India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெல்லை மாவட்ட காவல்துறை சார்பில் இரவு நேரங்களில் ஏற்படும் குற்றங்கள் தடுக்க நாள்தோறும் துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. பொதுமக்கள் காவல் உதவிக்கு இவர்களை அணுகலாம்.
நெல்லையில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து பரவலாக மழை பெய்து வருகிறது.தாமிரபரணி ஆற்றில் தற்போது வெள்ளபெருக்கு ஏற்படும் சூழல் இல்லை. இருப்பினும் மழையின் அளவை பொறுத்து ஆற்றில் வரும் நீர் வரத்து கூடவோ, குறையவோ செய்யலாம். நீரின் வேகமும் அதிகமாக இருக்கலாம். பொதுமக்கள் யாரும் தாமிரபரணி ஆறில் இறங்க வேண்டாம் என நெல்லை ஆட்சியர் கார்த்திகேயன் இன்று வெளியிட்ட முக்கிய அறிவிப்பில் கூறியுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று மாலை 4 மணி வரை 95 மில்லி மீட்டர் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் அதிகபட்சமாக பாபநாசத்தில் 20 மில்லி மீட்டரும் அதற்கு அடுத்தபடியாக பாளையங்கோட்டையில் 16 மில்லி மீட்டரும் அம்பாசமுத்திரத்தில் 14 மில்லி மீட்டர், நாங்குநேரியில் 11 மில்லி மீட்டரும், சேரன்மகாதேவியில் 12 மில்லி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.
பேரிடர் காலங்களில் சமூகத்தை பாதுகாக்க திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயல்படுவது குறித்து மாவட்ட நிர்வாகம் இன்று அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் சமூக வலைதள பொறுப்பாளர்கள் படத்தில் காட்டப்பட்டுள்ள QR ஸ்கேன் மூலம் இணைந்து மாவட்ட நிர்வாகத்துடன் பேரிடர் மேலாண்மை குறித்து விழிப்புணர்வு பெற்று செயல்படலாம் என தெரிவித்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் தற்பொழுது பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மழை காலங்களில் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறும், மின்சாரம் சம்பந்தமான பொருட்களை கையாளும்போதும், வெளியில் செல்லும்போதும் கவனமுடன் இருக்குமாறும், ஆறு, குளம் போன்ற இடங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறும் எஸ்பி சிலம்பரசன் கேட்டுக் கொண்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் மழை பெய்து வரும் நிலையில் அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளரும் திருநெல்வேலி மாவட்ட முன்னாள் செயலாளருமான பாப்புலர் முத்தையா அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் தொடர் மழையால் பாதிக்கப்படும் பொதுமக்கள் 9443555503 என்ற தன்னுடைய எண்ணை தொடர்பு கொள்ளலாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ள நிலையில், தமிழகத்தின் அநேக பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்நிலையில் குமரி உட்பட நாகை, நெல்லை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இன்று (நவ.20) கனமழை முதல் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
நெல்லை மாவட்டத்தில் நேற்று முதல் இன்று(நவ.20) காலை வரை பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் கனமழையால் நாலு முக்கு பகுதியில் 166 மி.மீ., ஊத்து பகுதியில் 154 மி.மீ., காக்காச்சியில் 136 மி.மீ. என கடந்த 24 மணி நேரத்தில் இன்று காலை 10 மணி வரை நிலவரப்படி 100 செ.மீ. மழை பதிவாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நெல்லை மாவட்டம் முழுவதும் கனமழை பெய்து வரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளது. அதில் மக்கள் மழை நேரங்களில் டார்ச் லைட், வானொலி பெட்டி போன்றவை தயாராக வைத்திருக்க வேண்டும். குடை மற்றும் மூங்கில் கம்பு ஒன்றை வைத்திருக்க வேண்டும். முதலுதவி பெட்டி வைத்திருக்க வேண்டும் என பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
நெல்லை மாவட்டத்தில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக மாவட்ட முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. குறிப்பாக இன்று(நவ.20) பள்ளிகளுக்கு நெல்லையில் விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் மழைக்கால அவசர உதவி எண்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
Sorry, no posts matched your criteria.