India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நெல்லை மாவட்டம், கங்கைகொண்டான் மான் பூங்கா சரணாலயத்தில் இருந்து வெளியேறும் மான்கள் மானூர், அபிஷேகப்பட்டி, மாறாந்தை பகுதிகளில் நடமாடுகின்றன. இந்நிலையில் கல்லத்திகுளம் கிராமத்தின் மேல் புறமுள்ள குன்றில் நேற்று தண்ணீர் அருந்த வந்த புள்ளிமான் ஒன்றை நாய்கள் கடித்தன. இதில் மான் சம்பவ இடத்திலேயே இறந்தது. வனத்துறையினர் மான் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இட்டமொழி அருகே அழகப்பபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்த சேர்மராஜ்(50) கீழபண்டாரபுரத்தில் கோழிப்பண்ணை நடத்தி வந்தார். நேற்று மாலை பண்ணையின் மேற்கூரையில் திடீரென தீப்பிடித்து, மளமளவென பரவியது. திசையன்விளை தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனால், மேற்கூரை இடிந்து சேதமடைந்தது. பெரும்பாலான கோழிகள் முன்பு விற்கப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. போலீசார் விசாரித்து வருகின்றனர் .

நெல்லையில் சமீபத்தில் ஒருவருக்கு ரூ.1 கோடியே 60 இலட்சம் மின் கட்டணமாக வந்தது. விசாரணையில் அது பிழை என கண்டறியப்பட்டது. ஆகவே மின்சாரம் சம்பந்தமாக அனைத்து சேவைகளுக்கும் தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் செயலி (TNPDCL APP) பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் திருநெல்வேலி மின் தடை நீக்கும் மையம் தொலைபேசி எண்கள் 9445859032, 9445859033, 9445859034 தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். *ஷேர் பண்ணுங்க

நெல்லை மாவட்ட கலெக்டர் சுகுமார் விடுத்துள்ள செய்தி குறிப்பு; சமுதாய மேலாண்மை பயிற்சி மையத்தில் காலியாக உள்ள சமுதாய வள பயிற்றுநர் பணியிடங்களுக்கு பணியாளராக பணி அமர்வு செய்திட தகுதியான சுய உதவி குழுக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும், தகவல்களுக்கு 0462-2903302, 7708678400 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். *ஷேர் பண்ணுங்க

ஆசிரியர் தகுதித் தேர்வு (டெட்) வருகிற நவம்பர் 15 மற்றும் 16ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பம் 8ம் தேதியுடன் முடிவடைவதாக இருந்த நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று வரை நீட்டிப்பு செய்துள்ளது. மாலை 5 மணிக்குள் விருப்பமுள்ள நெல்லை மாவட்ட ஆசிரியர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். *ஷேர்

நெல்லையில் ஐடி ஊழியர் கவின் கொலை வழக்கில் கைதான் சுர்ஜித் அவரது தந்தை சரவணன் உள்பட மூவரின் நீதிமன்ற காவல் நேற்று 9ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. பாளை மத்திய சிறையில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலமாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிபதி ஹேமா மூவருக்கும் 15 நாட்கள் காவல் நீட்டித்தார். அதன்படி வரும் 23ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களின் பொதுமக்களுக்கு அதன் சேவைகளை விரிவுபடுத்தும் ஒரு பகுதியாக பிஎஸ்என்எல் பைபர் இணைப்பு, பிஎஸ்என்எல் சிம் கார்டு, ரீசார்ஜ் வவுச்சர்கள் மற்றும் அதனுடைய தொடர்புடைய சேவைகளை விற்பனை செய்வதற்காக நேரடி விற்பனை முகவர்களாக சேர விரும்புகிறவர்கள் திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழ் அணுகலாம் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பாஜக மாநில தலைவர் நெல்லை எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் இன்று வெளியிட்ட அறிக்கையில், துணைத் தலைவர் தேர்தலில் வெற்றிபெற்று 15ஆவது குடியரசுத் துணைத் தலைவராக விரைவில் பதவியேற்று மாநிலங்களவையை வழிநடத்த இருக்கும் சிபி ராதாகிருஷ்ணனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தேசத்தை வழிநடத்தும் முக்கியப் பொறுப்பைத் தமிழர் அலங்கரிக்க இருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என்று கூறியுள்ளார்.

நெல்லை மாநகர பகுதியில் சமீபகாலமாக சிறுவர், சிறுமிகள் ஆங்காங்கே பிச்சை எடுக்கும் அவலம் அதிகரித்துள்ளது. எனவே இந்த சிறுவர்கள் குறித்தான விவரங்களை சேகரித்து இவர்களை கல்வி பயில மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் இதனை விரைந்து தடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி மூலம் இன்று (செப்.9) மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் இரா. ஆவுடையப்பன் திருநெல்வேலி திமுக மாவட்ட அலுவலகத்தில் வைத்து காணொளி காட்சி வாயிலாக கலந்துகொண்டு ஆலோசனை நடத்தினார்.
Sorry, no posts matched your criteria.