India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெல்லை மேலப்பாட்டம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் நேற்று மர்ம கும்பலால் வீடு புகுந்து கொடூரமாக தாக்கப்பட்டார். சாதிய வன்மத்தால் இப்பிரச்னை நடந்ததாக கூறப்படும் நிலையில், இதனை கண்டித்து இன்று(நவ.,5) அவ்வூர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தங்கள் ஊருக்கு 2 தனி பேருந்துகளை இயக்க வேண்டும், 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் வைத்துள்ளனர்.
மக்கள் நீதி மய்யம் நெல்லை மண்டல செயலாளர் டாக்டர் பிரேம்நாத் தனது மகளின் திருமண விழா அழைப்பிதழை சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவனை நேரில் சந்தித்து வழங்கினார். மேலும் தனது பிறந்த நாளை முன்னிட்டு அமைச்சரிடம் வாழ்த்துகளை பெற்றார். இதில் தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் ஜவஹர் உடனிருந்தார்.
நெல்லை மாவட்ட அணைகளில் இன்று(நவ.5) காலை நிலவரப்படி நீர் இருப்பு விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. பாபநாசம் அணையில் 92.80 அடி நீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 400 கன அடி நீர் வருகிறது. பாசனத்திற்காக பாபநாசம் மற்றும் சேர்வலாறு அணைகளில் இருந்து 1348 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. சேர்வலாறு அணை நீர் இருப்பு 98 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணை 64.60 அடி நீர்மட்டம் உள்ளது. வினாடிக்கு 223 கன அடி நீர் வருகிறது.
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நாளை(நவ.06) நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்ள சபாநாயகர் அப்பாவு பயணம் மேற்கொண்டுள்ளார். செல்லும் வழியில் கோலாலம்பூர் மலேசிய தமிழ் சங்கத்தில் நேற்று அவர் பேசியதாவது, நீங்கள் தமிழ்நாட்டிற்கு வந்து தொழில் தொடங்குங்கள். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தி தாருங்கள். தமிழ்நாட்டில் ஒற்றை சாளர அனுமதி மூலம் நீங்கள் உடனடியாக தொழில் தொடங்கலாம் என்றார்.
நெல்லை மேலப்பாட்டம் கிராமத்தில் வேகமாக காரில் சென்றவர்களை கேள்வி கேட்ட சிறுவனை வீடு புகுந்து அரிவாள் மற்றும் பீர் பாட்டிலால் கொடூரமாக தாக்கிய விவகாரத்தில் முத்துக்குமார், லட்சுமணன், தங்க இசக்கி ஆகிய 3 பேரை பாளையங்கோட்டை தாலுகா போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம், சிறார் நீதி சட்டம், கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நவம்பர் மாதம் மின்வாரிய குறைதீர் கூட்ட தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி 8ஆம் தேதி வள்ளியூர் கோட்ட அலுவலகத்திலும், 12ஆம் தேதி கல்லிடைக்குறிச்சி கோட்ட அலுவலகத்திலும், 15ஆம் தேதி நெல்லை கிராமப்புற கோட்டை அலுவலகத்திலும், 22ஆம் தேதி நெல்லை நகர்ப்புற கோட்டை அலுவலகத்திலும் மின் குறைதீர்க்க கூட்டங்கள் பகல் 11 மணிக்கு நடைபெறும் என மேற்பார்வை பொறியாளர் அகிலாண்டேஸ்வரி தெரிவித்துள்ளார்.
மேலப்பாட்டம் கிராமத்தில் தன் மீது மோதும் நோக்கில் வேகமாக காரில் சென்றவர்களை தட்டி கேட்ட சிறுவனை வீடு புகுந்து அரிவாள் மற்றும் பீர் பாட்டிலால் கொடூரமாக தாக்கிய கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. படுகாயம் அடைந்த சிறுவன் பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான். இது குறித்த தகவல் அறிந்த பாளை தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவனை வெட்டிய கும்பலை தேடி வருகின்றனர்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் செந்தில்குமார் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “அம்பை அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. இது குறித்தான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதனிடையே, வரும் 14-ஆம் தேதி மாஞ்சோலை மக்களை சீமான் சந்தித்து குறைகளை கேட்க உள்ளார்” என தெரிவித்துள்ளார்.
கத்தோலிக்க திருச்சபையின் மதுரை உயர்மறை மாவட்டத்தில் கடந்த 11 ஆண்டுகளாக பதவியில் இருந்த தற்போதைய பேராயர் அந்தோணி பாப்புசாமி ஓய்வு பெற்றார். இதையடுத்து தற்போது கூடுதல் பொறுப்பான பரிபாலகர் என்ற பதவிக்கு பாளையங்கோட்டை மறை மாவட்ட ஆயர் அந்தோணிசாமி சவரிமுத்துவை ரோம் நகரில் உள்ள போப்பாண்டவர் பிரான்சிஸ் நியமித்துள்ளார். புதிய ஆயருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் இரவு நேரங்களில் நடைபெறும் அசம்பாவிதங்களைத் தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவின் பேரில் காவல்துறை கண்காணிப்பாளர் பொன்ரகு தலைமையில் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று இரவு முழுவதும் திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ரோந்து பணிகளில் ஈடுபடுவார்கள். பொதுமக்கள் காவல்துறையின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள எண்களை தொடர்பு கொள்ளலாம்.
Sorry, no posts matched your criteria.