India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பாளை தூய யோவான் கல்லூரியில் மண்டல அளவிலான தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினம் மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா நேற்று நடைபெற்றது. இதில் நெல்லை மாவட்ட ஆட்சியர் சுகுமார் இணையதளத்தில் பொருள்களின் தகவல்களை தெரிந்து கொண்டு பொருட்கள் வாங்க வேண்டும். நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி குறைந்த பொருட்களை பல்வேறு போலி நிறுவனங்கள் விற்பனை செய்கின்றன . எனவே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

நெல்லையில் நேற்று அதிகாலை முன்னாள் காவல் ஆய்வாளர் ஜாகிர் உசேன் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக கார்த்திக், அல்பர்ஷா அகியோர் நேற்று சரணடைந்த நிலையில் இதில் தொடர்புடைய கிருஷ்ணமூர்த்தி, நூருண்ணிஷா ஆகியோரை பிடிக்க விமலன் எஸ்ஐ, அருணாச்சலம் எஸ்ஐ மற்றும் துணை கமிஷனர் கீதா தலைமையில் கீழ் ஒரு தனிப்படை என மொத்தம் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் காவல்கிணறு இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் சந்திரனின் பல்வேறு ஆய்வு பணிகளை மேற்கொள்வதற்கு விண்கலத்தை செலுத்தி ராக்கெட் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் ராக்கெட்டின் மூன்றாவது நிலையில் பொருத்தக்கூடிய இந்த கிரயோஜனிக் என்ஜின் சோதனை திட்டமிட்டபடி 100 வினாடிகளில் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் நேற்று தெரிவித்துள்ளார்.

நெல்லை போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தற்போது மொபைல் போன் மூலமாக வாட்ஸ்அப் குரூப்களில் உங்களது வங்கி செயலி போல் போலியான செயலி அனுப்பி அதன் மூலம் பண மோசடி நடைபெறுகிறது.வங்கி கணக்கு முடக்கம் செய்யப்படும் என வங்கி லோகோ உடன் வரும் மெசேஜை நம்பி கிளிக் செய்யக்கூடாது. இது போன்ற மோசடி நடைபெற்றால் சைபர் க்ரைம் இணையதளம் அல்லது 1930 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

நெல்லை சேர்ந்த காமராஜ் போட்டோ ஸ்டூடியோ நடத்தி வருகிறார். இவரிடம் நேற்று விமல் என்பவர் திருமணத்திற்கு போட்டோ எடுக்க வேண்டும் என கோவை அழைத்து சென்றுள்ளார். அவர்கள் பஸ்ஸில் செல்லும் வழியில் பஸ் நின்றபோது அங்குள்ள கடையில் காபி குடிப்பதற்காக இவர் இறங்கி சென்றுள்ளார். அப்பொழுது விமல் அவரது கேமரா மற்றும் உபகரணங்களை திருடி சென்று தப்பியுள்ளார். இது குறித்து காமராஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்

தென்காசி மாவட்டத்தில் பணிபுரிந்த மாவட்ட தீயணைப்பு அலுவலர் பானுப்பிரியா திருநெல்வேலி மாவட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். எனவே அவர் திருநெல்வேலி மாவட்ட முதல் முதல் பெண் மாவட்ட அலுவலர் ஆவார். இந்நிலையில் இன்று அவர் பாளையங்கோட்டை அலுவலகத்தில் பொறுப்பேற்றார். முதல் பெண் அதிகாரியான அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் கடந்த மே இரண்டாம் தேதி திசையன்விளை அருகே கரைச்சுத்து புதூரில் தோட்டத்தில் உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செல்போன் அழைப்புகளை இதுவரை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

நெல்லை கொக்கிரகுளம் பகுதியில் புதியதாக கட்டப்பட்ட வீட்டிற்கு தண்ணீர் நனைத்து கொண்டிருந்த போது வேலாயுதம் (30), ரவி (37) ஆகியோர் மின்சாரம் தாக்கி பலியானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாநகர டவுன் தொட்டி பாலத்தெருவை சேர்ந்த பள்ளிவாசல் முத்தவல்லி ஜாகிர் உசேன் பிஜிலி இன்று அதிகாலை மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இவர் குறித்து முக்கிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இவர் முன்னாள் காவலராக இருந்து விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். மேலும் கருணாநிதி ஆட்சி காலத்தில் முதலமைச்சரின் தனி பிரிவு அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நெல்லை வழியாக குருவாயூர் – சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் 28ஆம் தேதி பகுதி தூரம் ரத்து செய்யப்படுகிறது. இதன்படி அன்றைய தினம் இந்த ரயில் சென்னையில் இருந்து 28ஆம் தேதி புறப்பட்டு நெல்லை வழியாக நாகர்கோவில் டவுன் வரை மட்டுமே செல்லும். அங்கிருந்து குருவாயூர் வரை ரத்து செய்யப்படுகிறது. மறு மார்க்கத்தில் 29ஆம் தேதி காலை 5.15 மணிக்கு நாகர்கோவில் டவுனில் இருந்து நெல்லைக்கு புறப்படும்.
Sorry, no posts matched your criteria.