Tirunelveli

News February 21, 2025

மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு

image

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (21.02.2025) உலகத் தாய்மொழிநாள் உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித் தலைவர் சுகுமார் தலைமையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் எடுத்துக் கொண்டனர். இதில் மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

News February 21, 2025

 கால்நடைகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடக்கம்

image

காளைகளில் விரைகள் வீங்கி காணப்படும் கன்று பலவீனமாக அல்லது இறந்து பிறக்கும். எனவே இந்த நோய் தாக்குதலில் பால் உற்பத்தி மற்றும் கருத்தரிப்பு விகிதம் குறையும். எனவே இதை பயன்படுத்தி தங்கள் கிடாரி கன்றுகளுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். இந்த தடுப்பூசி போடும் பணி நேற்று( பிப்.20) முதல் தொடங்கி வரும் மார்ச் 10 வரை நடைபெறுகிறது என கலெக்டர் சுகுமார் கால்நடை வளர்ப்போர்களுக்காக தெரிவித்துள்ளார்.

News February 21, 2025

புலிகள் கணக்கெடுப்பு பணி அறிவிப்பு

image

நெல்லை முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் வரும் பிப்ரவரி 24ஆம் தேதி முதல் மார்ச் 1ஆம் தேதி வரை புலிகள் கணக்கெடுப்பு பணி நடக்க உள்ளதால் அகஸ்தியர் அருவி, சொரிமுத்து அய்யனார் கோவில் செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மார்ச் 3ஆம் தேதி முதல் சோதனை சாவடி திறக்கப்படும் என வனத்துறை அறிவித்துள்ளது.

News February 21, 2025

கடன் சுமையால் மருந்து கடை உரிமையாளர் தற்கொலை?

image

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே செந்தூர ராணிபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் (44). இவர் கடந்த 16ஆம் தேதி கோவை ரயில் நிலையம் முன்பு உள்ள பிரபல ஓட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளார். நேற்று ராஜேஷ் தங்கி இருந்த அறை நீண்ட நேரம் திறக்காததால் ஊழியர்கள் சென்று பார்த்தபோது அவர் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. கடன் சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

News February 20, 2025

இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள் பட்டியல்

image

திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தமுள்ள 5 காவல் உட்கோட்டங்களில், இன்று [பிப்.20] இரவு ரோந்து காவல் அதிகாரிகளின் பெயர், அவர்களின் உட்கோட்டம் மற்றும் செல் நம்பர் ஆகியவற்றை, திருநெல்வேலி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. சேரன்மகாதேவி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சத்யராஜ் மேற்பார்வையில், இவர்கள் ரோந்து பணியில் ஈடுபடுவர்! என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 20, 2025

நெல்லையில் போக்குவரத்து மாற்றம் எதுவும் இல்லை

image

டவுன் காட்சிமண்டபம் பேட்டை ரொட்டிக்கடை ஸ்டாப் ஆகிய பகுதிகளில் குடிநீர் குழாய் உடைப்பு சீரமைப்பு பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக நெல்லையிலிருந்து சேர்மாதேவி பத்தமடை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகனங்களும் அதே போன்று அங்கிருந்து வரும் வாகனங்களும் நெல்லை வருவதற்கு வசதியாக போக்குவரத்து மாற்றம் என சமூக வலைதளங்களில் வந்த செய்தி தவறானது ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 20, 2025

நெல்லையில் வரும் 4ம் தேதி உள்ளூர் விடுமுறை; ஏன் தெரியுமா?

image

அய்யா வைகுண்டரின் 193வது பிறந்த நாளையொட்டி திருநெல்வேலி மாவட்டத்தில் மார்ச் 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சுகுமார் இன்று(பிப்.20) உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த விடுமுறை நாளை ஈடுசெய்யும் வகையில் அந்த மாதத்தில் 2வது சனிக்கிழமை(மார்ச் 8) வேலை நாளாக அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பள்ளி மாணவர்களுக்கு பகிரவும்

News February 20, 2025

பாளையில் பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு

image

பாளை தெற்கு பஜார் கிழக்கு உச்சி மாகாளியம்மன் கோவில் தெருவில் இன்று காலை நடைபயிற்சி சென்ற பெண்ணிடம் 5 பவுன் நகையை மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் பறித்து சென்றனர். இதுகுறித்து அந்தப் பெண் பாளை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்தப் பகுதியில் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.

News February 20, 2025

வருங்கால வைப்பு நிதி குறைதீர் கூட்டம்

image

நெல்லையில் வருங்கால வைப்பு நிதி மண்டல ஆணையாளர் விகாஸ்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் மற்றும் தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் இணைந்து நடத்தும் வருங்கால வைப்பு நிதி குறைதீர்க்கும் நாள் கூட்டம் பிப்- 27 அன்று காலை 9முதல் காவல்கிணறு சந்திப்பு ராஜாஸ் பல் மருத்துவ கல்லூரியில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் பயனாளிகள் கலந்து கொண்டு குறைகளை தெரிவிக்கலாம்.

News February 20, 2025

நெல்லையில் 20 நாட்கள் போக்குவரத்து மாற்றம்

image

நெல்லை டவுன் காட்சி மண்டபம், பேட்டை ரொட்டி கடை ஸ்டாப் ஆகிப் பகுதிகளில் குடிநீர் குழாய் உடைப்பு சீரமைப்பு, பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக நெலையிலிருந்து பாபநாசம், கடையம், முக்கூடல், சேரன்மகாதேவி, பத்தமடை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகனங்களும், அதே போன்று அங்கிருந்து வரும் வாகனங்களும் நெல்லை வருவதற்கு வசதியாக 20 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

error: Content is protected !!