India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருநெல்வேலி புறநகர் பகுதியில் அதிமுக பொதுக்கூட்டம் பல்வேறு பகுதிகளில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் வருகின்ற 20 ஆம் தேதி புறநகர் மாவட்ட பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி நெல்லைக்கு வருகை தர உள்ளார்.
தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழக நெல்லை துணை மண்டலம் சார்பில் பயனாளிகளுக்கான குறை தீர்க்கும் முகாம் வருகிற 9ம் தேதி மாலை 4 மணிக்கு இஎஸ்ஐ துணை மண்டல அலுவலகத்தில் நடைபெற உள்ளது. எனவே இஎஸ்ஐ பயனாளிகள் குறை எதுவும் இருந்தால் முகாமில் பங்கேற்று நிவர்த்தி செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் விடுத்துள்ள செய்தி குறிப்பில், வானிலை முன்னெச்சரிக்கை வழங்குவதற்காக டிஎன் அலர்ட் என்ற கைபேசி செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தங்கள் இருப்பிடம் சார்ந்த வானிலை, முன்னெச்சரிக்கை செய்திகளை தமிழிலேயே அறிந்து கொள்ள முடியும். நெல்லை மாவட்டத்தில் பேரிடர் கட்டுப்பாட்டு அறை செயல்படுகிறது. இதில், கட்டணமில்லா தொலைபேசி எண் 1077இல் தொடர்பு கொள்ளலாம் என்றார்.
நெல்லை மாவட்டத்தில் கடந்த 10 மாதங்களில் இணையதள மோசடி மூலம் 8 கோடி ரூபாய் சுருட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக வந்த 500 புகார்களில் 200 வங்கி கணக்குகளில் இருந்த ரூபாய் 10.5 கோடியை சைபர் க்ரைம் போலீசார் முடக்கி உள்ளனர். இதில் சுமார் 20 லட்சம் மீட்கப்பட்டு பணத்தை இழந்தவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மற்றவர்களின் பணத்தை மீட்டுக் கொடுக்கும் பணியில் சைபர் கிரைம் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல தனி வட்டாட்சியர் ஜெயலட்சுமி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் அலுவலகத்தில் இன்று(அக்.04) மாலை பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு அந்தத் துறையைச் சேர்ந்த பலர் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இவர் நெல்லை தாலுகாவில் தாசில்தாராக ஒரு வருடம் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
திருப்பணி கரிசல்குளத்தில் இருந்து நெடுங்குளம், மேகமுடையார் குளம் வழியாக சத்திரம் புது குளத்திற்கு வெள்ள நீரை திருப்புவதற்காக ரூ.3.79 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்ட பணிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று(அக்.04) காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஆட்சியர் கார்த்திகேயன் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு இனிப்பு வழங்கினார்.
அக்டோபர் மற்றும் நவம்பர் டிசம்பர் மாதங்களில் மழைக்காலம் தொடங்கியுள்ளதால் டெங்கு காய்ச்சல் உற்பத்தி செய்யும் ஏடிஸ் கொசுக்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே சிறிய வீடுகளாக இருந்தாலும் கொசு புழு முட்டை இருப்பது கண்டறியப்பட்டால், குறைந்தபட்சம் ரூ.20 முதல் அபராதம் விதிக்க வேண்டும் என சுகாதார ஆய்வாளர்கள் களப்பணியாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியதாக தகவல்.
நெல்லை மாவட்டத்தில் முன்பு சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் என இரு தனித்தொகுதிகள் இருந்தன. நெல்லை மாவட்டத்தில் இருந்து தென்காசி மாவட்டம் பிரிக்கப்பட்ட பின்னர் நெல்லைக்கு என ஒரு தனி தொகுதி கூட இல்லை. எனவே நெல்லை மாவட்டத்திற்கு ஒரு தனி தொகுதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என ஆதிதிராவிட நலக்குழு கூட்டத்தில் மாவட்ட ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் குழு உறுப்பினர் ஐயப்பன் நேற்று மனு அளித்தார்.
நெல்லை கல்லூரி பேராசிரியரை வெடிகுண்டு வீசி அரிவாளால் வெட்டிக்கொன்ற வழக்கு நெல்லை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று(அக்.,3) இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் ராக்கெட் ராஜா உட்பட 12 பேர் ஆஜராகினர். ஒருவர் ஆஜராகததால் இந்த வழக்கு வருகிற 21 ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கால் நீதிமன்ற நுழைவு வாயிலில் தீவிர சோதனைக்கு பின்னரே வாகனங்கள் அனுமதிக்கப்பட்டனர்.
நெல்லை பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.பி. ராபர்ட் புரூஸ் பல்வேறு பகுதிகளில் மக்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார். இன்று(அக்.,4) காலை 7 மணிமுதல் 9.,30 மணி வரை வீரவநல்லூர் பகுதியில் அவர் நன்றி அறிவிப்பு கூட்டங்களில் கலந்துகொள்கிறார். மாலையில் 5 மணி முதல் விக்ரமசிங்கபுரம் பகுதிகளில் நன்றி அறிவிப்பு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். இதற்கான ஏற்பாடுகளை கட்சி நிர்வாகிகள் செய்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.