India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சுகுமார் இன்று அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், திருநெல்வேலி மாவட்டத்தில் கிராம, ஊராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் சிறப்பாக செயல்படும் சுய உதவிக்குழுக்கள் உள்ளிட்டவைகளில் இருந்து மணிமேகலை விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு 9444094357 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் ஸ்டார் அகடாமி டென்னிஸ் பயிற்சி மையம் வரும் 1ம் தேதி முதல் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் 20 மாணவர்கள், 20 மாணவிகள் சேர்க்கப்படுகின்றனர். 12 வயது முதல் 21 வயது வரை உள்ளவர்கள் இதில் சேரலாம். இதற்கான தேர்வு வரும் 28ம் தேதி நடக்கிறது. தகுதியின் அடிப்படையில் மாணவ, மாணவிகள் சேர்க்கப்படுகின்றனர். இவ்வாறு கலெக்டர் சுகுமார் இன்று தெரிவித்தார்.
நெல்லை மாவட்டத்தில் கனிம வளம் கையாளுதல் தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது. நெல்லை மாவட்டத்தில் உள்ள கனிம வள சுரங்கங்களை பயன்படுத்துதல் தொடர்பான உரிமைகள் மற்றும் அனுமதி வழங்குவது குறித்த விண்ணப்ப பதிவுகள் ஆன்லைன் மூலம் வரும் ஏப்.15-ம் தேதி முதல் தொடங்குகிறது. ஆகவே கனிமவள தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு நெல்லை ஆட்சியர் சுகுமார் இன்று (ஏப்.12) அறிவித்துள்ளார்.
மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் நெல்லை, குமரி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் இன்று மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. *உங்கள் பகுதியில் மழை பெய்தால் கமெண்ட் செய்யவும்*
நெல்லை மாவட்ட வேலை வாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் பெருமாள்புரத்தில் வரும் 17-ம் தேதி காலை 10 மணி முதல் 1 மணி வரை சிறிய அளவிலான வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. முகாமில் கலந்து கொள்ள மாவட்ட கலெக்டர் மரு.இரா.சுகுமார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். முகாமில் கலந்து கொள்ள இங்கே <
திசையன்விளை அருகே இடையன்குடி யாதவர் வடக்கு தெருவை சேர்ந்தவர் வெண்ணிமலை (48). லோடு தொழிலாளி. இவர் நேற்று (ஏப்.11) காலை தோட்டத்திற்கு வாழைத் தார் வெட்டுவதற்கு சென்றுள்ளார். பைக்கில் சாலையில் சென்று கொண்டிருந்த போது அறுந்து கிடந்த மின் கம்பி மீது அவர் சென்றுள்ளார்.பைக்கின் சக்கரத்தில் மின்கம்பி சிக்கி, மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர் .
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் புதிய மாநில தலைவராகத் தேர்வாகியுள்ள சகோதரர் நயினார் நாகேந்திரனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் திமுகவின் மக்கள் விரோத ஆட்சியை அகற்ற முழு வீச்சுடன் செயல்பட மீண்டும் ஒருமுறை எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தமமுக தலைவர் ஜான் பாண்டியன் வாழ்த்து தெரிவித்தார்.
அமைச்சர் பொன்முடியின் பெண்களை இழிவுபடுத்தும் வகையிலான ஆபாசமான பேச்சு மிகவும் கண்டிக்கத்தக்கது. ஒரு பொறுப்புமிக்க அமைச்சராக, சமூகத்தில் பெண்களுக்கு மரியாதையையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டியவர், இத்தகைய அநாகரிகமான பேச்சால் சமூக மதிப்புகளை சீர்குலைக்கிறார்.
இது பெண்களின் கண்ணியத்திற்கு எதிரான செயல் என தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவனத் தலைவர் ஜான்பாண்டியன் இன்று கன்னடம் தெரிவித்துள்ளார
திருநெல்வேலி மாவட்டம் உட்கோட்ட இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி மானூர், ஏர்வாடி, உவரி ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும், வீரவநல்லூர், பாப்பாக்குடி காவல் நிலையங்களின் உதவி ஆய்வாளர்களும், இன்று [ஏப்.11] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். வள்ளியூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சதீஷ்குமார் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார்.
நெல்லை மாவட்ட கலெக்டர் சுகுமார் இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பு; நெல்லை, பாளையங்கோட்டை மானூர், சேரன்மகாதேவி, திசையன்விளை, அம்பாசமுத்திரம், நாங்குநேரி ராதாபுரம் வட்டங்களில் சிறுவகை கனிம குவாரி மற்றும் சுரங்க குத்தகை உரிமம் பதிவு சான்று பெறுவதற்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.