India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மானூர் மேலபிள்ளையார் குளத்தைச் சேர்ந்த காளிதாஸ் கருப்பசாமி மாரியப்பன் ஆகியோரிடம் மதுரையைச் சேர்ந்த பிரேம்குமார் அவரது மனைவி காளிஸ்வரி இருவரும் சேர்ந்து வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.4,05,000 பணத்தை மோசடியில் ஈடுபட்டனர். நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருந்து வரும் நிலையில் கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் தலைமறைவாக இருந்து தேடப்பட்டு வந்த பிரேம்குமார் தம்பதியை கோவையில் இன்று போலீசார் கைது செய்தனர்.
மேலப்பாளையத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு சொத்து பிரச்சனை தொடர்பாக காதர் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு முதலாவது கூடுதல் மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இன்று இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்ட 8 பேரையும் நீதிபதி பத்மநாதன் விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே கீரைக்காரன்தட்டு கிராமத்தில் உள்ள விவி மினரல்ஸ் தாது மணல் ஆலைகள் மற்றும் அதன் தலைமை அலுவலகம் மற்றும் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அலுவலகத்தில் பணியாளர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு, ஐகோர்ட் உத்தரவுப்படி 30க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் விபத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் 48% ஆக குறைந்துள்ளது. கடந்த 3 மாதத்தில், விபத்தில் 48 பேர் மரணம் அடைந்தனர். 178 பேர் காயமடைந்தனர். இதே காலகட்டத்தில் கடந்த ஆண்டு 92 பேர் விபத்தில் உயிரிழந்தனர். 189 பேர் காயமடைந்தனர். தொடர் விழிப்புணர்வு காரணமாக விபத்துக்கள் குறைந்துள்ளன என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
நெல்லையிலிருந்து பிலாஸ்பூருக்கு வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் திருவனந்தபுரம் கோயம்புத்தூர் திருப்பூர் வழியாக பிலாஸ்பூர் செல்கிறது. சேலம் கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் 13, 20-ம் தேதிகளில் நெல்லையிலிருந்து அதிகாலை புறப்படும் இந்த ரயில் போத்தனூர், இருகூர் வழியாக செல்கிறது. கோயம்புத்தூர் நிறுத்தம் கிடையாது. அதற்கு பதிலாக போத்தனூர் நிறுத்தம் உண்டு என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் 4-ஆம் ஆண்டு மாணவி ஒருவர் நேற்று (ஏப்ரல்-4) பேராசிரியர்கள் மீது பாலியல் புகார் அளித்துள்ளார். பேராசிரியர்கள் பாலியல் தொந்தரவு கொடுப்பதாக முதலமைச்சரின் தனிப்பிரிவு மற்றும் காவல்துறை இயக்குனர் உள்ளிட்டோருக்கு 4 பக்க புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. பேராசிரியர்கள் மீது மாணவி பாலியல் புகார் கொடுத்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழக நீர்வளத்துறை அமைச்சரும் திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் இன்று (ஏப்ரல் 5) காலை 10 மணியளவில் திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில் உள்ள சுற்றுலா மாளிகைக்கு வருகை தர உள்ளார். எனவே, கட்சியினர் அனைவரும் சுற்றுலா மாளிகைக்கு வருகை தர திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவுடையப்பன் இன்று அழைப்பு விடுத்துள்ளார்.
நெல்லை, மதுரை, குமரி மாவட்ட பயணிகள் பயனடையும் வகையில் தென்னக ரயில்வே சார்பில் நாகர்கோவிலில் இருந்து சென்னை தாம்பரத்திற்கு நெல்லை வழியாக சிறப்பு ரயில் ( வ.எண்.06012 ) இயக்கப்பட்டு வருகிறது. தற்போது கோடை விடுமுறை பள்ளி கல்லூரிகளுக்கு விடை இருப்பதால், இந்த ரயில் சேவை வருகிற ஏப்ரல்13ஆம் தேதி முதல் மே 5ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று வருவாய்த்துறை சம்பந்தமான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அப்போது வருவாய் மற்றும் பேரிடர் மீட்பு மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் திருநெல்வேலி மாவட்டத்தில் புதிய வருவாய் குறுவட்டங்கள் மற்றும் புதிய வருவாய் கிராமங்கள் உருவாக்கப்படும் என்று தெரிவித்தார்.
தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒர் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக இன்று (ஏப்.4) திருநெல்வேலி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.