Tirunelveli

News February 10, 2025

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கலசங்களுக்கு சிறப்பு அபிஷேகம்

image

திருநெல்வேலி மாநகர டவுன் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூதேவி ஸமேத ஸ்ரீ கரியமாணிக்க பெருமாள் கோவிலில் இன்று (பிப்.10) கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவினை முன்னிட்டு கோவில் கலசங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

News February 10, 2025

தேசிய திறனறிவு தேர்வு மாணவர்களுக்கு வாய்ப்பு

image

நடப்பு பிப்ரவரி மாதத்தில் தேசிய திறனறிவு தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான முழு விபரங்கள் www.kalviseitiofficial.com என்ற முகவரியில் வெளியிடப்பட்டுள்ளன. எனவே இதில் பிளஸ் டூ மாணவர்கள் விண்ணப்பிக்க ஊக்குவிக்க வேண்டும் என மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களை நெல்லை மாவட்ட முதன்மை கல்வி சிவக்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

News February 10, 2025

தண்டவாளத்தில் கற்களை வைத்த 4 சிறுவர்கள் கைது

image

நெல்லை – திருச்செந்தூர் பயணிகள் ரயிலை கவிழ்க்க தண்டவாளத்தில் வேலி கற்கள் வைக்கப்பட்டது. இது குறித்து நெல்லை சந்திப்பு போலீசார் விசாரணை நடத்தினர். இதில் தூத்துக்குடி மாவட்டம் வீரபாண்டிய பட்டணம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 4 சிறுவர்கள் வேலி கற்கள் வைத்தது தெரிய வந்தது விசாரணையில் தெரியவந்த நிலையில் அவர்களை போலீசார் நேற்று கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News February 9, 2025

பொருநை புத்தகத் திருவிழா நாளையுடன் நிறைவு

image

நெல்லை டவுனில் உள்ள வர்த்தக மையத்தில் 8வது பொருநை புத்தக திருவிழா நடைபெற்று வருகிறது. கடந்த ஜன.31 அன்று தொடங்கிய இந்த புத்தகத் திருவிழா நாளை (பிப்.10) நிறைவடைகிறது. இந்த பத்து நாட்களிலும் தினமும் கவிஞர்கள், எழுத்தாளர்கள், பட்டிமன்ற பேச்சாளர்கள், தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

News February 9, 2025

போலி ஜாதி சான்றிதழ் விவகாரம் – வழக்கறிஞர் தப்பியோட்டம்

image

போலி ஜாதி சான்றிதழ் வாங்கி வழக்கறிஞர் தொழில் செய்து வருவதாக வந்த புகாரையடுத்து பிரம்மா என்ற வழக்கறிஞர் மீது  ஆட்சியர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். இதனடிப்படையில் நெல்லை உதவி காவல் கண்காணிப்பாளர் பிரசன்னா தலைமையில் இன்று (பிப்-09) வழக்கறிஞர் பிரம்மாவை கைது செய்ய போலீசார் பாளையில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றனர்.போலீசார் வருவதை தெரிந்து கொண்ட வழக்கறிஞர் பிரம்மா அங்கிருந்து தப்பி ஓடினார்.

News February 9, 2025

போலி ஜாதி சான்றிதழ் விவகாரம் – வழக்கறிஞர் தப்பியோட்டம்

image

போலி ஜாதி சான்றிதழ் வாங்கி  வழக்கறிஞர் தொழில் செய்து வருவதாக வந்த புகாரையடுத்து பிரம்மா என்ற வழக்கறிஞர் மீது  ஆட்சியர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். இதனடிப்படையில் நெல்லை உதவி காவல் கண்காணிப்பாளர் பிரசன்னா தலைமையில் இன்று (பிப்-09) வழக்கறிஞர் பிரம்மாவை கைது செய்ய போலீசார் பாளையில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றனர்.போலீசார் வருவதை தெரிந்து கொண்ட வழக்கறிஞர் பிரம்மா அங்கிருந்து தப்பி ஓடினார்.

News February 9, 2025

பிப்ரவரி 11ஆம் தேதி நெல்லையில் மதுக்கடைகள் மூடல்

image

நெல்லை மாவட்ட ஆட்சியர் சுகுமார் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் வள்ளலார் நினைவு நாளை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தால் நடத்தப்படும் மதுபான கடைகள் அவற்றுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் ஆகியவை பிப். 11ஆம் தேதி மூடப்படுகிறது .அதனை மீறி மதுபாட்டில் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

News February 9, 2025

கூடங்குளம் அருகே விபத்தில் 2 பேர் பலி 

image

 கூடங்குளம் அருகே செட்டிகுளம் பைபாஸ் சாலையில் உவரி கோவிலுக்கு சென்றுவிட்டு பைக்கில் வந்த  மாடன்பிள்ளை தர்மம் கிராமத்தை சேர்ந்த தம்பதியினர் செல்வம் (60) அவரது மனைவி புஷ்பம் (58) ஆகியோர் மீது குமரி மாவட்டம்  தெங்கம்புதூரை சேர்ந்த ஜெகதீஷ் (30) என்பவரின் கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே செல்வம் பலியானார்.அவரது மனைவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கூடங்குளம் போலீசார் விசாரணை 

News February 8, 2025

மதம் அரசு நிறுவனமாக மாறி விடக்கூடாது – கனிமொழி 

image

நெல்லை புத்தக திருவிழாவில் இன்று எம்பி கனிமொழி கலந்து கொண்டு பேசுகையில், வாசிப்பின் வழியாக உலகத்தைப் புரிந்து கொள்ள முடியும். மதம் என்பது அரசு நிறுவனமாக மாறிவிடக் கூடாது மக்களுக்கானதாக இருக்க வேண்டும். மதம் அரசின் கைக்குசென்றால் அது அதிகாரம் மிக்கதாக ஆகிவிடும். நாம் ஒவ்வொருவரும் அருகில் இருக்கும் மனிதர்களை நேசிக்க வேண்டும். அதுதான் அன்பான தமிழ் சமூகத்தை தக்கவைக்கும் என கூறினார்.

News February 8, 2025

திருநெல்வேலியில் 20 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்

image

திருநெல்வேலி சரகத்தில் இன்று (பிப்.8) 20 காவல் துறை ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து சரக டிஐஜி மூர்த்தி இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கோவில்பட்டி காவல் ஆய்வாளர் ராஜாராம் பணகுடி காவல் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல் காவல் ஆய்வாளர்கள் திருநெல்வேலி சரகத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் விரைவில் பொறுப்பேற்கின்றனர்.

error: Content is protected !!