India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல்லைக்கு வருகை தருவதை முன்னிட்டு திமுக முதன்மை செயலாளர் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மற்றும் மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே.என்.நேரு ஏற்பாட்டில் இன்று நெல்லையில் ஒருங்கிணைந்த மாவட்ட பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் அமைச்சர் நேரு மாவட்ட செயலாளர்கள் மைதீன்கான் ஆவுடையப்பன் மற்றும் பலர் பங்கேற்றுள்ளனர்.
“திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக 56வது நிலைக்குழு கூட்டம் வரும் 30-ஆம் தேதி காலை 10 மணிக்கு பல்கலைக்கழக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகர் தலைமை தாங்குகிறார். இதில் முக்கிய கல்வி சார்ந்த பணிகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. குழு உறுப்பினர்கள் பங்கேற்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் அருகே உள்ள காரியாகுளம் கிராமத்தைச் சேர்ந்த சுமார் 21 நபர்கள் விஜயாபதி கடற்கரைக்கு சரக்கு வாகனத்தில் நேற்று ( ஜன.27 ) சென்று கொண்டிருந்தனர். அப்போது உதயத்தூர் ஜங்ஷன் அருகே சாலையில் வாகனம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. வாகனத்தில் பயணம் செய்த 15 க்கும் மேற்பட்டவர்களுக்கு படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் முன்னாள் படை வீரர்கள் ராணுவ பணியின் போது உயிர் நீத்த படை வீரர்களின் கைம் பெண்கள் தொழில் தொடங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வருகிற பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் நெல்லை மாவட்ட முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தில் அணுகி விண்ணப்பிக்க வேண்டும்.
இன்று காலை 10:30 மணிக்கு நெல்லை மாநகராட்சி மைய கட்டிடத்தில் வாரந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு நெல்லை சுவாமி நெல்லையப்பர் அதிபதி அம்மன் கோயிலில் பத்திர தீப விழா இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக தங்க விளக்கு ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. யு ஜி சி வரைவு அறிக்கையை திரும்ப பெற கோரி கல்லூரி ஆசிரியர்கள் போராட்டம் .
முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் முன்னாள் படை வீரர்கள், ராணுவ பணியின் போது உயிர் நீத்த படைவீரர்களின் கைம்பெண்கள் தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம். ரூ.1 கோடி வரை வங்கிக் கடன் மூலம் கடன் பெறுவதற்கு வழி செய்யப்படும். 30% மூலதனம் அடையவும் 3% வட்டி மானியமும் வழங்கப்படும். பிப் 28க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கலெக்டர் கார்த்திகேயன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளார். SHARE IT
தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நெல்லையில் கள ஆய்வு மேற்கொள்வதற்காக வருகின்ற பிப்ரவரி 6ஆம் தேதி வருகை தர உள்ளார். இதனைத் தொடர்ந்து நாளை (ஜனவரி 27) காலை 9:30 மணி அளவில் கேடிசி நகர் மாதா மாளிகையில் வைத்து திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே.என் நேரு தலைமையில் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு நெல்லையில் புதிய பல்நோக்கு அரசு உயர் சிறப்பு மருத்துவ வளாகத்திலேயே அவசர சிகிச்சை பிரிவு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அவசர சிகிச்சை தேவைப்படும் / பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தேவையான சிகிச்சையை உடனடியாக வழங்க வசதியாக இந்த பிளாக் அமைக்கப்படுகிறது, பச்சை,மஞ்சள், சிவப்பு ஆகிய மூன்று வண்ணங்களில் இந்த பிளாக் அமைக்க உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆக்கி யூனிட் ஆஃப் திருநெல்வேலி சார்பில் 14 வயதுக்குட்பட்ட மாணவ மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டி வருகிற பிப்ரவரி 1ஆம் தேதி பாளையங்கோட்டையில் நடைபெறுகிறது. இதில் ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் ஒரு ஆண்கள் அணியும் ஒரு பெண்கள் அணியும் கலந்து கொள்ளலாம். இதற்கான ஏற்பாடுகளை ஆக்கி யூனிட் ஆஃப் திருநெல்வேலி தலைவர் சேவியர் ஜோதி சற்குணம் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களுக்கு வரும் 30,31 ஆம் தேதிகளில் கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பிப்ரவரி 2 ஆம் தேதி வரை தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.