Tirupathur

News April 12, 2024

சொந்த பணத்தை செலவழித்து தன்னந்தனியாக போராடுகிறேன்

image

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் நடைபெற்ற ரம்ஜான் சிறப்பு தொழுகையில் நடிகர் மன்சூர் அலிகான் கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டார். பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர் அனைத்து தரப்பு மக்களுக்கும் ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்து இஸ்லாமியர்களும் தன்னை ஆதரிப்பதாகவும் சொந்தக் காசை செலவழித்து தன்னந்தனியாக போராடி வருவதாகவும் தெரிவித்தார்.

News April 12, 2024

வாக்குப்பதிவு இயந்திரங்களில் பெயர், சின்னம் பொருத்தும் பணி நிறைவு

image

ஆம்பூர் சட்டப்பேரவை தொகுதி வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்பட உள்ள விவி பேட் இயந்திரத்தில் பெயர், சின்னம் பதிவேற்றம் செய்யும் பணி நேற்று நிறைவடைந்தது. பின்னர் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் அரை மூடி சீல் வைக்கப்பட்டது. இதில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பெலிக்ஸ் ராஜா, வருவாய்த்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்

News April 11, 2024

வாணியம்பாடி: முன்னாள் அமைச்சரின் வாகனம் சோதனை

image

வாணியம்பாடி அடுத்த தும்பேரி ஊராட்சியில் இன்று பிற்பகல் 2 மணியளவில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள சென்ற போது காரை நிறுத்தி மத்திய ரிசர்வ் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

News April 11, 2024

 குறைந்த வாடகை கட்டணத்தில் டிராக்டர்

image

திருப்பத்தூர் அருகே பேராம்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அலுவலகத்தில் இன்று அப்பகுதி விவசாயிகளுக்கு விவசாயம் செய்து கொள்ள குறைந்த வாடகை கட்டணத்தில் டிராக்டர் தரப்படுகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் இதனை பயன் படுத்தி கொள்ளுமாறு சங்கம் செயலாளர் ஆனந்தன் தகவல் தெரிவித்துள்ளார். ‌

News April 11, 2024

நாட்றம்பள்ளி: கட்சி பேனர் அகற்றம்

image

நாட்றம்பள்ளி அடுத்த மல்லகுண்டா ஊராட்சி பகுதியில் அமைந்துள்ள பாஜக கிழக்கு ஒன்றிய அலுவலகம் எதிரில் வைக்கப்பட்டிருந்த கட்சி பேனர் தேர்தல் விதிகளுக்கு உட்படாமல் வைக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து வருவாய்த்துறை அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் இன்று கட்சி பேனர் அகற்றப்பட்டது.

News April 11, 2024

ஜோலார்பேட்டையில்  பயணிகள் அவதி

image

தமிழக முழுவதும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனால் பொது மக்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல இன்று ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இறங்கி நீண்ட நேரம் ஜோலார்பேட்டை ஜங்ஷன் பஸ் நிறுத்தத்தில் காத்துக் கொண்டு இருந்தனர். போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் அவதியடைந்தனர். பண்டிகை நாட்களில் பஸ்கள் அதிகளவில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

News April 11, 2024

திருப்பத்தூர்: 5 அடி நீளம்… அலறிய தம்பதி

image

ஜோலார்பேட்டை பெரிய கம்மியம்பட்டை சேர்ந்த தேவேந்திரன் – ரம்யா தம்பதி. இவர்களது வீட்டிற்குள் விஷ பாம்பு ஒன்று நுழைந்தது. இதை கண்டு அலறியடித்து ஓடிய தம்பதி, உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.  தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த  முருகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சுமார் 5 அடி நீளமுள்ள நாகப்பாம்பை உயிருடன் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

News April 10, 2024

வாணியம்பாடி: தீயில் கருகி ஆடுகள் பலி

image

வாணியம்பாடி அடுத்த திம்மாம் பேட்டையை சேர்ந்தவர் நாகராஜ். தான் வளர்த்து வரும் ஆடுகளை இன்று மாலை தொழுவத்தில் நாகராஜ் அடைத்துள்ளார். அப்போது திடீரென ஏற்பட்ட மின்விபத்து காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று ஆடுகள் தீயில் கருகி உயிரிழந்தன. ஆடுகளை காப்பாற்ற சென்ற நாகராஜ் தீக்காயம் ஏற்பட்டு  கிருஷ்ணகிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

News April 10, 2024

திருப்பத்தூர்: 107.24 செல்சியஸ் வெப்பம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் மற்றும் வயதானவர்கள் வீட்டுக்குள்ளே முடங்கினர். இந்நிலையில், திருப்பத்தூரில் இன்று அதிகபட்சமாக 107.24 செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகியுள்ளது. குறைந்த பட்சமாக 78.44 செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

News April 10, 2024

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விழிப்புணர்வு

image

கந்திலி ஒன்றியம் பள்ளத்தூர் பகுதியில் அமைந்துள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்களிடையே 100% வாக்களிப்பது குறித்த உறுதி மொழி மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் ஏற்கப்பட்டது. மேலும் தேர்தல் குறித்த விழிப்புணர்வு ஆடைகள் அணிந்து கைப்பந்து போட்டியினை தொடங்கி வைத்து அவர்களுடன் இணைந்து போட்டியில் பங்கேற்றார்.