Tirunelveli

News January 27, 2025

நெல்லையில் நாளை ஆளுநர் பங்கேற்கும் நிகழ்ச்சி விபரம்

image

நெல்லை, தருவை PSN கல்லூரியில் வெள்ளி விழா கொண்டாட்டம் மற்றும் விஞ்ஞானிகளுக்கு பாராட்டு விழா நாளை பிற்பகல் 1 மணிக்கு நடைபெறுகிறது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்ற உள்ளார். நிகழ்ச்சிக்கு கல்லூரி தலைவர் சுயம்பு தலைமை தாங்குகிறார். தொடர்ந்து வெள்ளிவிழா கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

News January 27, 2025

நெல்லை அஞ்சலகங்களில் ஆதார் சேவை

image

நெல்லை அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் முருகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:  திருநெல்வேலி பாளையங்கோட்டை அம்பாசமுத்திரம் தலைமை அஞ்சல் அலுவலகங்களில் மற்றும் துணை அஞ்சல் அலுவலகங்கள் உட்பட மாவட்டம் முழுவதும் குழந்தைகளுக்கு புதிய ஆதார் சேர்க்கை மற்றும் திருத்தம் சிறப்பு முகாம் நடைபெறுகிறது, பொதுமக்கள் டோக்கன் இல்லாமல் இந்த சிறப்பு ஏற்பாடுகளை பயன்படுத்திக் கொள்ளலாம். *ஷேர் செய்யுங்கள்

News January 27, 2025

மாவட்டத்தில் இன்று நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகள்

image

இன்று காலை 9 மணிக்கு அரசு மேல்நிலைப்பள்ளியில் இருந்து சூராணிக்கரை கோயில் வரை சாலையை அகலப்படுத்தி புதிய தார் சாலை அமைக்கும் பணி தொடக்க விழா சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடக்கிறது. நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று பகல் 10:30 மணிக்கு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. நெல்லையப்பர் கோவிலில் இன்று மாலை 6 மணிக்கு பத்திர தீபத் திருவிழா தொடக்க நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

News January 27, 2025

குடியரசுத்தினத்தன்று  செயல்பட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை

image

குடியரசு தினத்தன்று நெல்லை, தென்காசியில் 103 கடைகள் நிறுவனங்கள் 60 உணவு நிறுவனங்கள், 14மோட்டார் நிறுவனங்கள், 56 பீடி நிறுவனங்கள் என மொத்தம் 233 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் 113 நிறுவனங்களில் பணியாளர்களை வரவழைத்து பணியில் ஈடுபடுத்தியது கண்டறியப்பட்டது. இந்த நிறுவனங்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தொழிலாளர் உதவி ஆணையர் திருவள்ளுவன் நேற்று தெரிவித்துள்ளார்.

News January 26, 2025

கஞ்சா விற்றவர் குண்டர் சட்டத்தில் கைது

image

கலியாவூரை சேர்ந்த சிவன் நாராயணன் (23) என்பவர் சீவலப்பேரி பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்று வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் கங்கைகொண்டான் இன்ஸ்பெக்டர் வேல்கனி கேட்டுக்கொண்டதற்கு இணங்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிலம்பரசன் பரிந்துரையின்படி கலெக்டர் உத்தரவையடுத்து சிவ நாராயணன் இன்று குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

News January 26, 2025

நயினார் நாகேந்திரனுக்கு அதிகாரம் இல்லை-அண்ணாமலை

image

நெல்லையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நெல்லை பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பேட்டி அளித்தார். அப்பொழுது கூட்டணிக்கு ரெய்டு எல்லாம் விட வேண்டாம் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசினாலே போதும் என தெரிவித்திருந்தது சர்ச்சை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று ரெய்டு விடுவதற்கெல்லாம் நயினார் நாகேந்திரன் அண்ணனுக்கு எந்த அதிகாரமும் இல்லை என தெரிவித்துள்ளார்.

News January 26, 2025

ஜனவரி 31 முதல் மீண்டும் மழைக்கு வாய்ப்பு

image

நெல்லை மாவட்டத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை ஜனவரி மாதம் மூன்றாவது வாரத்தை கடந்தும் நீடிக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து அவ்வப்போது மிதமான மழை பெய்கிறது. இந்த நிலையில் ஜனவரி 31 ஆம் தேதி முதல் மீண்டும் நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என நெல்லை வானிலை ஆய்வாளர் ராஜா தெரிவித்துள்ளார்.

News January 26, 2025

வீரவநல்லூர் அரசு கிளை நூலகத்தில் குடியரசு தின விழா

image

நாட்டின் 76வது குடியரசு தின விழா பல்வேறு இடங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் படி நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அரசு கிளை நூலக வாசகர் வட்டத்தில் இன்று (ஜன-26) காலை தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இதில் யோகா ஆசிரியர் வெங்கடேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

News January 26, 2025

மூன்று மாவட்டங்களில் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

image

76வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது .இதனை முன்னிட்டு நெல்லை தென்காசி தூத்துக்குடி மாவட்டங்களில் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் .மேலும் சோதனை சாவடிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு உள்ளது .மேலும் முக்கிய ரயில்வே நிலையங்கள் பேருந்து நிலையங்கள் ஆகிய பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

News January 26, 2025

பேட்டையில் தொழிற்பழகுனர் சேர்க்கை முகாம்

image

பேட்டை அரசு ஐடிஐயில் வரும் 28ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மண்டல அளவிலான தொழிற் பழகுனர் சேர்க்கை முகாம் நடைபெறுகிறது. முகாமில் பங்கேற்க உள்ள பயிற்சியாளர்கள் தாங்கள் பயின்ற கல்வி நிறுவனத்தில் தேர்ச்சி பெற்ற சான்றிதழ், எஸ்எஸ்எல்சி பிளஸ் டூ மார்க் சான்றிதழ், சாதி சான்றிதழ், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் போட்டோக்கள் ஆகியவற்றுடன் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!