Tirunelveli

News January 22, 2026

BREAKING: நெல்லை நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

image

நெல்லை பாளை பகுதியில் மாவட்ட நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் மாவட்ட நீதிமன்றத்திற்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மோப்பநாய் உதவியுடன் தற்போது சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

News January 22, 2026

நெல்லை : மாத ஓய்வூதியம் + ரூ.20,000 திருமண தொகை – APPLY!

image

நெல்லை மக்களே மாத ஓய்வூதியம், கல்வி செலவு ரூ.8000, திருமண உதவிதொகை ரூ. 20,000, கர்ப்பிணி உதவிதொகை ரூ. 18,000, இலவச காப்பீடு என அனைத்தும் அரசு பணியாளர்கள் மட்டுமல்ல தினக்கூலி பணியாளர்கள், சொந்த தொழில் செய்பவர்களுக்கு தமிழக அரசு வழங்குகிறது. இதெல்லாம் கிடைக்க இங்கு <>க்ளிக்<<>> செய்து ஆதார், பணிச்சான்று, ரேஷன் கார்டு, வங்கி விவரங்களுடன் விண்ணப்பித்தால் நலவாரிய அட்டை கிடைக்கும். அதை வைத்து நீங்கள் பயன் பெறலாம்.SHARE பண்ணுங்க!

News January 22, 2026

நெல்லை மாவட்ட விவசாயிகள் கவனத்திற்கு

image

ஜனவரி மாதத்திற்கான நெல்லை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 30ம் தேதி காலை 10 மணிக்கு நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள இரண்டாம் தள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இதில் அனைத்து அலுவலர்களும் பங்கேற்கின்றனர். எனவே மாவட்ட விவசாயிகள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற்க வேண்டும் என கலெக்டர் சுகுமார் தெரிவித்துள்ளார்.

News January 22, 2026

நெல்லை : கம்மி விலையில் பைக், கார், டிராக்டர் வேணுமா?

image

நெல்லை மக்களே, மத்திய அரசு E – வாகனங்களை ஊக்கப்படுத்தும் விதமாக மானியம் அறிவித்துள்ளது. பைக், கார், டிராக்டர் போன்ற அனைத்து 10,000 – 50,000 வரை E- Voucher மூலம் மானியம் வழங்குகிறது. இங்<>கு க்ளிக்<<>> செய்து உங்க விருப்பமான வாகனங்களின் கலர், மாடல் உங்க வீட்டில் இருந்தே CHOOSE பண்ணி வாங்கலாம். இதுக்கு விண்ணப்பிக்க ஆதார் கார்டு போதும். மானியம் இல்லையா உடனே 9319019073 CALL பண்ணுங்க. SHARE பண்ணுங்க

News January 22, 2026

நெல்லை மருத்துவ மாணவி கொலை; தந்தைக்கு வலைவீச்சு

image

நெல்லை, வீரவநல்லூரை சேர்ந்த வரதராஜன் மகள் வர்ஷினி (22). இவர் சேலத்தில் ஹோமியோபதி மருத்துவம் படித்து வந்தார். கடந்த 6ம் தேதி இரவு அவர் தங்கி இருந்த அறையில் கொலை செய்யபட்டு கிடந்தார். அவரது தந்தையே மகளை கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்தது. தலைமறைவாக இருந்த அவரை சிசிடிவி கேமரா பதிவை வைத்து போலீசார் தேடி வருகின்றனர். மேலும் அவர் குறித்த தகவலை அளிப்பவருக்கு 25,000 சன்மானம் என காவல்துறை தகவல்.

News January 22, 2026

நெல்லை: கட்டுமான தொழிலாளர் குழந்தைகளுக்கு நல்ல வாய்ப்பு

image

நெல்லை தொழிலாளர் உதவி ஆணையர் மணிகண்டன் பிரபு விடுத்துள்ள செய்தி குறிப்பு; கட்டுமான தொழிலாளர் குழந்தைகளுக்கு நல வாரியத்தின் மூலம் 40 வகையான தொழில்நுட்ப பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. நல வாரியத்தின் மூலம் உயர்கல்வி உதவித்தொகை பெறும் அல்லது ஏற்கனவே உதவித்தொகை பெற்ற தொழிலாளர்களின் குழந்தைகள் இதில் பங்கேற்கலாம். விவரங்களுக்கு திருமால் நகர் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலரை தொடர்புகொள்ளலாம். *SHARE

News January 22, 2026

நெல்லை: கட்டுமான தொழிலாளர் குழந்தைகளுக்கு நல்ல வாய்ப்பு

image

நெல்லை தொழிலாளர் உதவி ஆணையர் மணிகண்டன் பிரபு விடுத்துள்ள செய்தி குறிப்பு; கட்டுமான தொழிலாளர் குழந்தைகளுக்கு நல வாரியத்தின் மூலம் 40 வகையான தொழில்நுட்ப பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. நல வாரியத்தின் மூலம் உயர்கல்வி உதவித்தொகை பெறும் அல்லது ஏற்கனவே உதவித்தொகை பெற்ற தொழிலாளர்களின் குழந்தைகள் இதில் பங்கேற்கலாம். விவரங்களுக்கு திருமால் நகர் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலரை தொடர்புகொள்ளலாம். *SHARE

News January 22, 2026

நெல்லை 122 உள்ளாட்சி அமைப்புகளுக்கு நோட்டீஸ்

image

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள 122 உள்ளாட்சி அமைப்புகளுக்கு நோட்டீஸ். துப்புரவு மற்றும் தினக்கூலி தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்பதே இதன் நோக்கம். விதிமுறைகளை மீறும் அமைப்புகள் மீது சமூக பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அபராதம் மற்றும் கடும் சட்ட நடவடிக்கை என நெல்லை துணை மண்டல இ.எஸ்.ஐ இணை இயக்குனர் பாஸ்கர் தெரிவித்தார்.

News January 22, 2026

நெல்லை: அரசிற்கு எச்சரிக்கை விடுத்த அதிமுக நிர்வாகி

image

நெல்லை மாநகர மேலப்பாளையத்தில் ரூ.7 கோடி மதிப்பில் அரசு மருத்துவமனை கட்டப்பட்டு ஒரு ஆண்டுகள் பின்பு திறக்கப்பட்டது. இவ்வாறு திறக்கப்பட்ட இந்த மருத்துவமனை இன்னும் செயல்படாமல் உள்ளது. எனவே உடனடியாக மருத்துவமனையை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை என்றால் ஒரு மாதத்தில் போராட்டம் நடத்தப்படும் என அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளர் பாப்புலர் முத்தையா இன்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News January 22, 2026

மாநகர பகுதிகளில் இரவு ரோந்துப்பணி அதிகாரிகள்

image

திருநெல்வேலி மாநகர காவல்துறை, இன்று {ஜனவரி.21} இரவு ரோந்துப்பணிகளை மேற்கொள்ளும் அதிகாரிகள் பெயரை, அறிவித்துள்ளது. அதன்படி, டவுண் பகுதியில் மனோகரன், பேட்டையில் மாசானமுத்து, சந்திப்பில் நடராஜன், பாளையில் முருகன், மருத்துவக் கல்லூரி பகுதியில் கோபால கிருஷ்ணன், மேலப்பாளையத்தில் கணேசன், பெருமாள்புரத்தில் செந்தில்குமார் ரோந்து பணிகளை மேற்கொள்கின்றனர்.

error: Content is protected !!