Tirunelveli

News October 29, 2024

தீபாவளியையொட்டி நெல்லையில் 54 இடங்களில் வாகன சோதனை

image

நெல்லையில் தீபாவளியை முன்னிட்டு மாவட்ட காவல்துறை சார்பில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், துணை காவல் கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள் என சுமார் 1400 பேர் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். 34 இருசக்கர வாகனங்கள் மூலமாகவும் 43 நான்கு சக்கர வாகனங்கள் மூலமாகவும் 24 மணி நேரமும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். 54 இடங்களில் வாகன தணிக்கை நடத்தப்படும் என எஸ்பி அலுவலகம் தெரிவித்துள்ளது.

News October 29, 2024

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை

image

திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் சமூக வலைதளங்களை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர். இதுபோன்று பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவு செய்து பரப்புபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News October 28, 2024

நெல்லை மாவட்டத்தில் டிஎஸ்பி தலைமையில் இரவு ரோந்து பணி

image

நெல்லை புறநகர் மாவட்ட பகுதிகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பஜார் பகுதிகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது. நள்ளிரவு 12 மணி வரை பொதுமக்கள் கூட்டம் காணப்படுவதால் அசம்பாவித சம்பவங்களை தடுக்க நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவின் பேரில் இரவு ரோந்து அதிகாரிகள் காவலர்கள் பெயர் விபரங்கள் தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களை பொதுமக்கள் எந்த நேரமும் தொடர்பு கொள்ளலாம்.

News October 28, 2024

நெல்லை: இரவு ரோந்து காவலர்கள் விபரம்

image

நெல்லை மாநகர காவல் ஆணையாளர் ரூபேஸ் குமார் மீனா உத்தரவின்படி பொதுமக்களின் உதவிக்காக இன்று (அக்.28) இரவு ரோந்து காவலர்கள் நியமனம் செய்யப்பட்டு அவர்களின் பெயர், தொடர்பு எண் உள்ளிட்டவைகள் அடங்கிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேர உதவிக்கு அட்டவணையில் உள்ள காவலர்களை மாநகர பகுதி மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என மாநகர காவல் துறை கேட்டுக் கொண்டுள்ளது.

News October 28, 2024

நெல்லை: வரைவு வாக்காளர் பட்டியல் நாளை வெளியீடு

image

நாளை (அக்.29) காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட உள்ளார் என மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று (அக்.28) தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.

News October 28, 2024

TN ALERT App – 1 லட்சம் பேர் டவுன்லோட்

image

மழை வெள்ளம், புயல் பாதிப்பு போன்ற இடர்பாடுகளின் விபரங்களை தெரிந்து கொள்ளவும், வானிலை நிலவரங்களை அறிந்து கொள்வதற்கும் TN ALERT என்ற App அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதை ஒரு லட்சம் பேர் டவுன்லோட் செய்துள்ளனர். அனைவரும் டவுன்லோட் செய்து பயனடையுமாறு நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 28, 2024

தீபாவளி முன்னெச்சரிக்கை நடவடிக்கை – காவல்துறை அறிவுரை

image

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று(அக்.28) வெளியிட்ட தீபாவளி திருநாள் முன்னெச்சரிக்கை அறிவுரைகள்; அதிக ஒலி எழுப்பும் மற்றும் ஆபத்தான பட்டாசுகளை வெடிப்பதை தவிர்க்கவும். குழந்தைகள் பட்டாசு வெடிக்கும் போது பெரியவர்கள் கண்காணிக்க வேண்டும். மின் வயர் இல்லாத திறந்த வெளியில் பட்டாசுகளை வெடிக்க வேண்டும். பயன்படுத்திய பட்டாசுகளை குப்பை தொட்டியில் போட்டு அப்புறப்படுத்தவும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

News October 28, 2024

விஜய்யை விமர்சித்த சபாநாயகர் அப்பாவு!

image

பாபநாசத்தில் சபாநாயகர் அப்பாவு இன்று(அக்.,28) அளித்த பேட்டியில், நடிகர் விஜய்க்கு எனது வாழ்த்துகள். புஸ்ஸி ஆனந்தை கிரிமினல் என விஜயின் தந்தை கூறியிருக்கிறார். அவரை எப்படி கட்சியின் பொதுச்செயலாளராக ஆக்கினார் என தெரியவில்லை. வருமான வரித்துறையினரிடம் சிக்கியபோது நடிகர் விஜய்க்கு ஆதரவாக திமுகதான் குரல் கொடுத்தது. ஒருவர் மற்றவரை குறை சொல்லும்போதுதான் உண்மையாக இருக்க வேண்டும் என்றார்.

News October 28, 2024

சஷ்டி: நெல்லை போக்குவரத்துக் கழகம் புது வசதி!

image

நெல்லை அரசு போக்குவரத்துக் கழக மண்டல இயக்குநர் தசரதன் உத்தரவுப்படி, கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் செல்லும் பக்தர்கள் வசதிக்காக அங்குள்ள பகத்சிங் பேருந்து நிலையத்திலிருந்து கோயில் நாழிக்கிணறு பஸ் நிலையம் வரை ரூ.10 கட்டணத்தில் சர்க்கிள் பஸ் இயக்கம் இயக்கப்படுகிறது. இந்த பஸ்ஸில் பெண்கள், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டணம் கிடையாது. நெல்லை பக்தர்கள் இதை பயன்படுத்திக்கொள்ளலாம்.

News October 28, 2024

நெல்லையில் ‘கேஸ்’ பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

image

நெல்லை மாவட்ட எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை( அக்.,29) மாலை 5 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா தலைமை தாங்குகிறார். எரிவாயு ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்கின்றனர். இதில் எரிவாயு நுகர்வோர் பங்கேற்று தங்கள் குறைகளை தெரிவித்து தீர்வு பெறலாம் என டிஆர்ஓ தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!