Tirunelveli

News March 4, 2025

ஓரினச்சேர்க்கை ஆசை காட்டி பணம் பறிப்பு; 4 பேர் கைது

image

களக்காடு பகுதியைச் சேர்ந்த 36 வயது வாலிபரிடம் ஆப் மூலம் பழகி ஓரினச்சேர்க்கை ஆசை காட்டி தேவ நல்லூர் அருகே உள்ள கல்குவாரி பகுதிக்கு மர்ம நபர்கள் அழைத்துள்ளனர். அங்கு சென்ற இந்த வாலிபரிடம் ரூ.11,000 பணத்தை பறித்து விட்டு விரட்டி அடித்தனர். இது குறித்து அவர் அளித்த புகார் அடிப்படையில் ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் ,மணிகண்டன், இசக்கி பாண்டி,17 வயது சிறுவனை நேற்று கைது செய்தனர்.

News March 4, 2025

ஆட்சியர் அலுவலகத்தில் ஆமை விடும் போராட்டம்

image

நெல்லை மாநகரப் பகுதியில் உள்ள சொக்கட்டான் தோப்பில் கட்டப்பட்டுள்ள தீண்டாமைச் சுவர் மற்றும் அரசு நில ஆக்கிரமிப்பை அகற்ற அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து மார்ச்.17ல் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆமை விடும் போராட்டத்தை நடத்தப் போவதாக தமிழர் விடுதலை களம் அமைப்பு அறிவித்துள்ளது.

News March 3, 2025

நெல்லையில் பதநீரால் கட்டப்பட்ட கோயில் தெரியுமா?

image

நெல்லை, தெற்கு கள்ளிகுளத்தில் 139 ஆண்டுகள் பழமை வாய்ந்த அதியச பனிமாதா ஆலயம் அமைந்துள்ளது. முழுவதும் பதநீர்&கடுக்காய் கொண்டு கட்டப்பட்டுள்ள இக்கோயிலின் கோபுரம் 183 அடி உயரமுடையது. இந்த ஆலயத்திற்கு மாதா சுரூபங்கள் பிரான்ஸ் நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்டவை. திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஜுலை 27ல் துவங்கி ஆகஸ்டு 5ல் நிறைவடையும். வெளிமாநிலத்திலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.SHARE IT

News March 3, 2025

ஜமைக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட வாலிபர் உடல் வருகை

image

நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரத்தை சேர்ந்த வாலிபர் விக்னேஷ் நாகராஜன் என்பவர் ஜமைக்கா நாட்டில் கொள்ளையர்களால் சூப்பர் மார்க்கெட்டில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரின் உடல் 74 நாட்களுக்குப் பிறகு நாளை (மார்ச்.4) மாலை 3 மணிக்கு விமானம் மூலம் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு வருகிறது. பின் அங்கிருந்து உடல் நெல்லைக்கு கொண்டு வரப்படுகிறது.

News March 3, 2025

நெல்லையில் 19,816 பேர் பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர்

image

இன்று (மார்ச்.3) தொடங்கும் பிளஸ் 2 தேர்வில் திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தம் 19,816 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். மாவட்டம் முழுவதிலுமாக சேர்த்து 73 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவகுமார் தெரிவித்துள்ளார். தேர்வு மையங்களில் பாதுகாக்கப்பட்ட குடிநீர், தடையில்லா மின்சாரம் ஆ‌கியவை வழங்கிட முறையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

News March 3, 2025

ஹோலி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்கம்

image

கோலி பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் வட மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. தென் மாவட்டங்களில் கன்னியாகுமரியில் இருந்து மும்பைக்கு சிறப்பு ரயில் மும்பை – கன்னியாகுமரிக்கு வருகிற மார்ச் 10 மற்றும் 17 ஆகிய தேதிகளிலும், மறு மார்க்கத்தில் கன்னியாகுமரி – மும்பை மார்ச் 11 மற்றும் 18 தேதிகளில் இயக்கப்படுவதாக நேற்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

News March 3, 2025

நெல்லை பெண் தற்கொலை – சிக்கிய கடிதம் 

image

நெல்லை மாவட்டம் உவரி அருகே Tata குடியிருப்பை சேர்ந்த மகாராஜன் மகள் முத்து பிரித்தா (24). இவர் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரித்து வந்த நிலையில் நேற்று அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு எழுதிய கடிதம் சிக்கியது. அதில் எனது சாவிற்கு யாரும் காரணம் இல்லை. தொடர்ந்து விக்கல் நோய் காரணமாக வாழ பிடிக்கவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

News March 2, 2025

சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு செல்ல அனுமதி

image

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் கடந்த 24.02.2025 முதல் 01.03.2025 வரை நடைபெற்ற அகில இந்திய புலிகள் கணக்கெடுப்பு பணி நிறைவு பெற்றது. இதனால்  நாளை முதல் (03.03.2025) மீண்டும் பாபநாசம் சோதனை சாவடி திறக்கப்பட்டு வழக்கம் போல் மக்கள் அனைவரும் சொரிமுத்து அய்யனார் கோவில் மற்றும் அகஸ்தியர் அருவி செல்ல அனுமதிக்கப்படுவர் என வனத்துறை சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 2, 2025

நெல்லையில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

பூமத்திய ரேகையை ஒட்டிய மேற்கு இந்தியப்பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல்- மாலத்தீவு வரை ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று இரவு 10 மணி வரை நெல்லையில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News March 2, 2025

களக்காடு தலையணையில் குளிக்க தடை

image

களக்காடு மலைப்பகுதிகளில் இன்று(மார்ச்.2) பெய்து வரும் தொடர் மழை காரணமாக களக்காடு தலையணை சூழல் சுற்றுலா பகுதியில் தலையணையில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், துணை இயக்குனர், வனஉயிரின காப்பாளர், களக்காடு சரணாலயம் உத்தரவின்படி 03.03.2025 முதல் மறு உத்தரவு வரும் வரை சுற்றுலா பயணிகள் தலையணையில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளுக்கு பார்வையிட மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!