India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஜனதாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரித்திகா. இவர் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தர்ப்பகராஜிடம் வயநாடு நிலச்சரிவிற்கு தான் சேர்த்து வைத்திருந்த உண்டியல் பணத்தை ஒப்படைத்தார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று ஆம்பூர், வாணியம்பாடி, நாட்றம்பள்ளி, ஜோலார்பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தத்தால், வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். இன்று மழை பெய்யுமா? பெய்யாதா?
திருப்பத்தூர் மாவட்டத்திற்கு முதன்முறையாக பெண் எஸ்.பி ஸ்ரேயா குப்தா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கு முன் இருந்த எஸ்.பி ஆல்பர்ட் ஜான் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பியாக இடமாற்றம் செய்யப்பட்டார். மேலும் மாவட்டத்தின் புதிய எஸ்.பியாக பொறுப்பு ஏற்றுக்கொண்ட இவருக்கு திருப்பத்தூர் மாவட்ட போலீசார், அரசியல் பிரமுகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஆம்பூர் அருகே சோமலாபுரம் வீரர் கோயில் தேசிய நெடுஞ்சாலையில் இன்று ஆலங்காயாம் பூங்குளம் பகுதியைச் சேர்ந்த 15 பேர் வெட்டுவானம் எல்லையம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வேன் மூலம் சென்றுள்ளனர். அப்போது சாலையில் வந்த பைக் மீது மோதி வேன் 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததில் 10 பேர் படுகாயம் அடைந்தனர். செல்வராணி என்பவர் நிகழ்விடத்திலே உயிரிழந்தார். இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு விவரம்; நாட்டறம்பள்ளி பகுதியில் அதிகபட்சமாக 35 மி.மீ, குறைந்த பட்சமாக காவலூர் 2 மி.மீ மழையளவு பெய்தது. மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம்;காவலூரில் 2 மி.மீ, நாட்டறம்பள்ளியில் 35 மி.மீ, கேத்தாண்டப்பட்டியில் 6 மி.மீ, திருப்பத்தூரில் 8.40 மி.மீ மழை பெய்தது என திருப்பத்தூர் தாசில்தார் தெரிவித்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி பேரூராட்சியில், பழைய பேருந்து நிலையம் முதல் பழைய சங்கு ஒலிபெருக்கி வரை புதிய வணிக வளாகம் அமைக்க நேற்று தமிழ்நாடு நகர்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழக லிமிடெட் (TUDFICO) மேலாளர் முருகன் தலைமையில் திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சூரியகுமார் ஆய்வு நேற்று மேற்கொண்டார். உடன் அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தலைமை அஞ்சல் அலுவலகம் மற்றும் கோட்டத்தில் உள்ள அனைத்து துணை அஞ்சல் அலுவலகங்களில் தேசிய கொடி விற்கப்படுகிறது. இதனை தங்கள் வீடுகளின் அருகே உள்ள அலுவலகங்களில் வாங்கிக் கொள்ளலாம். மேலும் www.epostoffice.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம் என திருப்பத்தூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தளமாக விளங்கும் ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை பெய்த கனமழையின் காரணமாக அதிகப்படியான நீர் வருகின்றது. இதனால், சுற்றுலா பயணிகள் இன்று குளிக்க தடை விதிக்கப்படுவதாக வனத்துறை தெரிவித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மேலும், இத்தடை வரும் 14 ஆம் தேதி வரை தொடரும் எனவும் தகவல்.
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தலின் பெயரில், மாவட்ட காவல்துறை இன்று மதியம் 12 மணி அளவில் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், “பாதுகாப்பு என்பது ஒரு முதலீடு, அது செலவு அல்ல எனவும், உங்கள் தனிப்பட்ட மற்றும் நிதிக் கணக்குகளை ஆன்லைனில் பாதுகாக்க எப்போதும் பல காரணி அங்கீகாரத்தைப் பயன்படுத்தவும்” என மாவட்ட காவல்துறை அறிவுரை வழங்கி உள்ளது.
தமிழகத்தில் தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று தமிழகத்தின் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று முழுவதும் திருப்பத்தூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
Sorry, no posts matched your criteria.