Tirunelveli

News November 6, 2024

மாணவருக்கு வெட்டு: 9 பேர் மீது 8 பிரிவுகளில் வழக்கு!

image

நெல்லை மேலப்பாட்டம் பகுதியை சேர்ந்த மனோஜ் குமார்(18) என்ற பாலிடெக்னிக் மாணவர் நேற்று வீடு புகுந்து அருவாளால் வெட்டப்பட்டார். இது குறித்து பாளை., தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வரும் நிலையில், 9 பேர் மீது 8 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்திருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் தெரிவித்தார். தனிப்படையினர் குற்றவாளிகளை கைது செய்ய விரைந்துள்ளதாக கூறினார்.

News November 6, 2024

மீனவர்களின் தண்டனை காலம் குறைப்பு!

image

பஹ்ரைன் நாட்டில் நெல்லையை சேர்ந்த 28 பேரின் தண்டனை காலம் குறைக்கப்பட்டுள்ளது. ஈரான் நாட்டில் மீன்பிடி தொழிலுக்காக சென்ற நெல்லையை சேர்ந்த மீனவர்கள் 28 பேர் கடந்த செப்.,11 அன்று பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அத்தண்டனை 3 மாதமாக குறைக்கப்பட்டுள்ளது. பல்வேறு கட்ட முன்னெடுப்புகளுக்கு பிறகு தண்டனை குறைக்கப்பட்டுள்ளது.

News November 6, 2024

பாதுகாப்பாக இலக்கை அடையுங்கள்: மாநகர காவல் துறை

image

நெல்லை மாநகர காவல் துறையினர் பொதுமக்களுக்காக பல்வேறு குற்ற செயல்கள் குறித்தும், இணையதளம் மோசடிகள் குறித்தும், சாலை விபத்துக்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் இன்று(நவம்பர் 5) போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றி பயணம் செய்து பாதுகாப்பாக இலக்கை அடையுங்கள் என புகைப்படத்துடன் விழிப்புணர் ஏற்படுத்தியுள்ளனர்.

News November 6, 2024

நெல்லை சட்டக் கல்லூரியில் புதிய முதல்வர் பொறுப்பேற்பு

image

திருநெல்வேலி அரசு சட்டக்கல்லூரி முதல்வராக பணியாற்றிய லதா வேலூர் சட்டக் கல்லூரிக்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து சென்னையில் பணியாற்றிய முனைவர் கயல்விழி புதிய முதல்வராக இன்று(நவ.,5) பொறுப்பேற்றார். அவருக்கு மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி பணியாளர்கள் நேரில் சென்று வரவேற்று வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

News November 5, 2024

தீபாவளி சிறப்பு ரயிலை தொடர்ந்து இயக்க வலியுறுத்தல்!

image

நெல்லை, தென்காசி மாவட்ட பயணிகள் நலன் கருதி நெல்லை – தாம்பரம் இடையே தீபாவளி சிறப்பு ரயில் தென்காசி மார்க்கமாக இயக்கப்பட்டது. 2 வழித்தடத்திலும் இந்த ரயில் தீபாவளிக்கு முன்னரும் பின்னரும் இயக்கப்பட்டது. இது பயணிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்தது. எனவே இந்த ரயிலை ஞாயிறுதோறும் தொடர்ந்து சிறப்பு ரயிலாக இயக்க வேண்டும் என இரு மாவட்ட பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

News November 5, 2024

சிறுவன் வெட்டப்பட்ட விவகாரத்தில் 4 பேர் கைது: நெல்லை SP

image

திருநெல்வேலி மேலப்பாட்டத்தில் நேற்று மாலை 17 வயது சிறுவன் கொடூரமாக 10 பேர் கும்பலால் அரிவாளால் வெட்டப்பட்டார். தொடர்ந்து அவரது உறவினர்கள் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த சம்பவம் மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில், இவ்விவகாரம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக எஸ்பி சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.

News November 5, 2024

நெல்லை அருகே கொடூர தாக்குதல்: தனி பஸ் விட கோரிக்கை!

image

நெல்லை மேலப்பாட்டம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் நேற்று மர்ம கும்பலால் வீடு புகுந்து கொடூரமாக தாக்கப்பட்டார். சாதிய வன்மத்தால் இப்பிரச்னை நடந்ததாக கூறப்படும் நிலையில், இதனை கண்டித்து இன்று(நவ.,5) அவ்வூர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தங்கள் ஊருக்கு 2 தனி பேருந்துகளை இயக்க வேண்டும், 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் வைத்துள்ளனர்.

News November 5, 2024

அமைச்சர் கீதா ஜீவனை சந்தித்த மநீம நெல்லை மண்டல செயலாளர்

image

மக்கள் நீதி மய்யம் நெல்லை மண்டல செயலாளர் டாக்டர் பிரேம்நாத் தனது மகளின் திருமண விழா அழைப்பிதழை சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவனை நேரில் சந்தித்து வழங்கினார். மேலும் தனது பிறந்த நாளை முன்னிட்டு அமைச்சரிடம் வாழ்த்துகளை பெற்றார். இதில் தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் ஜவஹர் உடனிருந்தார்.

News November 5, 2024

நெல்லை மாவட்ட அணைகளின் நீர் இருப்பு விவரம்

image

நெல்லை மாவட்ட அணைகளில் இன்று(நவ.5) காலை நிலவரப்படி நீர் இருப்பு விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. பாபநாசம் அணையில் 92.80 அடி நீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 400 கன அடி நீர் வருகிறது. பாசனத்திற்காக பாபநாசம் மற்றும் சேர்வலாறு அணைகளில் இருந்து 1348 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. சேர்வலாறு அணை நீர் இருப்பு 98 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணை 64.60 அடி நீர்மட்டம் உள்ளது. வினாடிக்கு 223 கன அடி நீர் வருகிறது.

News November 5, 2024

தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அப்பாவு அழைப்பு

image

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நாளை(நவ.06) நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்ள சபாநாயகர் அப்பாவு பயணம் மேற்கொண்டுள்ளார். செல்லும் வழியில் கோலாலம்பூர் மலேசிய தமிழ் சங்கத்தில் நேற்று அவர் பேசியதாவது, நீங்கள் தமிழ்நாட்டிற்கு வந்து தொழில் தொடங்குங்கள். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தி தாருங்கள். தமிழ்நாட்டில் ஒற்றை சாளர அனுமதி மூலம் நீங்கள் உடனடியாக தொழில் தொடங்கலாம் என்றார்.