Tirunelveli

News October 7, 2025

பிரேக்கிங்: கவின் கொலை வழக்கு; ஜாமீன் கோரி எஸ்ஐ மீண்டும் மனு

image

கவின் ஆணவக்கொலை வழக்கில் கைதான சுர்ஜித்தின் தந்தை சரவணன் (எஸ்.ஐ.) மற்றும் சுர்ஜித் நெல்லை சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமின் கோரி மனு தாக்கல். கடந்த மாதம் தாக்கல் செய்யபட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், மீண்டும் மனு சமர்ப்பித்துள்ளார். விரைவில் இந்த மனுக்குறித்து விசாரணை நடைபெற உள்ளது.

News October 7, 2025

BREAKING: நெல்லையில் பந்த்; டவுன் சாலை வெறிச்சோடியது

image

நெல்லை மாநகரில் பகல் நேரங்களில் கனரக வாகனங்கள் செல்வதற்கு மாநகராட்சி தடை விதித்துள்ளது. இதனால் தங்களுக்கு வியாபாரம் பாதிக்கப்படும் எனக் கூறிய வணிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து இன்று நெல்லை மாநகரில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. டவுன் பகுதியில் கடையடைப்பு காரணமாக வெறிச்சோடி காணப்பட்டது.

News October 7, 2025

நெல்லை: மின் கம்பங்களில் பேனர் வேண்டாம் – இபி

image

திருநெல்வேலி மின் பகிர்மான கழகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: மின் கம்பங்களில் கொடி பதாகை பேனர் போன்றவற்றை கட்டக்கூடாது. அவ்வாறு செய்வதால் மின் சேவைக்கு இடையூறு ஏற்படும். மின் பணியாளர்கள் கம்பங்களில் ஏறி பணி செய்வதற்கு சிரமப்படுவார்கள் எனவே மின்கம்பங்களில் பேனர்களை கட்டுவதை தவிர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

News October 7, 2025

நெல்லை: கூட்டுறவு சங்கங்களில் காலிப்பணியிடம் அறிவிப்பு

image

நெல்லை மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் நேரடியான நியமனம் மூலம் நியமிக்கப்படும் உதவியாளர் காலிப் பணியிடங்கள் குறித்த திருந்திய இட ஒதுக்கீடு விவரம் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் drbtny.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான கூடுதல் விபரங்களை 0462560575 என்ற கைப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என இணைப்பதிவாளர் முருகேசன் தெரிவித்துள்ளார்.

News October 7, 2025

நெல்லையில் விஏஓ உயிரிழப்பு

image

பாளை அருகே கிருஷ்ணாபுரம் கோதா நகரை சேர்ந்த வி ஏ ஓ சக்திவிக்னேஸ்வரன் என்பவர் கடன் தொல்லை காரணமாக கடந்த 4ம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதனை அறிந்த குடும்பத்தினர் அவரை மீட்டு பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று விஏஓ சக்தி விக்னேஸ்வரன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சிவந்திபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

News October 7, 2025

நெல்லை சொத்து வரியில் தள்ளுபடி – ஆணையர்

image

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் மோனிகா ராணா விடுத்துள்ள அறிவிப்பு: நெல்லை மாநகராட்சிக்கு 25-26ம் ஆண்டிற்கான இரண்டாம் அரையாண்டுக்கு சொத்து வரியை 31 .10. 25ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தும் வரி விதிப்பு தாரர்களுக்கு சொத்து வரி தொகையில் 5% (அதிகம் பட்சம் 5 ஆயிரம் ரூபாய்) தள்ளுபடி வழங்கப்படும். அக்டோபர் மாதம் முழுவதும் அனைத்து சனிக்கிழமைகளிலும் கணினி வரிவசூல் மையங்கள் செயல்படும்.

News October 7, 2025

நெல்லை: முன்பதிவில்லா ரயில் 1 கோடி வசூல்

image

நெல்லை – சென்னை இடையே ஆயுத பூஜை விடுமுறை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை முன்பதிவு இல்லாத ரயில் இயக்கப்பட்டது. இதுபோல் மதுரை- சென்னை இடையே இயக்கப்பட்டது. இதன் மூலம் மதுரை கோட்டத்தில் முன்பதிவு இல்லாத ரயில் பயணச்சீட்டு விற்பனை 1.03 கோடி வருவாய் பெற்றுள்ளது. இந்த ரயில்களில் தலா 17 முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

News October 7, 2025

நெல்லை: இது உங்க போன்-ல கண்டிப்பாக இருக்கனும்!

image

ஆதார் முதல் அரசின் அனைத்து சேவைகள் வழங்கும் செயலிகள் போனில் உள்ளதா? இதை பதிவிறக்கம் செய்து அரசு அலுவலகங்களுக்கு இனி அலையாதீங்க
1. UMANG – ஆதார், கேஸ் முன்பதிவு,PF
2. AIS – வருமானவரித்துறை சேவை
3.DIGILOCKER – பிறப்பு, கல்வி சான்றிதழ்கள்
4.POSTINFO – போஸ்ட் ஆபிஸ் சேவை
5.BHIM UPI – பைசா செலவில்லமால் வங்கி பரிவர்த்தனை
6.M.Parivahan – வண்டி ஆவணம், டிரைவிங் லைசன்ஸ்
இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News October 7, 2025

நெல்லை:மின் கம்பங்களில் கால்நடைகளை கட்ட வேண்டாம்

image

திருநெல்வேலி மின் உற்பத்தி மற்றும் விநியோக கழகம் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பு: கால்நடைகளை எக்காரணம் கொண்டும் மின் கம்பங்களிலோ அல்லது அதனை தாங்கும் ஸ்டே கம்பிகளிலோ, டிரான்ஸ்பர்மார்களிலோ கட்டக்கூடாது. இது மின் விபத்துக்கு வழிவகுக்க கூடும். எனவே மின் கம்பங்களில் மாடு, ஆடு போன்ற கால்நடைகளை கட்டுவதை தவிர்த்து மின் வாரியத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 6, 2025

நெல்லை – சென்னை வந்தே பாரத் ரயில் நேரம் மாற்றம்

image

திருநெல்வேலி சென்னை எக்மோர் இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 20 பெட்டிகளோடு இயக்கப்படும் நெல்லை – சென்னை இடையேயான வந்தே பாரத் ரயில் வழக்கமாக நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து காலை 6.05 மணிக்கு புறப்படும். இந்நிலையில் ரயில் வரும் டிசம்பர் 7ம் தேதி முதல் காலை 6.00 மணிக்கு நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் என தென்னக ரயில்வே அறிவிப்பு.

error: Content is protected !!