Tirunelveli

News January 24, 2026

நெல்லை: போஸ்ட் ஆபீஸ் வேலை., தேர்வு இல்லை!

image

நெல்லை மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். இங்கு <>கிளிக் <<>>செய்து, விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க!

News January 24, 2026

நெல்லை: கல்லூரி மாணவியிடம் தகராறில் ஈடுபட்ட போலீஸ்!

image

ஜாய்சன், ஆயுதப்படை போலீசாராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று தியேட்டரில் படம் பார்த்த போது, முன் இருக்கையில் அமர்ந்திருந்த கல்லூரி மாணவியிடம் தகராறில் ஈடுபட்டார். அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். சமாதானபுரத்தில் வீட்டிற்கு சென்ற மாணவியை, பின் தொடர்ந்த ஜாய்சன் மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் ஜாய்சனை கைது செய்தனர்.

News January 24, 2026

நெல்லை: இளம்பெண் தற்கொலை!

image

களக்காடு அருகே கடம்போடுவாழ்வு பகுதியை சேர்ந்த செல்வின் துரை – கஸ்தூரி (22) தம்பதியினர். கடந்த 19ம் தேதி கஸ்தூரிக்கும் அவரது மாமியாருக்கும் தண்ணீர் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த கஸ்தூரி விஷம் குடித்து மயங்கினார். அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து களக்காடு போலீஸார் விசாரிக்கின்றனர்.

News January 24, 2026

நெல்லை: VAO லஞ்சம் வாங்கினால் என்ன செய்யலாம்?

image

நெல்லை மக்களே, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது, பயிர்களை ஆய்வு செய்வது VAOவின் வேலையாகும். இவற்றை முறையாக செய்யமால் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில் (04567 230036) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க.

News January 24, 2026

நெல்லை: கார் மோதி பரிதாப பலி!

image

நாங்குநேரி கோர்ட்டு பகுதியை சேர்ந்த சன்முகசுந்தரம் (38) நாங்குநேரி சுங்கச்சாவடியில் ஊழியராக பணியாற்றினார். இவர் டூவீலரில் நங்குநேரி நம்பி நகர் அருகே சென்ற போது அவ்வழியாக வந்த கார் மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து நாங்குநேரி போலீஸார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

News January 24, 2026

நெல்லை: வீடு புகுந்து பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்

image

பாளையங்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோட்டூர் பகுதியை சேர்ந்த முஸ்தபா மகன் கலீல் ரகுமான்(50). இவர் அதே பகுதியில் வசிக்கும் பெண் ஒருவரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவரை ஆபாசமான வார்த்தைகளால் பேசி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. பெண் கொடுத்த புகாரின் பேரில் பாளையங்கோட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து ரகுமானை கைது செய்தனர்.

News January 24, 2026

நெல்லையப்பர் கோயில் உண்டியல் விவரம் அறிவிப்பு

image

திருநெல்வேலி சுவாமி நெல்லையப்பர் கோவிலில் இன்று நடைபெற்ற 22 நிரந்தர உண்டியல்கள் திறப்பில் ரூ.23,47,066 ரொக்கமும், 15 கிராம்.100 மி.கிராம் எடையுள்ள பல மாற்றுப் பொன் இனங்களும், 171 கிராம் 800 மி.கிராம்  எடையுள்ள பலமாற்று வெள்ளி இனங்களும் மேலும் வெளிநாட்டுப் பணத்தாள்கள் 110ம் கிடைக்கப்பெற்றன என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!