Tirunelveli

News January 25, 2025

அடுத்த நான்கு தின கிளைமேட் விவரம் அறிவிப்பு

image

நெல்லை மாவட்டத்தில் நாளை முதல் அடுத்த நான்கு தினங்களுக்கு மழைக்கான வாய்ப்பு இல்லை. தமிழக அளவில் இதே நிலை நீடிக்க வாய்ப்பு உள்ளது என நெல்லை வானிலை ஆய்வாளர் ராஜா கணித்து தகவல் பதிவு செய்துள்ளார் மேலும்தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் புதிய காற்று சுழற்சி இன்று உருவாகியுள்ளது என தெரிவித்துள்ளார் .

News January 25, 2025

வள்ளியூரில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்

image

நெல்லை மாவட்டம் வள்ளியூர் டிப்போ அருகில் நாளை மறுநாள்(ஜனவரி 27) காலை 10 மணி அளவில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் பிளஸ் டூ, டிப்ளமோ, டிகிரி படித்தவர்களும் வேலை தேடுபவர்களும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு இன்று கேட்டுக்கொள்ளப்பட்டது. மேலும் விவரங்களுக்கு 87548 10357 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுப்பட்டுள்ளது.

News January 24, 2025

கொள்ளையன் வீட்டில் பிடிபட்ட நகைகள்

image

கர்நாடக மாநிலம் மங்களூரில் வங்கி கொள்ளை வழக்கில் ஈடுபட்ட திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த முருகாண்டி,ஜோஸ்வா ஆகிய இருவர் கடந்த 21ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இன்று நெல்லை மாவட்டம் பத்மநேரியில் உள்ள முருகாண்டி வீட்டில் 18 கிலோ நகையை மீட்டுள்ளனர். மேலும் சோதனை நடைபெற்று வருகிறது.

News January 24, 2025

தாயின் உடலை சைக்கிளில் 15 கிமீ கொண்டு சென்ற மகன் 

image

மூன்றடைப்பு அருகே மீனவன்குளத்தை சேர்ந்த  சிவகாமியம்மாள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று சிவகாமியை காணவில்லை என மருத்துவமனை அளித்த புகாரின் பேரில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அதில் சிவகாமியின் மகன் பாலன் இறந்த நிலையில் சிவகாமியை சைக்கிளில் அமரவைத்து கயிறு கட்டி 15 கிமீ கொண்டு சென்றுள்ளார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.  

News January 24, 2025

செல்போன்களை மீட்டுக் கொடுத்த நெல்லை போலீசார் 

image

நெல்லை மாவட்டத்தில் செல்போன்கள் தொலைந்து போனதாக பெறப்பட்ட புகார்களின் படி 104 செல்போன்கள் கைப்பற்றப்பட்டு அவற்றை இன்று (ஜன-24) போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் உரிய நபர்களிடம் ஒப்படைத்தார் இதன் மதிப்பு 17 லட்சத்தி 13 ஆயிரத்து 896 ஆகும். இந்த நிகழ்ச்சியில் சைபர் க்ரைம் கூடுதல் கண்காணிப்பாளர் முருகன் காவல் ஆய்வாளர் ரமா மற்றும் காவல்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

News January 24, 2025

வீராங்கனைகள் மீது தாக்குதல்; நெல்லை முபாரக் கண்டனம்

image

பல்கலைக்கழகங்களுக்கு இடையான கபடி போட்டி பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பீகார் அணிக்கும், தமிழக அணிக்கும் இடையே நடந்த போட்டியின் போது ஏற்பட்ட பிரச்சனையில் நடுவர் தமிழக வீராங்கனைகளை தாக்கியதாக கூறப்படுகிறது. மேலப்பாளையத்தை சேர்ந்த எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கண்டனத்தை பதிவு செய்தார்.

News January 24, 2025

நெல்லை மாவட்ட எஸ்பி கடும் எச்சரிக்கை

image

வீரவநல்லூரில் சமூக வலைத்தளத்தில் இரு பிரிவினரிடையே பிரச்சினை தூண்டும் வகையில் வீடியோ பதிவிட்ட வீரவநல்லூர் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த முகமது யூசுப் என்ற நபரை வீரவநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து நேற்று கைது செய்தனர். சமூக வலைதளத்தில் பிரச்சனையை தூண்டும் வகையில் யார் வீடியோ வெளியிட்டாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி. சிலம்பரசன் எச்சரித்துள்ளார்.

News January 24, 2025

நெல்லை மாவட்ட எஸ்பி கடுப்பு எச்சரிக்கை

image

வீரவநல்லூரில் சமூக வலைத்தளத்தில் இரு பிரிவினரிடையே பிரச்சினை தூண்டும் வகையில் வீடியோ பதிவிட்ட வீரவநல்லூர் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த முகமது யூசுப் என்ற நபரை வீரவநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து நேற்று கைது செய்தனர். சமூக வலைதளத்தில் பிரச்சனையை தூண்டும் வகையில் யார் வீடியோ வெளியிட்டாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி. சிலம்பரசன் எச்சரித்துள்ளார்.

News January 24, 2025

திருநங்கைகள் விருது – ஆட்சியர் முக்கிய தகவல்

image

2025ம் ஆண்டுக்கான திருநங்கையர்களுக்கு முன்மாதிரி விருதானது ஏப்ரல்-15ம் தேதி அன்று வழங்கப்பட உள்ளதால் நெல்லை மாவட்டத்தில்  தகுதி பெற்ற திருநங்கைகள் தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் (awards.tn.gov.in) பிப் 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் கார்த்திகேயன் இன்று (ஜன -24) தெரிவித்துள்ளார்.

News January 24, 2025

விடுமுறையில் ஊருக்கு செல்ல தயாரா?

image

கன்னியாகுமரி சூப்பர்ஃபாஸ்ட் சிறப்பு ரயில், எண் 06053 இன்று 24-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 10.40 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு, நெல்லை வழியாக நாளை பகல் 12.00 மணிக்கு கன்னியாகுமரியை அடையும்.ரயில் எண் 06054 கன்னியாகுமரி – தாம்பரம் சூப்பர் 26 ஆம் தேதி இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு நெல்லை வழியாக சென்னை செல்லும் இந்த ரயிலில் ஏசி மற்றும் இரண்டாம் வகுப்பு இருக்கையில் இடம் உள்ளன.

error: Content is protected !!