India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழக ஆளுநர் ஆர். என்.ரவியை இன்று (செப்டம்பர்.27) சென்னை ராஜ் பவன் ஆளுநர் மாளிகையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ நேரில் சந்தித்து உரையாற்றினார். இதற்கு முன்னதாக கவர்னருக்கு பொன்னாடை அணிவிக்கபட்டது. இதில் பாஜக மாநிலத் துணைத் தலைவர்கள் சக்கரவர்த்தி, கரு நாகராஜன் மாநிலச் செயலாளர் கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் – விக்கிரமசிங்கபுரம் சாலையில் உள்ள ராணி மகளிர் மேல்நிலைப்பள்ளி முன்பு உள்ள ரயில்வே இரும்பு பாதை கேட் இன்று இரவு 27/9/25 இரவு 10 மணி முதல் நாளை காலை 28/9/25 காலை 6 மணி வரை ரயில்வே கேட் பராமரிப்பு பணிகளுக்காக மூடப்படுவதாக
ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிக்கை செய்யப்பட்டது..

நெல்லையில் இந்திய அஞ்சல் துறையில் காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தினால் Post Office வேலை நிச்சயம்
1.துறை: இந்திய அஞ்சல் துறை
2.தேர்வு கிடையாது
3.கல்வி தகுதி: 10th Pass
4.வயது வரம்பு : 18 முதல் 40 வரை
5.ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
6.சம்பளம்: ரூ.10,000- 29,380 வரை
7.கடைசி தேதி: 30.09.2025
சொந்த ஊரில் போஸ்ட் ஆபீஸ் வேலைக்கு Apply பண்ணுங்க! SHARE பண்ணுங்க!

நெல்லை மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை <

தமிழக அரசின் TNRights திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் 1,096 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பணிக்கு 10, 12th , டிகிரி முடித்தவர்கள், உரிய பணி அனுபவம் உள்ளவர்கள் என பலரும் விண்ணப்பிக்கலாம். சம்பளம் – ரூ.12,000 – ரூ.35,000 வரை. அக்.14க்குள் இங்கு<

பெங்களூருவை சேர்ந்த தனியார் நிறுவனம், நெல்லையில் நாளை மாலை 5 மணி வரை ஹெலிகாப்டர் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது. தச்சநல்லுார் அருகே மைதானத்தில் இருந்து புறப்பட்டு டவுன், நெல்லையப்பர் கோவில் பகுதி, தாமிரபரணி ஆறு என, 10 நிமிடங்கள் சுற்றிக்காட்டப்படடும். ஒரு நபருக்கு, 6,000 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வானத்தில் பறந்தவாறு நம்ம ஊரின் அழகை ரசிக்க உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்யுங்க.

பத்தமடை டவுன் பஞ்சாயத்து பகுதியில் லோக் கல்யாண் மேளா திட்ட முகாம் வரும் 29,ம் தேதி நடக்கிறது.பத்தமடை டவுன் பஞ்சாயத்து சாலையோர வியாபாரிகளுக்கான சிறப்பு திட்ட முகாம் லோன் கல்யாண் மேளா வரும் 29,ம் தேதி காலை 11 மணி முதல் நடைபெறுகிறது. இதில் சாலையோர வியாபாரிகள் தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என்று டவுன் பஞ்சாயத்து தலைவர் ஆபிதா ஜமால்தீன் தெரிவித்துள்ளார்.

நெல்லை மக்களே, நெல்லை மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் 44 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 8th, 10th, டிபளமோ, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு மற்றும் விண்ணப்ப கட்டணம் இல்லை. நேர்முகத் தேர்வு உண்டு. விண்ணபிக்க கடைசி தேதி 14.10.2025. சம்பளம் 40,000 வரை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு <

வி எம் சத்திரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வந்த ஓய்வு பெற்ற தீயணைப்பு அலுவலர் லட்சுமணன். கடந்த 2 நாட்களுக்கு முன் லட்சுமணன் வீட்டில் கால் வழக்கி விழுந்து மயங்கி உள்ளார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு லட்சுமணன் உயிரிழந்தார். பெருமாள்புரம் போலீசார் விசாரணை

திருநெல்வேலி மாவட்டம் உட்கோட்ட இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி மானூர், ஏர்வாடி, உவரி ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும், வீரவநல்லூர், பாப்பாக்குடி காவல் நிலையங்களின் உதவி ஆய்வாளர்களும், இன்று [செப்.26] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். துணை காவல் கண்காணிப்பாளர் ரகுபதி ராஜா இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார்.
Sorry, no posts matched your criteria.