Tirupathur

News April 5, 2024

திருப்பத்தூரில் அதிகபட்சமாக 104 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை

image

தமிழகத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் நேற்று வேலூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 103 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.திருப்பத்தூர் மாவட்டத்தில் 104 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது. இதனால் தற்போது வேலூர் மாவட்டத்தை விட திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக வெப்ப நிலை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

News April 5, 2024

ரயில் மோதியதில் ஒருவர் பலி

image

குடியாத்தம் அடுத்த பரசுராம்பட்டியை சேர்ந்தவர் வினோத் (34). இவர் அப்பகுதியில் ஆட்டோ டிரைவராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று வளத்தூர் குடியாத்தம் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது அவ்வழியாக வந்த ரயில் மோதியதில் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் வழக்க பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 4, 2024

மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு

image

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் பயன்படுத்தப் பட்டு வரும் பேஸ்புக் வலைப்பதிவில் இன்று வெளியிட்டுள்ள விழிப்புணர்வு அறிவிப்பில், சமூக வலைத்தளங்களில் பொதுமக்கள் தங்கள் இருப்பிடத்தை பதிவிடுவதன் மூலம் மோசடி செய்பவர்கள் தங்களிடம் மோசடியில் ஈடுபட வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

News April 4, 2024

திருப்பத்தூர்: ஊரை விட்டு ஒதுக்கி வைத்த கொடூரம்

image

வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பகுதியில் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏவிடம் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால், பேரூராட்சி பகுதியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பெண்ணின் குடும்பத்தாரை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததால் விரக்தி அடைந்த குடும்பத்தினர் வாணியம்பாடி காவல் நிலையத்தில் நிர்வாகிகள் மீது புகார் அளித்துள்ளனர்.

News April 4, 2024

திருப்பத்தூரில் மாரத்தான் போட்டி

image

100% வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 3 கி.மீ மாரத்தான் போட்டி வரும் ஏப்.6ஆம் தேதி நடைபெறவுள்ளது. மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெறும் இந்த போட்டியை ஆட்சியர் தொடங்கி வைக்கவுள்ளார். இந்த மாரத்தான் போட்டியில் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவரும் கலந்து கொள்ள மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

News April 4, 2024

பள்ளி பேருந்தில் பாலியல் தொல்லை: வழிகாட்டு நெறிமுறை

image

தனியார் பள்ளி பேருந்தில் மாணவர்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லையை தடுக்க வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதில், பள்ளியில் ‘மாணவர் மனசு’ பெட்டி வைக்கப்பட்டு அதில் பெறப்படும் குறைகளை 24 மணி நேரத்தில் தீர்க்க வேண்டும். ஓட்டுநருக்கு போக்சோ சட்டம் குறித்து பயிற்சி வழங்க வேண்டும். ஓட்டுநர், உதவியாளர்கள் குறித்த விவரங்களை EMIS Portalஇல் பதிவேற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

News April 4, 2024

திருப்பத்தூரில் வருமானம் துறையினர் சோதனை

image

திருப்பத்தூர் பகுதியில் சுமி ஸ்டுடியோ நடத்தி வரும் நவீன் குமார் என்பவரின் வீட்டில் வருமான துறையினர் நேற்று (ஏப்.3)  நள்ளிரவு முதல் தீவிர சோதனை ஈடுபட்டு வருகின்றனர். அவர் வீட்டில் கட்டு கட்டாகபணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக வருமானம் துறையினர் தகவல் தெரிவித்தனர். இதனால் திருப்பத்தூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News April 4, 2024

திருப்பத்தூர் அருகே அதிர்ச்சி சம்பவம்

image

ஆம்பூர் அடுத்த கைலாச கிரி மலைப்பகுதியில் இருந்து இளைஞர் ஒருவர் திடீரென  தவறி விழுந்து தலையில் அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே பலிாயனார். நேற்று நடந்த இச்சம்பம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த உம்ராபாத் போலீசார் இளைஞரின் உடலை கைப்பற்றி இறந்தவர் யார், எந்த ஊர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 3, 2024

ஆம்பூர்: இப்தார் நோன்பு திறப்பு

image

ஆம்பூர் தனியார் திருமண மண்டபத்தில் இன்று மாலை தமிழ்நாடு வணிகர் சங்க சார்பில் ரமலான் இப்தார் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்,  வாணியம்பாடி முன்னாள் எம்எல்ஏ அப்துல் பாசித், சமூக ஆர்வலர்கள்,  ஆம்பூர் பகுதியை சேர்ந்த வர்த்தக நிறுவன தலைவர்கள், அரசியல் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News April 3, 2024

தேமுதிக சார்பில் அன்னதானம் 

image

ஜோலார்பேட்டை தேமுதிக சார்பில் மாவட்ட கழக பொருளாளர் ஐ.ஆஞ்சி தனது சொந்த செலவில் சென்னை தேமுதிக அலுவலகத்தில் சுமார் 1000 பேருக்கு அன்னதானம் மற்றும் குடிநீர் பாட்டில்களை பொதுமக்களுக்கு வழங்கினார். அப்போது, விஜயகாந்தின் சமாதியை பார்க்க வரும் மக்களுக்கு இலவசமாக உணவும் வழங்கப்பட்டது. உடன் தேமுதிக பொருளாளர் க.மகாதேவன், நகர கழக செயலாளர் எழினி ஆகியோர் பங்கேற்றனர்.