India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெல்லை மாவட்டத்தில் நாளை 1ம் தேதி) காலையில் கீழ்ப்பாப்பாக்குடி, தோட்டக்குடி, உலகன்குளம், பொன்னாக்குடி, சிங்கம்பத்து, பள்ளமடை பகுதிகளிலும், மதியம் மைலப்புரம், பாக்கியநாதபுரம், காந்தி நகர், வடக்கு பொண்ணாக்குடி,ராஜா புதூர், நாடார் தெரு, உறுமன் குளம், பள்ளிக்கோட்டை பகுதிகளிலும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
நெல்லை மாவட்ட ஆட்சியரான கார்த்திகேயன் கடந்த சில மாதங்களாக நெல்லை ஆட்சியராக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் நெல்லை ஆட்சியர் கார்த்திகேயன் சற்றுமுன் தமிழ்நாடு எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேச்கனுக்கு(ELCOT) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக இந்திய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் சுகுமார் புதிய நெல்லை ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் (CISF) காலியான கான்ஸ்டபிள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. டிரைவர் & ஆப்பரேட்டர் பிரிவில் 1,124 காலிப்பணியிடங்கள், 10ஆம் வகுப்பு தேர்ச்சி, ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை மாத சம்பளம். உடற்தகுதி, திறன், எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தேர்வு. பிப்.3ஆம் தேதிக்கு மேல் cisfrectt.cisf.gov.in ல் விண்ணப்பிக்கலாம். *ஷேர்
ஜனவரி மாதத்தில் மட்டும் நெல்லை மாநகரம் மற்றும் மாவட்ட பகுதிகளில் ஆறு கொலைகள் நடந்துள்ளன. வடக்கு புளியம்பட்டியைச் சேர்ந்த சேதுபதி (30), முன்னீர் பள்ளம் அருகே கீழச் செவலைச் சேர்ந்த தமிழரசி(31), பாளை ஆரோக்கியநாதபுரத்தை சேர்ந்த பாஸ்கர் (60), அவரது மனைவி செல்வராணி (55), இடைகால் மீனவர் காலனியை சேர்ந்த முருகன் (30), நேற்று மாலை லாரி டிரைவர் ஜெகநாதன் என ஆறு பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் பொருநை புத்தகத் திருவிழா இன்று மாநகராட்சி வர்த்தக மைய வளாகத்தில் தொடங்குகிறது. வருகிற ஒன்பதாம் தேதி வரை தொடர்ந்து பத்து நாள் இந்த விழா நடைபெற உள்ளது. 120க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. பொழுதுபோக்கு அம்சங்கள், கலை நிகழ்ச்சிகள், கருத்தரங்குகளும் நடைபெறுகின்றன. இன்று காலை 10 மணிக்கு சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைக்கின்றனர்.
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகர் நேற்று கூறியதாவது: ஐந்தாண்டு ஒருங்கிணைந்த பட்ட படிப்புகளில் சேரும் மாணவர்கள் 3 ஆண்டு முடிந்ததும் இளநிலை படிப்பு சான்றிதழ் பெற்று விட்டு மீண்டும் நான்காம் ஆண்டில் பயில வருகின்றனர். இதுபோன்ற நிலையை ஊக்குவிக்கக் கூடாது. ஐந்து ஆண்டுகள் முழுமையாக படித்து முடித்தால் மட்டுமே சான்றிதழ் மற்றும் ரேங்க் வழங்கப்படும் என்றார்.
ஞாயிற்றுக்கிழமை தோறும் நாகர்கோயிலில் இருந்தும் திங்கட்கிழமை தோறும் சென்னை தாம்பரத்தில் இருந்தும் வள்ளியூர், நெல்லை வழியாக இயங்கும் நாகர்கோவில் – தாம்பரம் – நாகர்கோயில் வாரந்திர சிறப்பு ரயில் ஜூன் இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த ரயிலுக்கான முன்பதிவு விரைவில் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவைப்படுபவர்கள் அட்டவணை அடிப்படையில் இதை பயன்படுத்திக் கொள்ளலாம். *ஷேர்
தமிழகத்தில் 16 டிஎஸ்பிக்கள் இடம் மாற்றம் செய்தும் 83 இன்ஸ்பெக்டர்களுக்கு பதவி உயர்வு வழங்கியும் டிஜிபி இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். அந்த வகையில் திருநெல்வேலி டவுன் காவல் உதவி ஆணையர் செந்தில்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பணகுடி இன்ஸ்பெக்டராக பணி புரிந்த அஜி குமார் உதவி ஆணையராக பதவி உயர்வு பெற்று திருநெல்வேலி டவுன் உதவி ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (ஜனவரி 30) தகவல் அளித்துள்ளது. மேலும் திருநெல்வேலி மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் காலை முதல் திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் வானிலை மந்தகமாக காணப்படுகிறது.
யுஜிசி வரைவு அறிக்கையை திரும்ப பெற வலியுறுத்தி அரசுக் கல்லூரி ஆசிரியர்கள் கழகம் சார்பில் பல்வேறு தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இன்று (ஜன-30) நெல்லை மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் இருந்து ஆசிரியர்கள் சமூக ஊடகங்கள் மூலம் தங்களது எதிர்ப்புகளை அண்ணா பல்வேறு வாசகங்களாக தயாரித்து பதிவு செய்தனர். இது வைரலாகி வருகிறது.
Sorry, no posts matched your criteria.