India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அதிமுக-பாஜக கூட்டணி குறித்து எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் இன்று (ஏப்ரல் 11) அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், கூடா நட்பு கேடாய் முடியும் என கூறி பாஜக உடன் கூட்டணி அமைத்ததற்கு அதிமுக எத்தனை காரணங்களை கூறினாலும் அவற்றை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள், தமிழக மக்கள் நிராகரிப்பார்கள் என தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் உள்ள 8 தாசில்தார்களின் செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. முக்கிய கோரிக்கைகள், புகார்களுக்கு இவர்களை தொடர்பு கொள்ளலாம். திசையன்விளை தாசில்தார் – 9384094224 , சேரன்மகாதேவி தாசில்தார் – 9384094223, ராதாபுரம் தாசில்தார் – 9445000674, அம்பை தாசில்தார் – 9445000672, நாங்குநேரி – 9445000673, நெல்லை-9445000671, பாளை தாசில்தார் -9445000669, மானூர் தாசில்தார் – 9384094222. *SHARE IT*
நெல்லை மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் Business Development & Marketing Executive பணிக்கு 35 காலி பணியிடங்கள் உள்ளது. தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாத ஊதியம் ரூ.15,000 வரை வழங்கப்படுகிறது. ஏதாவது ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. முன் அனுபவம் தேவையில்லை. விண்ணப்பிக்க இங்கே <
மானூர் அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த 8 வயது சிறுவனை அதே கிராமத்தைச் சேர்ந்த 15 வயதுள்ள 3 சிறுவர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தல் கொடுத்துள்ளனர். இதுகுறித்து 8 வயது சிறுவனின் பெற்றோர் கொடுத்த புகாரில் பேரில் 15 வயது சிறுவர்கள் 3 பேரும் போக்சோ சட்டத்தின் கைது செய்யப்பட்டு நெல்லை சிறார் நீதி குழுமத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது நீதிபதி எச்சரித்து 3 பேரையும் ஜாமீனில் நேற்று (ஏப்ரல்-10) விடுவித்தார்.
கொண்டாநகரம் விசாலாட்சி நகரில் நேற்று (ஏப்ரல் 10) பிற்பகலில் பசுமாடு ஒன்று கன்று ஈன்றுள்ளது. சிறிது நேரத்தில் அந்த கன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பசுமாடு தனது இறந்த கன்றை சுற்றிசுற்றி வலம் வந்தது. இச்சம்பவம் அங்கு செல்வோரை கண்கலங்க வைத்தது. மேலும் இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக அண்ணாமலைக்கு பின்னர் திருநெல்வேலி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் நயினார் நாகேந்திரன் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது. தற்போது பாஜக மாநில தலைவருக்கு புதிய விதிகள் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் பத்தாண்டுகள் பாஜக உறுப்பினராக இருக்க வேண்டும் என்ற நிலையில் நயினார் நாகேந்திரன் பாஜகவில் இணைந்து 7 ஆண்டுகள் ஆவதால் மாநிலத் தலைவராவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் இயங்கி வரும் சத்துணவு மையங்களில், 119 சமையல் உதவியாளர் காலி பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்யப்பட உள்ளதாக ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். இதற்கு தகுதியான பெண்கள், வரும் 15ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை சம்பந்தப்பட்ட ஊராட்சி மற்றும் மாநகராட்சி அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம். இதற்கான மாதிரி விண்ணப்ப படிவம் www.tirunelveli.nic.in மாவட்ட இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெறுவதிலிருந்து தற்போது கல்லூரியில் வேலை செய்யும் வரை தொடர்ந்து பாலியல் ரீதியான துன்புறுத்தலை வேதியியல் துறை பேராசிரியர் கொடுப்பதாக தற்காலிக பேராசிரியர் ஒருவர் மாநில மகளிர் ஆணையத்திற்கும் உயர்கல்வி துறைக்கும் மனு அனுப்பியுள்ளார். இந்த குற்றச்சாட்டு குறித்து பல்கலைக்கழகம் விசாரிக்க தமிழக உயர் கல்வி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் சுகுமார் நேற்று (ஏப்ரல் 9) விடுத்துள்ள செய்தி குறிப்பு: வரும் 12ஆம் தேதி சனிக்கிழமை குடும்ப அட்டை குறைதீர்க்கும் முகாம் அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் நடைபெற உள்ளன. புதிய குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், கைப்பேசி எண் பதிவு உள்ளிட்ட அனைத்து சேவைகளுக்கும் மனு அளித்து பலனடையலாம் என்று தெரிவித்துள்ளார்.
பள்ளி மாணவ- மாணவிகள் கோடைக்கால விடுமுறையை பயனுள்ளதாக கழிக்கும் வகையில் கோடைக்கால அறிவியல் பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. வரும் 28ம் தேதி முதல் மே 3ம் தேதி வரை மின்னணுவியல் என்ற பிரிவு 8-9மாணவ மாணவிகளுக்ககவும். STEM Activity என்ற பிரிவில் 5-8 மாணவ- மாணவிகளுக்கும் நெல்லை அறிவியல் மையத்தில் நடக்கிறது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sorry, no posts matched your criteria.