Tirunelveli

News October 28, 2024

நெல்லையில் ‘கேஸ்’ பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

image

நெல்லை மாவட்ட எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை( அக்.,29) மாலை 5 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா தலைமை தாங்குகிறார். எரிவாயு ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்கின்றனர். இதில் எரிவாயு நுகர்வோர் பங்கேற்று தங்கள் குறைகளை தெரிவித்து தீர்வு பெறலாம் என டிஆர்ஓ தெரிவித்துள்ளார்.

News October 28, 2024

சென்னை, கோவையிலிருந்து வருவோர் கவனத்திற்கு..!

image

தீபாவளி பண்டிகை முன்னிட்டு சென்னை, கோவை பகுதிகளில் இருந்து நெல்லை வருபவர்களுக்கு வசதியாக இன்று(அக்.,28) பிற்பகல் 3 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து AC சிறப்பு ரயில்(06073) நெல்லைக்கு புறப்படுகிறது. இந்த ரயில் காட்பாடி, சேலம், திருப்பூர், கோவை, பொள்ளாச்சி வழியாக நாளை காலை 7:15 மணிக்கு நெல்லை வரும். இதற்கு முன்பதிவு நடக்கிறது. SHARE IT.

News October 28, 2024

நெல்லை: தேவர் ஜெயந்தி விழாவிற்கு அழைப்பு!

image

தேவர் ஜெயந்தி விழா அக்டோபர் 30 ஆம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் நெல்லையில் 501 பால்குடம் ஊர்வலமும், 1000 பேருக்கு அன்னதானம் நிகழ்ச்சியும் ஜங்ஷனில் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ள பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழக நிறுவன தலைவர் பவானி வேல்முருகன் இன்று அழைப்பு விடுத்துள்ளார்.

News October 28, 2024

நெல்லை MP ராபர்ட் புரூஸ் பங்கேற்கும் இன்றைய நிகழ்ச்சிகள்

image

நெல்லை ப்ரூஸ் எம்பி புரூஸ் இன்று(அக்.,28) பங்கேற்கும் நிகழ்ச்சி விவரங்கள். ➤காலை 9:30 மணிக்கு பாபநாசம் அணை திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். ➤தொடர்ந்து முகிலன்விளை திருமண நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். ➤மதியம் 12:30 மணிக்கு இடிந்தகரை மீனவர்களுடன் சந்திக்கிறார். ➤மாலை 5 மணிக்கு களக்காடு சிஎஸ்ஐ கிறிஸ்தவ ஆலய சபை ஊழியர் இல்ல விழாவை தொடர்ந்து அசன பண்டிகையில் பங்கேற்கிறார்.

News October 28, 2024

நெல்லையில் முக்கிய ரயில் திடீர் ரத்து!

image

நெல்லை வழியாக குமரியில் இருந்து புதுச்சேரி செல்லும் வாராந்திர விரைவு ரயில்(எண் 16862) பெட்டிகள் பற்றாக்குறை காரணமாக இரு மார்க்கத்திலும் இன்று(அக்.,28) ரத்து செய்யப்பட்டுள்ளது. பிற்பகல் 2 மணிக்கு குமரியிலிருந்து இந்த ரயில் புறப்பட வேண்டிய நிலையில் இந்த விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் பயணிகள் மாற்று ஏற்பாடு செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News October 28, 2024

அம்பை: 3 டன் ரேசன் அரிசி கடத்திய 5 பேர் கைது!

image

அம்பை வட்டார பகுதியில் ரேஷன் அரிசி கடத்துவதாக டிஎஸ்பி சதீஷ்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து நேற்று(அக்.,28) அந்த பகுதியில் போலீசார் தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது அந்த வழியாக வந்த வேனில் 3 டன் அரிசி கடத்தல் முயன்றது தெரிய வந்தது. ஆண்டி(35), முப்புடாதி(29), முன்னீர்பள்ளம் முருகன்(27), சிவக்குமார்(26), மதன்குமார்(29) ஆகியோரை கைது செய்து அரிசி மற்றும் வேன் பறிமுதல் செய்தனர்.

News October 28, 2024

தாதர் – திருநெல்வேலி ரயில் நேரம் மாற்றம்

image

தாதர் – திருநெல்வேலி இடையே மதுரை வழியாக இயக்கப்படும் ரயில்களின் நேரத்தில் வருகின்ற நவம்பர் 1 ஆம் தேதி முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.அதன்படி வியாழக்கிழமைகளில் இயக்கப்படும் தாதர் திருநெல்வேலி ரயில் (22629) இரவு 8:40 மணிக்கு தாதரில் இருந்து புறப்பட்டு சனிக்கிழமை அதிகாலை 4:10 மணிக்கு திருநெல்வேலிக்கு சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 27, 2024

விஜய் பேச்சுக்கு நெல்லை முபாரக் வரவேற்பு

image

விக்கிரவாண்டியில் இன்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் மாநாட்டில் அதன் தலைவர் விஜய் கட்சியின் கொள்கை கோட்பாடுகள் குறித்து பேசினார். இதற்கு எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மாநாட்டில் சூளுரைத்த தளபதி விஜய்யின் கண்ணிய பேச்சை வரவேற்கிறேன் என தெரிவித்துள்ளார்.

News October 27, 2024

 இரவு ரோந்து காவலர்களின் விபரம் வெளியீடு

image

நெல்லை மாநகர காவல்துறை சார்பில் இன்று (அக். 27) மாநகர காவல் ஆணையாளர் ரூபேஸ் குமார் மீனா உத்தரவின்படி பொது மக்களின் உதவிக்காக இரவு ரோந்து காவலர்கள் நியமனம் செய்யப்பட்டு அவர்களின் பெயர், தொடர்பு எண்கள் உள்ள அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த காவலர்களை இரவு நேர உதவிக்கு மாநகர பகுதி பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என மாநகர காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

News October 27, 2024

 இரண்டு, நான்கு சக்கர வாகனங்கள் ஏலம் அறிவிப்பு

image

திருநெல்வேலி மாநகர காவல் துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட இரண்டு நான்கு சக்கர வாகனங்கள் வருகின்ற நவம்பர் 4 ஆம் தேதி காலை 10 மணிக்கு நெல்லை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் வைத்து பொது ஏலத்தில் விடப்படவுள்ளது. இதில் ஏலம் எடுக்க விரும்புவோர் வருகின்ற 3 ஆம் தேதி வாகனங்களை பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!