India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதிய பாதை இறுதி கட்ட பணிகளால் நெல்லை ரயில் சேவைகளில் மாற்றம் செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி நெல்லை – எழும்பூர் விரைவு ரயில் வரும் 8ஆம் தேதி செங்கல்பட்டு வரை மட்டுமே இயக்கப்படும். எழும்பூர்-நெல்லை வந்தே பாரத் ரயில் நாளை 6,7ஆம் தேதிகளில் 15 நிமிடங்கள் தாமதமாக மாலை 3 மணிக்கு புறப்பட்டு செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்ட அணைகளில் இன்று காலை 7 மணி நிலவரப்படி நீர்மட்ட விவரம் மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. பாபநாசம் அணை நீர் இருப்பு 88.25 அடியாக உள்ளது. அணைக்கு 595 கன அடி வருகிறது. 200 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. சேர்வலாறு நீர் இருப்பு 101.18 அடி. மணிமுத்தாறு 89.72 அடி. வடக்கு பச்சையாறு 8.25 அடி. நம்பியாறு 13 அடி. கொடுமுடியாறு 5.75 அடி என நீர் இருப்பு உள்ளது.
நெல்லை தாமிரபரணி நதிக்கரையில் அமைந்திருக்கும் மணிமூர்த்தீஸ்வரம் ஆலயம் 900 வருடங்கள் பழைமை வாய்ந்தது. இங்கு தங்கம் போல் ஜொலிக்கும் கணபதியை தரிசித்து வழிபட சகல துன்பங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை. விநாயகர் தன் தேவியுடன் இருந்து அருள்பாலிப்பதால் இங்கு வந்து வேண்டிக்கொண்டால் கணவன் மனைவி ஒற்றுமை மேம்படும். திருமணத்தடைகள் நீங்கும். பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர்வார்கள் என்பது நம்பிக்கை.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இயல்பை விட அதிக அளவில் நீர்வரத்து காணப்படுவதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். தொடர் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக அருவியில் குளிக்க 10 ஆவது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தமுள்ள 5 காவல் உட்கோட்டங்களில், இன்று (மார்ச் 04] இரவு ரோந்து காவல் அதிகாரிகளின் பெயர், அவர்களின் உட்கோட்டம் மற்றும் செல் நம்பர் ஆகியவற்றை, திருநெல்வேலி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. திருநெல்வேலி ஊரக உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ரகுபதி ராஜா மேற்பார்வையில், இவர்கள் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உவரி கடற்கரையில் செல்வமாதா தேவாலயம் அமைந்துள்ளது.இது ஒரு விமானத்தை சுமந்து செல்லும் கப்பலின் வடிவத்தில் கட்டப்பட்டுள்ளது. ECR சாலையில் அமைந்துள்ள இந்த தேவாலயத்தில் 4 சன்னதிகளும் பல குகைகளும் உள்ளன.தேவாலயத்தில் படிக்கட்டுகளுடன் கூடிய ஒரு சிறிய கடற்கரை உள்ளது. இந்த தேவாலயம் கடலை நோக்கி உள்ளது.அது அலைகளில் பயணிப்பது போல் தெரிகிறது.செப்டம்பர் கடைசி வெள்ளியில் திருவிழா நடக்கிறது. SHARE IT
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நேற்று தொடங்கிய நிலையில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடங்க இருக்கிறது. நெல்லை மாவட்டத்தில் 20ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் எழுத உள்ளனர். இதற்கான தேர்வு வையுங்கள் தயார் செய்யும் பணி இன்று நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு வகுப்பறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வு ஏற்பாடு பணிகளை முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் கண்காணித்து வருகிறார்.
தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாலன் மாவட்ட துணை தலைவர் ரங்கன் மற்றும் நிர்வாகிகள் நேற்று நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் நெல்லை மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக 100 நாள் வேலை திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மீண்டும் வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர் .
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த பிப்.28ஆம் தேதி முதல் மூன்று நாட்கள் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த நிலையில் திருநெல்வேலி குறுக்குத்துறையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில் மூலஸ்தானத்தில் ஒன்றை அடிக்கு மேல் நேற்று வெள்ள நீர் புகுந்தது குறிப்பிடத்தக்கது.
இ.எஸ்.ஐ. திட்ட பயனாளிகளுக்கு குறைகளை நிவர்த்தி செய்யும் சிறப்பு முகாம் நாளை(மார்ச்.5) மாலை 4 மணிக்கு இ.எஸ்.ஐ துணை மண்டல அலுவலகத்தில் நடைபெற உள்ளது. முகாமில் இ.எஸ்.ஐ.சி மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளர், துணை மண்டல மருத்துவ துணை இயக்குனர், மண்டல நிர்வாக மருத்துவ அலுவலர் & மருத்துவ அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இதில் பயனாளிகளும் பங்கேற்று பயனடையலாம் என துணை இயக்குனர் அருண் தெரிவித்துள்ளார். *ஷேர்
Sorry, no posts matched your criteria.