Tirunelveli

News September 19, 2025

நெல்லை: அதிகாலையில் மனைவி வெட்டிக் கொலை

image

நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் பகுதியில் கணவன் மனைவிக்கு இடையே நள்ளிரவில் ஏற்பட்ட தகராறில் மனைவி வெட்டி படுகொலை செய்யப்பாட்டார். கொலை செய்யப்பட்ட கங்கைகொண்டான் ஆலடிப்பட்டியை சேர்ந்த பிரதிகா (20) உடலை கைப்பற்றி நெல்லை சந்திப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்த கணவன் அன்புராஜை (24) சந்திப்பு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 19, 2025

நெல்லை மாநகராட்சி பகுதிக்குள் செல்ல தடை!

image

திருநெல்வேலி பழைய பேட்டையில் உள்ள வாகன முனையம் மற்றும் விற்பனைச் சந்தை வரும் 22ம் தேதி முதல் இயங்கும் என மாநகராட்சி நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது. 22 ஆம் தேதி முதல் கனரக வாகனங்கள் மற்றும் அனைத்து வகையான லாரிகள் மாநகராட்சி பகுதிக்குள் வந்து செல்வதற்கு தடை விதிக்கப்படுவதாகவும் மீறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் மாநகராட்சி அறிவித்துள்ளது.

News September 19, 2025

நெல்லையில் ரூ.10 கோடி மதிப்பிலான கஞ்சா அழிப்பு

image

தென் மாவட்ட போலீசார், போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நடவடிக்கைகளில் அதிரடியான செயல்பாட்டை காட்டியுள்ளனர். நாங்குநேரி அருகே பொத்தையடி பகுதியில் உள்ள தனியார் எரியூட்டு நிறுவனத்தில், ரூ.10 கோடி மதிப்புடைய 2,000 கிலோ கஞ்சாவை எரித்து அழித்தனர். இந்த நடவடிக்கை, போலீசாரின் தீவிர கண்காணிப்பின் விளைவாக நடைபெற்றது. கடந்த இரண்டு நாட்களில், போலீசார் மொத்தம் 3,000 கிலோ கஞ்சாவை தீக்கிரையாக்கியுள்ளனர்.

News September 19, 2025

மாநகரில் இரவு காவல் பணி அதிகாரி விபரம்

image

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி உத்தரவின் படி நெல்லை மாநகரில் இன்று (செப்டம்பர் 18) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம் காவல் சரகம் வாரியாக மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.

News September 18, 2025

நெல்லை அரசு பள்ளியில் மாணவர்கள் கோஷ்டி மோதல்

image

ரெட்டியார்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் +2 மாணவர்கள் இன்று காலை ஒருவரை ஒருவர் தாக்கி கோஷ்டி மோதலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து ஆசிரியர்கள் அங்கு விரைந்து வந்த நிலையில் மாணவர்களை சமாதானம் செய்ய முயன்றனர். ஆனாலும் மாணவர்கள் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதனால் பள்ளி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பெருமாள்புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 18, 2025

நெல்லை மாவட்ட விவசாயிகளுக்கு கலெக்டர் அழைப்பு

image

நெல்லை மாவட்டத்தில் செப்டம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற செப்டம்பர் 26ம் தேதி காலை 10:30 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது. அனைத்து துறை அதிகாரிகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்கிறார்கள். எனவே மாவட்டத்தின் அனைத்து பகுதி விவசாயிகளும் பங்கேற்று பயனடையலாம் என மாவட்ட கலெக்டர் சுகுமார் தெரிவித்துள்ளார்.

News September 18, 2025

மனநல நிறுவனங்கள் மனநல ஆணையத்தில் பதிவு செய்ய உத்தரவு

image

திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டு இருக்கும் செய்தி குறிப்பில்; விரைவில் திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் செயல்பட்டு வரும் மனநல மருத்துவமனைகள், போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்கள் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான மறுவாழ்வு மையங்கள் ஆகியவை முறையாக பதிவு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அனைத்து நிறுவனங்களும் மாநில மனநல ஆணையத்தில் பதிவு செய்ய உத்தரவு.

News September 18, 2025

நெல்லையில் 186 புதிய வாக்கு சாவடிகள்

image

நெல்லை மாவட்டத்தில் 1,490 வாக்குச்சாவடிகளில் 375 பிரிக்கப்பட்டு, 186 புதியவை சேர்க்கப்பட்டு மொத்தம் 1,676 ஆக உயர்கிறது. 189 வாக்குச்சாவடிகள் மறுசீரமைக்கப்படும். 26 இடங்கள் மாற்றம், 10 பழுதடைந்த கட்டிடங்கள் மாற்றியமைப்பு, 6 பள்ளிகளின் பெயர் மாற்றம் உத்தேசிக்கப்பட்டுள்ளது. கருத்துகள், ஆட்சேபனைகளை ஒரு வாரத்தில் வாக்காளர் பதிவு அலுவலரிடம் தெரிவிக்கலாம் என கலெக்டர் சுகுமார் கேட்டுக்கொண்டார் .

News September 18, 2025

நெல்லை: ரயில் நிலையத்தில் கொலை

image

நெல்லை ரயில் நிலையத்தில் நேற்று முன் தினம் இரவு பயணிகள் 3 பேரை வாலிபர் தாக்கியதில் கோவை முதியவர் தங்கப்பன் உயிரிழந்தார். மற்ற இருவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தில் பீகார் மாநிலம் மண்டூலாவை சேர்ந்த சூரஜ் 25 என்பவரை போலீசார் விசாரிக்கின்றனர். அவர் பதில் ஏதும் தெரிவிக்காமல் விழிப்பதால் மனநலம் பாதிக்கப்பட்டவராக என சந்தேகிக்கின்றனர்.

News September 18, 2025

நெல்லை: மனைவியை கத்தியால் குத்திய கணவர்

image

நெல்லை மாவட்டம், களக்காடு அருகே சவளைக்காரன்குளத்தை சேர்ந்த தவசிக்கனி, மனைவி அன்னசெல்வத்துடன் சென்னையில் வசித்து வந்தார். கோயில் திருவிழாவிற்காக சொந்த ஊர் வந்தபோது, மது அருந்த பணம் கேட்டு அன்ன செல்வம் மறுத்ததால் ஆத்திரமடைந்த தவசிக்கனி, அவரை கத்தியால் குத்தினார். படுகாயமடைந்த அன்ன செல்வம் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். இதுக்குறித்து களக்காடு போலீசார் விசாரணை.

error: Content is protected !!