India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
முக்குலத்தோர் சமுதாய அமைப்புகள் சார்பில் நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பின் நிறுவனத் தலைவர் மகாராஜா நேற்று(அக்.02) விடுத்துள்ள அறிக்கையில், ஆறு பங்கு நாட்டார் நலச்சங்கத்தின் தலைவர் துர்கலிங்கத்தின் கடையை சூறையாடி பூட்டு போட்டு அட்டூழியம் செய்த ரவுடிகள் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி இன்று நெல்லை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட போவதாக தெரிவித்தார்.
நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் பிட் லைன் எண் 1ல் ரயில் பாதை புதுப்பித்தல் பணி கடந்த செப்டம்பர் 9ந் தேதி தொடங்கியது. இந்த பணி நிறைவடையாததால் திருச்செந்தூரில் இருந்து நெல்லைக்கு காலை 8:15 மணிக்கு புறப்படும் ரயிலும் (எண்.06674), மாலை 4:30 மணிக்கு நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு புறப்படும் ரயிலும் (06409) அக்டோபர் 8ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீந்தமிழ் கலை இலக்கிய அறக்கட்டளை சார்பில் தாமிரபரணியின் தொன்மையும், சிறப்பும் என்ற தலைப்பில் ஆய்வு கட்டுரை வருகின்ற 20ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. இதில் கட்டுரை அனுப்ப விரும்புபவர்கள் ஆய்வு கட்டுரையை வருகின்ற 12ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். மேலும், விவரங்களுக்கு 75488-10067 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தீந்தமிழ் கலை இலக்கிய அறக்கட்டளை இன்று வெளியிட்டுள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மும்பை – நெல்லை இடையே தீபாவளி சிறப்பு ரயிலை இயக்க தென்னக ரயில்வேக்கு மத்திய ரயில்வே தலைமை பயணிகள் போக்குவரத்து மேலாளர் குஷால் சிங் பரிந்துரை செய்துள்ளார். இந்த ரயில் மங்களூர், கொல்லம், புனலூர், தென்காசி, அம்பை, சேரன்மகாதேவி வழியாக இயக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த ரயிலின் பயண நேரமும் 27 மணி நேரமாக இருக்கும் என கூறப்படுகிறது.
BSNL பொது மேலாளர் கிருஷ்ணகுமார் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, BSNL நிறுவனம் அனைத்து பகுதி மக்களுக்கும் 4ஜி சேவை வழங்குவதற்கான நடவடிக்கையில் தீவிரமாக இறங்கி உள்ளது. இதற்காக 200 டவர்கள் அமைக்கப்பட்டு பணிகள் முடிவடைந்து விட்டன. மீதமுள்ள டவர்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. பொதுமக்கள் எதிர்பார்க்கும் தரம் இந்த சேவையில் இருக்கும் என தெரிவித்தார்.
செய்துங்கநல்லூரை சேர்ந்த காமராஜர் என்பவர் தாக்கல் செய்த மனு ஐகோர்ட் மதுரை கிளையில் நேற்று மீண்டும் நீதிபதிகள் சுவாமிநாதன், புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தாமிரபரணி நதி தொடங்கும் இடம் முதல் முடியும் இடம் வரை உள்ளாட்சி நிர்வாகங்கள் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும். அதற்கான திட்டம் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். தேவைப்பட்டால் நாங்களே ஆய்வு செய்வோம் எனக்கூறி விசாரணையை தள்ளிவைத்தனர்.
பாளை., அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் மருத்துவ சிகிச்சை பிரிவு சார்பில் PINK அக்டோபர் மாதத்தை முன்னிட்டு ஒரு மாதம் நடக்கும் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்வுகள் தொகுப்பு வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. புற்றுநோய் மருத்துவ சிகிச்சை பிரிவு துறைத் தலைவர் ஆறுமுகம் வரவேற்றார். மருத்துவமனை முதல்வர் ரேவதி பாலன் தலைமை தாங்கி கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.
நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் நேற்று (அக்.1) விடுத்துள்ள அறிக்கையில்; மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 2A முதன்மை தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் மூன்றாம் தேதி நடைபெற உள்ளது. திறன் வாய்ந்த ஆசிரியர்கள் ஸ்மார்ட் போர்ட் மூலம் நடத்துவார்கள். விருப்பமுள்ளவர்கள் bit.ly/group2main என்ற இணைப்பில் பதிவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
நெல்லை பழைய பேட்டை, பொருட்காட்சி திடல் துணை மின் நிலையத்தில் நாளை(அக்.3) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை பெறவுள்ளன. இதனால், காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை திருநெல்வேலி டவுன், மேலரத வீதி மேல் பகுதிகள், தெற்கு ரத வீதி தெற்கு பகுதிகள், வடக்கு ரத வீதி வடக்கு பகுதிகள், பழைய பேட்டை, காந்தி நகர் ,திருப்பணி கரிசல்குளம், வாகைகுளம், குன்னத்தூர், பேட்டை பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
நெல்லை ராணி அண்ணா அரசு மகளிர் கலைக் கல்லூரி என்எஸ்எஸ் மாணவிகள் உள்ளிட்ட 600 மாணவிகள் இணைந்து இன்று (அக்.1) கல்லூரி மைதானத்தில் “தூய்மையே சேவை” என்ற நடப்பு ஆண்டுக்கான திட்ட வடிவில் நின்று தூய்மை உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் சுனிதா மற்றும் என்எஸ்எஸ் திட்ட அலுவலர்கள் செய்திருந்தனர்.
Sorry, no posts matched your criteria.