India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு இன்று நெல்லையில் நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தம் 47 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது.
இந்த தேர்வுக்காக திருநெல்வேலியில் விண்ணப்பித்தவர்களில் 3,464 பேர் தேர்வு எழுதவில்லை. இந்த தேர்வை எழுத 13,621 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 10,157 பேர் மட்டுமே தேர்வில் கலந்துகொண்டனர்.

நெல்லை மக்களே, உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இங்கே <

கரூர் த.வெ.க. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 கோடி அரசு வழங்க வேண்டும். கரூர் சம்பவத்தைப் பொறுத்தவரை, உடனடியாக யாரையும் குறை கூற முடியாது. தீவிரமாக விசாரிக்க வேண்டும். உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும்” என பாஜக மாநில தலைவர் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
▶️நெல்லை மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 04575-242561
▶️ தமிழ்நாடு அவசர உதவி: 0462-2572689
▶️ Toll Free 1800 4252 441
▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
▶️உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

நெல்லை மக்களே, தமிழ்நாடு கிராம வங்கிகளில் ஆபிசர் பணிகளுக்கு 489 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டன. 18 – 40 வயதுக்கு உட்பட்ட டிகிரி முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். செப். 28க்குள் (இன்று) இங்கு <

மணிமுத்தாறு சிறப்பு நிலை டவுன் பஞ்சாயத்து அலுவலகத்தில் வரும் 30-ம் தேதி சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேளா சிறப்பு திட்ட கடன் முகாம் நடைபெறுகிறது. பல்வேறு வங்கிகள் மூலம் கடன்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இம்முகாமில் மணிமுத்தாறு டவுன் பஞ்சாயத்துக்குட்பட்ட அனைத்து வருவாய் கிராமங்களில் உள்ள சாலையோர வியாபாரிகள் கலந்து கொண்டு பயன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்க.

நெல்லை மக்களே, ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். பயனுள்ள தகவல் மறக்காம SHARE பண்ணுங்க.

சீதபற்பநல்லூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கொலை முயற்சி, கொலை மிரட்டல், வழக்கில் ஈடுபட்ட திருநெல்வேலி சிறுக்கன்குறிச்சி சங்கரலிங்கம் என்பவரின் மகன் பேச்சி முத்து(35) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேற்படி நபர் கொலை முயற்சி, கொலை மிரட்டல், திருட்டு மற்றும் வழிப்பறி போன்ற வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதால் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டார்.

நெல்லை, நாங்குநேரி மேல சிந்தாமணியை சேர்ந்தவர் அருள்குமார் (வயது 27) . சவுதியில் பணி செய்யும் இவரது தங்கையிடம் முகநூல் வழியாக அறிமுகமான ஒரு நபர் தான் லண்டன் டாக்டர் எனக்கூறி பழகி அருள்குமார் இடம் இருந்து பல்வேறு கட்டமாக 23 லட்சத்து 18,800 வங்கி பரிவர்த்தனை மூலம் பறித்துள்ளார். ஏமாற்றம் அடைந்த அவர் நெல்லை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்துள்ளார். இதுக்குறித்து போலீசார் விசாரணை.

தமிழக ஆளுநர் ஆர். என்.ரவியை இன்று (செப்டம்பர்.27) சென்னை ராஜ் பவன் ஆளுநர் மாளிகையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ நேரில் சந்தித்து உரையாற்றினார். இதற்கு முன்னதாக கவர்னருக்கு பொன்னாடை அணிவிக்கபட்டது. இதில் பாஜக மாநிலத் துணைத் தலைவர்கள் சக்கரவர்த்தி, கரு நாகராஜன் மாநிலச் செயலாளர் கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
Sorry, no posts matched your criteria.