India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நெல்லை சரக டிஐஜி சரவணன் உத்தரவுப்படி நெல்லை சரகத்தில் உள்ள நான்கு மாவட்டங்களிலும், பள்ளி கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்களில் அருகில் உள்ள 476 கடைகளில் ஒரே நேரத்தில் அதிரடியாக காவல்துறையினரால்
போதைப் பொருள்கள் சம்பந்தமாக தீவிர சோதனைகள் நடத்தப்பட்டது.
இதில், தடை செய்யப்பட்ட புகையிலை 31 கிலோ கைப்பற்றப்பட்டு, நான்கு மாவட்டங்களிலும் 30 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் மணிவண்ணன் உத்தரவின்படி இன்று ஜன. 13ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு முதல் நாளை காலை 6 மணி வரை நெல்லை மாநகரப் பகுதியில் காவல் நிலையங்கள் வாரியாக காவல் பணியில் இருக்கும் அதிகாரிகள் விபரத்தை மாநகர காவல் துறை இன்று இரவு வெளியிட்டுள்ளது அவரது கைபேசி எண் விபரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. காவல் உதவிக்கு இவர்களை தொடர்பு கொள்ளலாம். இதனை ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

நெல்லை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இது வேலை செய்யவில்லை என்றால் இங்கே <

முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 1 குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு 1800-425-3993 அழைக்கவும். இந்த தகவலை அனைவரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

சென்னை எழும்பூரில் இருந்து இரவு 11.50 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கபடுகின்றன. இதில் 8 ஏசி பெட்டிகள், 8 இரண்டாம் வகுப்பு பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது. தாம்பரம் , செங்கல்பட்டு , விழுப்புரம் , விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி வழியாக இந்த சிறப்பு ரயில் நெல்லையை சென்றடைகிறது. SHARE பண்ணுங்க..

நெல்லை மக்களே, மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் பொதுமக்களுக்கு இலவச சட்ட ஆலோசனை வழங்குகிறது. இந்த எண்ணுக்கு 72177 11814 போனில் இருந்து மெசேஜ் அனுப்பினால் போதும். உங்கள் (சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு) போன்றவைகளுக்கு இலவசமாக சட்ட ஆலோசனை பெறலாம். இனிமே நீங்க வக்கீல் பார்க்க அவசியமிலை. இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..

நெல்லை மாநகர பேட்டை ஐடிஐ பேருந்து நிறுத்தம் அருகில் இன்று காலை மோட்டார் சைக்கிள் மீது சிப்காட் தனியார் நிறுவன பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் நரிக்குறவர் காலனி சேர்ந்த இரண்டு சிறுவர்கள் காயமடைந்தனர். இதுக்குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை மக்களே, E- ரேஷன்கார்டு இருந்தா பொருள் வாங்க ரேஷன்கார்டு கைல வச்சுக்க வேண்டிய அவசியமில்லை. இங்கு <

நெல்லை தச்சநல்லூரைச் சேர்ந்த முருகன் மனைவி மாடத்தி (40) என்பவர், இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த ஜன.07ந் தேதி கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறில் வீட்டை விட்டு வெளியேறினார். தண்டவாளத்தைக் கடக்கும்போது ரயில் மோதி உயிரிழந்தார். விபத்தில் சிக்கினாரா அல்லது தற்கொலை செய்துகொண்டாரா எனச் சந்திப்பு ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருநெல்வேலி மாநகராட்சியில் 55 வார்டு உறுப்பினர்கள் உள்ள நிலையில் தமிழ்நாடு அரசின் உத்தரவுபடி மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் ஒரு மாற்றுத்திறனாளி நியமன மாமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். மூன்று சக்கர வாகனத்தில் வரும் அவர் மேல் தளத்தில் உள்ள மாமன்ற கூட்டத்தை அரங்கிற்கு செல்வதற்கு சரியான வசதிகள் இல்லாத நிலையில் ரெண்டு பேர் உதவியுடனே மேலே செல்லும் அவலம் உள்ளது.
Sorry, no posts matched your criteria.