India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா வேப்பிலான்குளம் ஊராட்சி செயலர் சங்கர்(40) என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரது சொந்த ஊரான பழவூரிலிருந்து வேப்பிலான்குளம் ஊராட்சி அலுவலகத்திற்கு பணிக்கு வந்த போது மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து பணகுடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம் கோட்டத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக நெல்லை வழியாக செல்லும் செங்கோட்டை-ஈரோடு எக்ஸ்பிரஸ் ரயில் இன்று (பிப்.3) முதல் 8 தினங்களுக்கு ஈரோடு-கரூர் இடையே இரு மார்க்கத்திலும் ரத்து செய்யப்படுகிறது. அதாவது செங்கோட்டையில் இருந்து புறப்பட்டு நெல்லை வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் கரூர் வரை மட்டுமே செல்லும் என கூறப்படுகிறது.
நெல்லை முக்கூடல் அருகே திருப்புடைமருதூர் ஸ்ரீ நாறும்பூநாதர் உடனுறை ஶ்ரீ கோமதி அம்பாள் திருக்கோவிலில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு இன்று காலை 6 மணி முதல் 7 மணிக்குள் மகர லக்கனத்தில் திருக்கொடியேற்றம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து நாள்தோறும் பல்வேறு ஆன்மீக நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
விடுமுறை நாளான இன்று (பிப்-2) சார் பதிவாளர் அலுவலகங்கள் வேலை நாளாக செயல்பட உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த உத்தரவுக்கு சார் பதிவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் திருநெல்வேலி மண்டலத்தில் 85 சார்பதிவாளர் அலுவலகங்கள் மூடப்பட்டன. இதனால் பத்திர பதிவு செய்ய வந்த மக்கள் பத்திர பதிவு செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
நெல்லையில் தன்னார்வ நிறுவனங்கள் நீர்நிலைகளில் பறவைகள் கணக்கெடுப்பு பணியை கடந்த 24ஆம் தேதி தொடங்கினர். பல்வேறு குழுக்களாக பிரிந்து லெவிஞ்சிபுரம் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள குளங்களில் கணக்கெடுப்பு நடத்தினர். கணக்கெடுப்பின் இறுதியில் தாமிரபரணி பாசன குளங்களில் மொத்தம் சுமார் 23,753 பறவைகள் இருப்பதாக தெரியவந்துள்ளது. உண்ணி கொக்கு ,சிறிய நீர்க்காகம் போன்ற பறவைகள் அதிக அளவு இருப்பதும் தெரியவந்துள்ளது.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வரும் 6,7 ஆகிய தேதிகளில் நெல்லை வருகிறார். நெல்லை வருகையை முன்னிட்டு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மைதானத்தில் இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. வழிநெடுகிலும் முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. அவரின் வருகையை முன்னிட்டு அந்த பகுதியில் உள்ள சாலைகள் சீரமைக்கப்பட்டு புதிய பொலிவுடன் காட்சியளிக்கிறது.
தென் தமிழகத்தில் புகழ்பெற்ற நெல்லையப்பர் கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா கோலங்கலமாக நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டு தைப்பூச திருவிழாவிற்கான கொடியேற்றம் நாளை நடைபெறுகிறது. நாளை காலை 9.15 முதல் 10.15க்குள் கொடியேற்றப்படும் என அறிவித்துள்ளனர். சிகர நிகழ்ச்சியான தைப்பூச திருவிழா பிப்.11 அன்று நடைபெற உள்ளது. சக பக்தர்களுக்கும் செய்தியை ஷேர் செய்யவும்.
நெல்லை மேகலிங்கபுரத்தை சேர்ந்த சுப்பையா தனது மனைவி கிருஷ்ணவேணியுடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக கழுத்தை நெறித்து கொலை செய்து வீட்டின் குளியலையில் மனைவி வழுக்கி விழுந்து உயிரிழந்து விட்டதாக உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். உடலை அடக்கம் செய்ய முயன்ற போது சந்தேகமடைந்த உறவினர்கள் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். விசாரணையில் மனைவியைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.
நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் எதிரே அமைந்துள்ள பிரபல தனியார் ஸ்வீட் கடையில் தற்போது தீ விபத்து ஏற்பட்டதாக பாளையங்கோட்டை தீயணைப்புத் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பெயரில் தீயணைப்புத் துறை அங்கு விரைந்தனர். தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் பெரிய அளவில் தீ விபத்து ஏற்படவில்லை என கூறப்படுகிறது.
நெல்லையில் பொருனை புத்தக கண்காட்சி நேற்று (ஜன.31) டவுனில் உள்ள வர்த்தக மையத்தில் தொடங்கியது. இந்த ஆண்டு புத்தகத் திருவிழாவில் ரூ.2 கோடியில் புத்தகங்கள் விற்பதற்கு இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. புத்தக கண்காட்சியை ஏராளமான மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.
Sorry, no posts matched your criteria.