Tirunelveli

News February 22, 2025

நெல்லை: பசுமை விருதுக்கு விண்ணப்பிக்கலாம் – ஆட்சியர் 

image

சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தி முழுமையாக அர்ப்பணித்தவர்களுக்கு பசுமை சாம்பியன் விருது வழங்கி தலா ரூ.1,00,000 வீதம் பண முடிப்பும் வழங்க உள்ளது. சுற்று சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்க வேண்டும். விண்ணப்பத்தை (www.tnpcb.gov.in) என்ற தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என ஆட்சியர் சுகுமார் இன்று அறிவித்துள்ளார்.

News February 22, 2025

கோடை மழை: மின்வாரியம் முக்கிய அறிவிப்பு

image

கோடை மழை இடி, மின்னல், நேரங்களில் மின்பாதைகள், மின்கம்பங்கள், மின்மாற்றிகள், மின்சாதனங்கள், மரங்கள், அருகிலேயே நிற்க வேண்டாம். மின்சாரம் சேவைகளுக்கு மின் பகிர்மான கழகத்தின் செயலி (TNPDCL OFFICIAL APP) நெல்லை மின் தடை நீக்கும் மையம் தொலைபேசி எண்கள் 9445859032, 9445859033, 9445859034, மின்னகம் மின் நுகர்வோர் சேவை மைய எண் 94987 94987 தொடர்பு கொள்ளலாம். *ஷேர்

News February 22, 2025

ராதாபுரத்தில் இலவச மருத்துவ முகாம்

image

நெல்லை மாவட்டம் சமத்துவபுரம் சமுதாய நலக்கூடத்தில் மார்ச்.5 ஆம் தேதி  காங்கிரஸ் கட்சி சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. எலும்பு முறிவு, கண் மருத்துவ சிகிச்சை, பல் சிகிச்சை, புற்றுநோய், காச நோய் சிகிச்சை முகாமில் இலவசமாக பரிசோதனை செய்யப்படுகிறது. நாள்பட்ட சளி, இருமல், சைனஸ் சம்பந்தப்பட்ட நோய்களும், ரத்த பரிசோதனை, பி.பி., சுகர் பரிசோதனைகளும் மற்றும் ஸ்கேன் இலவசமாக பார்க்கப்படுகின்றன. *ஷேர்

News February 22, 2025

பள்ளி ஆசிரியைக்கு பாலியல் தொல்லை

image

திருநெல்வேலி: தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றும் இளம்பெண் (பிப்.20) மாலையில் பள்ளி முடிந்து வீட்டுக்கு கிளம்பினார். பள்ளி அருகே காரில் வந்த அந்த நபர், பெண்ணை அவரது வீட்டில் கொண்டு சென்று விடுவதாக கூறி தமது காரில் ஏற்றிக்கொண்டார். கார் கன்னியாகுமரி சாலையில் சென்றதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெண் காரை நிறுத்தி போலீசுக்கு புகார் செய்தார். போலீசார் காருடன் ராஜூ(35) என்பவரை கைது செய்தனர்.

News February 22, 2025

நெல்லை: மகாசிவராத்திரியில் பங்கேற்கும் முன்னாள் ஆளுநர் 

image

நெல்லை மாவட்டம் வடக்கு விஜயநாராயணம் அருகில் உள்ள விஜய அச்சம்பாடு கிராமத்தில் வான்வெளி கைலாசநாதர் சிவாலயம் உள்ளது. இந்த சிவாலயத்தில் வரும் புதன் கிழமை இரவு மகா சிவராத்திரியை முன்னிட்டு நான்கு கால பூஜைகள் நடைபெற உள்ளது. மகா சிவராத்திரிக்கு சிறப்பு அழைப்பாளராக தெலுங்கானா முன்னாள் ஆளுநரும் பாஜக பிரமுகருமான தமிழிசை சௌந்தர்ராஜன் சபங்கேற்கிறார். அவருக்கு கோவில் சார்பில் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.

News February 21, 2025

108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர், உதவியாளர் நேர்காணல் அறிவிப்பு

image

108 ஆம்புலன்சில் ஓட்டுனர், மருத்துவ உதவியாளர் பணிக்கு வேலை வாய்ப்பு முகாம் 23-02-25 காலை 9 மணி முதல் 2 மணி வரை கேடிசி நகர் மங்கம்மா சாலை சமுதாய நலக்கூடத்தில்  நடைபெற உள்ளது. ஓட்டுநர் பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். நேர்முகத் தேர்வு அன்று 24 வயதுக்கு மேலும் 35 வயதுக்கு மிகவும் இருக்கவேண்டும். மேலும் விவரங்களுக்கு 044-28888060 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

News February 21, 2025

நெல்லையில் 16 கிலோ கஞ்சா பிடிபட்டது – 6 பேர் அதிரடி கைது

image

திருநெல்வேலி திருவனந்தபுரம் தேசிய நான்கு வழி நெடுஞ்சாலையில் இன்று (பிப்.21) காலை பாளையங்கோட்டை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அங்கே வந்த மினி வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது அதில் 16 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். விற்பனைக்காக கொண்டு சென்ற 6 பேரை பாளையங்கோட்டை ஆய்வாளர் தில்லை நாகராஜன் மற்றும் உதவி ஆய்வாளர்கள் காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.

News February 21, 2025

நெல்லையில் சின்னகுற்றாலம் தெரியுமா?

image

நெல்லை, பணகுடியிலிருந்து 3 கி.மீ தொலைவில் சின்னகுற்றாலம் என்றழைக்கப்டும் குத்தரபாஞ்சான் அருவி அமைந்துள்ளது.தென்மேற்கு,வடகிழக்கு பருவமழையில் இங்கு நீர் கொட்டுகிறது. சுற்றுவட்டார மக்கள் குடும்பத்துடன் வந்து குளித்து செல்கின்றனர். இதனருகிலேயே கன்னிமார் ஓடை அமைந்துள்ளது. வனத்துறையினர் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த அருவியில் தற்போது கன்னிமார் ஓடையில் மட்டும் குளிக்க அனுமதியளிக்கப்படுகிறது. SHARE IT

News February 21, 2025

கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றில் போட்டோ எடுக்க தடை

image

நெல்லை கொக்கிரகுளம் சுலோச்சனா முதலியார் தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் பொதுமக்கள் தங்களது வாகனங்களை நிறுத்தி செல்பி எடுப்பதால் அங்கு போக்குவரத்து நெரிசல் மற்றும் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படுவதால். இங்கு புகைப்படம் எடுக்க போலீசார் தற்போது தடை விதித்துள்ளனர். மேலும் இது குறித்து அறிவிப்பு பேனரையும் வைத்துள்ளனர்.

News February 21, 2025

கூடங்குளத்தில் முன்விரோதம் காரணமாக பெட்ரோல் குண்டு வீச்சு

image

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம், சவுந்திரலிங்கபுரத்தில் நேற்று இரவு முன்விரோதத்தில் 2 பேர் டீக்கடைக்காரரின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிச் சென்றுள்ளனர். இது குறித்து கூடங்குளம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது .கூடங்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு பெட்ரோல் குண்டு வீசிய இரண்டு பேரை தேடி வருகின்றனர்.

error: Content is protected !!