயுதப்படை காவலர்கள் மற்றும் சட்ட ஒழுங்கு காவலர்கள், மற்றும் காவலர்களின் குழந்தைகள் உள்ளிட்டோர் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதவும் அதேபோல் உதவி ஆய்வாளர் தேர்வு எழுத பயன்படும் வகையில் இன்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் புதிய கிளை நூலகத்தை திறந்து வைத்தார்.

News August 3, 2024

திருப்பத்தூரிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

 தமிழ்நாடு முழுவதும் இன்று ஆடிப்பெருக்கு திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் திருப்பத்தூர் அடுத்த பசலி குட்டை முருகர் கோவிலில் ஆடிப்பெருக்கு திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இங்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது பக்தர்கள் வசதிக்கேற்ப திருப்பத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

News August 3, 2024

ஜோலார்பேட்டை அருகே விவசாயிகளுக்கு பயிற்சி

image

ஜோலார்பேட்டை அடுத்த மூக்கனூரில் வட்டார வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கு அட்மா திட்டத்தின் கீழ் ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பது குறித்தான பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் கண்ணகி தலைமை தாங்கி ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து வேளாண்மை குறித்து விளக்கினார். அதைத் தொடர்ந்து வேர்கடலை நிலங்களுக்கு ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பது குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

News August 2, 2024

திருப்பத்தூரில் 38 கிராம விழிப்புணர்வு

image

திருப்பத்தூரில் உள்ள மலை கிராமங்களில் சுமார் 38 கிராம விழிப்புணர்வு குழு அமைக்கப்பட்டது. அக்குழுவினர் அப்பகுதியில் முகாமிட்டு மது விற்பனை மற்றும் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து அவர்கள் மீது சட்ட பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள திருப்பத்தூர் டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையில் இயங்கி வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் தகவல் தெரிவித்தார்.

News August 2, 2024

காட்பாடியில் ஓடும் ரயிலில் இறங்கிய கல்லூரி மாணவன் பலி

image

கேரளா மாநிலம் எர்ணாகுளம் சேர்ந்தவர் ஆகாஷ். இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் 4 ஆம் ஆண்டு படித்து வருகிறார். இவரது சகோதரியின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க சென்னையில் இருந்து காட்பாடி வரை செல்லும் மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்தார். அவர் தூக்கத்தில் இருந்த போது ரயில் காட்பாடி கடந்தது. இதனால் ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்ற போது தவறி கீழே விழுந்து பலியானார்.

News August 2, 2024

திருப்பத்தூர் காவல் துறை அறிவுரை

image

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் அவர்களின் அறிவுறுத்தலின் மாவட்ட காவல்துறை இன்று காலை 11 மணி அளவில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் பொதுமக்கள் ஒரே கடவுச்சொல்லை பல கணக்குகளுக்கு பயன்படுத்த வேண்டாம். ஒரு கணக்கு சமரசம் செய்யப்பட்டால், மற்ற அனைத்தும் கணக்குகள் ஆபத்தாக இருக்கலாம். எனவே ஒரே கடவுச்சொல்லை பயன்படுத்தாதீர் என மாவட்ட காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.

News August 2, 2024

திருப்பத்தூரில் பாஸ்போர்ட் அலுவலகம் திறக்க எம்பி கோரிக்கை

image

திருவண்ணாமலை எம்பி அண்ணாதுரை நேற்று மக்களவையில் கேள்வி நேரத்தின் போது விதி எண் 377ன் கீழ் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றான திருப்பத்தூர் மாவட்டத்தின் தலைநகரமாகவும் வியாபாரிகளை அதிகம் கொண்டுள்ளதாகவும் உள்ளது. மேலும், திருப்பத்தூரில் இருந்து தொழில் ரீதியாக அடிக்கடி வெளிநாடு பயணம் மேற்கொள்கின்றனர். எனவே திருப்பத்தூரில் பாஸ்போர்ட் அலுவலகம் திறக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். 

error: Content is protected !!