India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட கண்காணிப்பு அலுவலர் விஜயராஜ் குமார் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ் மாவட்ட திட்ட முகம் இயக்குனர் உமா மகேஸ்வரி அனைத்து துறை அலுவலர்கள் முன்னிலையில் மாவட்டத்தில் செயல்பட்ட வரும் அரசு திட்ட பணிகள் குறித்தும் நிலுவையில் உள்ள திட்ட பணிகள் குறித்தும் ஆலோசனை மேற்கொண்டார்கள்.
திருப்பத்தூரில் அமைந்துள்ள அரசு ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதியில் இன்று மாலை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் விஜயராஜ் குமார் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ் விடுதியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு தரம் குறித்தும் மாணவர்களின் கல்வி குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர். விடுதியில் உள்ள மாணவர்களின் குறைகளை கேட்டு அறிந்தார்கள். உடன் துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பலர் உள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்ட காவல் துறையின் சார்பில் திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் நக்சலைட் தாக்குதலில் உயிரிழந்த காவல்துறையினருக்கு 44-வது வீரவணக்க நாள் (06.08.2024) கடைபிடிக்கப்பட்டு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் நாள் இன்று நடைபெற்றது. இதில் காவல்துறை சார்பில் வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் தர்ப்பகராஜ் பெயரில் போலியான இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கி அதனை தவறுதலாக பயன்படுத்துவதாக தொடர்ந்து புகார்கள் வந்தது அதனை அடுத்து புகாரின் பேரில் இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கிய நபர் மீது நடவடிக்கைகள் எடுக்க கோரி திருப்பத்தூர் மாவட்ட போலீசாருக்கு கலெக்டர் தர்ப்பகராஜ் உத்தரவிட்டார்.
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 6-ம் தேதி நக்சலைட்டுகளால் படுகொலை செய்யப்பட்ட காவல் துறை அதிகாரிகளுக்கு
திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் ‘வீரவணக்கம் நாள்’ கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிகழ்வில் இன்று ஜோலார்பேட்டை ஒன்றிய செயலாளர் ஒன்றிய கவுன்சிலருமான உமா கண்ரங்கம் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளர் இரா. சுபாஷ்சந்திரபோஸ் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகளுடன் ராமநாயக்கன் பேட்டையில் நடைபெற்ற சாதிவெறி தாக்குதலை கண்டித்து இன்று புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சாதி வெறி தாக்குதல்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கத்தாரி ஊராட்சியில் மத்திய அரசின் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் டெல்லி சிறப்பு குழுவினர் சம்பந்தப்பட்ட ஊராட்சியில் முறையாக குடிநீர் பொதுமக்களுக்கு கிடைக்கிறதா எனும் நோக்கில் வீடு வீடாக ஆய்வு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து சுகாதார வளாகம், அங்கன்வாடி கட்டிடம்,குடிநீர் தொட்டி உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்தனர். உடன் ஊராட்சித் தலைவர் அனிதா மோகன் இருந்தார்.
சென்னையில் இருந்து மைசூர் செல்லும் வந்தே பாரத் ரயில் இன்று வாணியம்பாடி ரெயில் நிலையம் அருகே செல்லும் போது சார்ஜ் போட்டிருந்த குஷ்நாத்கர் என்பவரின் செல்போன் திடீரென வெடித்தது. இதனால் ரயிலில் அதிக புகை உருவாகியது. எனவே ரயிலானது வாணியம்பாடி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. மேலும், அங்கிருந்து அரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. இச்சம்பவம் ரயிலில் இருப்போரை பதற்றமடையச் செய்தது.
திருப்பத்தூா் மாவட்டம் நாட்றம்பள்ளியில் இருந்து நாயனசெருவு வழியாக தகரகுப்பம் வரை ஆந்திர மாநில எல்லையை இணைக்கும் இணைப்பு சாலையானது ரூ.10 கோடியில் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோட்டப் பொறியாளா் முரளி, உதவி செயற்பொறியாளா் சம்பத்குமார் மேற்பாா்வையில் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெறுகின்றன. இப்பணிகளை இளநிலை பொறியாளா் பாபுராஜ் ஆய்வு செய்தாா்.
திருப்பத்தூரில் குறைதீர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஆட்சியர் திடீரென தனது பெயரில் ஒரு புகாரை பதிவு செய்யுமாறு கூறினார். அதில் தனது பெயரில் போலியான இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கப்பட்டு அதில் பல பதிவுகள் பகிரப்பட்டு வருகிறது. மேலும் தன் பெயரில் போலியான ஆவணத்தை வைத்திருக்கும் அடையாளம் தெரியாத நபர் குறித்து, காவல் துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு அளித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.