Tirunelveli

News November 26, 2024

நெல்லை அருகே இளைஞர் கொலை! 3 பேர் கைது

image

நெல்லை அடுத்த சுத்தமல்லியில் முத்து கிருஷ்ணன் என்பவர் நேற்று(நவ.,25) மாலை வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சுத்தமல்லி காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், இக்கொலையில் தொடர்புடைய 3 பேர் அம்பாசமுத்திரம் பகுதியில் பதுங்கி இருந்தபோது தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் இக்கொலையில் தொடர்புடைய பேரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

News November 25, 2024

சுரேஷ்கோபியுடன் நெல்லை காங்கிரஸ் எம்பி சந்திப்பு

image

திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து டெல்லி செல்லும் போது அங்கு வந்த மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு மற்றும் சுற்றுலா அமைச்சக இணை அமைச்சர் சுரேஸ் கோபியை, நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ் நேற்று இரவு மரியாதை நிமித்தமாக சந்தித்தார். தொடர்ந்து அவர்களை இருவரும் சிறிது நேரம் உரையாடினர். டெல்லிக்கு பின்னர் புறப்பட்டு சென்றனர்.

News November 25, 2024

வாகனம் ஓட்டும்போது மொபைல் போன் தவிர்க்க வலியுறுத்தல்

image

திருநெல்வேலி மாநகர காவல் துறை சார்பில் இன்று வெளியிட்டுள்ள விழிப்புணர்வு பதிவில் இருசக்கர வாகனம் மற்றும் வாகனங்கள் ஓட்டும்போது மொபைல் போன் யூஸ் பண்ணுவதால் கவனங்கள் சிதறப்பட்டு விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நீடிக்கின்றன. எனவே வாகனங்கள் ஓட்டும்போது மொபைல் போனை பயன்படுத்துவதை தவிர்த்து விபத்தை ஏற்படுத்தாத வண்ணம் செல்ல வலியுறுத்தினர் .

News November 25, 2024

நெல்லை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்

image

நெல்லை மாவட்ட மீனவர்கள் நாளை முதல் மறுஅறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக காற்று மணிக்கு 75 கி.மீ வேகத்தில் வீசுவதால், இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது என மீன் வளத்துறை தெரிவித்துள்ளது.

News November 25, 2024

அணைகளில் இருந்து வெளியேறும் நீரின் அளவு

image

நெல்லை மாவட்டத்தில் பிரதான அணைகளான 143 அடி முழு கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையில் இருந்து வினாடிக்கு 500 கன அடி தண்ணீர், 118 அடி முழு கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையிலிருந்து வினாடிக்கு 35 கன அடி தண்ணீர், 52 அடி முழு கொள்ளளவு கொண்ட கொடுமுடியாறு அணையில் இருந்து வினாடிக்கு இரண்டு கன அடி தண்ணீர் வெளியேறுவதாக மாவட்ட நிர்வாகம் இன்று(நவ.25) தெரிவித்துள்ளது.

News November 25, 2024

UPI பயன்படுத்துபவர்களை குறி வைத்து சைபர் கிரைம் மோசடி

image

Phone Pay உள்ளிட்ட UPI பயன்படுத்துவதன் மூலம் வங்கி பரிவர்த்தனை மோசடிகள் அதிகளவில் நடைபெறுவதாக சைபர் கிரைம் போலீசில் புகார்கள் பதிவாகியுள்ளன. உறுதிப்படுத்தப்படாத ஆதாரங்களில் இருந்து செயலிகளை பதிவிறக்கம் செய்வதை தவிர்க்க வேண்டும், UPI தரவுகள் அல்லது OTP பகிர்வதை தவிர்க்க வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர். உதவிக்கு ‘1930’ என்ற எண்ணில் செய்து புகார் அளிக்கலாம்.

News November 25, 2024

நெல்லையில் இன்று நடைபெறும் நிகழ்ச்சிகள் விவரம்

image

#நெல்லை மாவட்டத்தில் இன்று(நவ.,25) காலை 10 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. #காலை 10 மணிக்கு பாளையங்கோட்டை சேவியர் கல்லூரியில் என்சிசி 5ஆவது பட்டாலியன் மாணவர்கள் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. #அனைத்துப் பள்ளிகளிலும் இன்று காலை முதல் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தடுப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்படுகிறது.

News November 25, 2024

நீட் தேவை இல்லை என்பதே அனைவரின் கருத்து: அப்பாவு

image

தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு செய்தியாளரிடம் கூறுகையில், நீட் தேர்வை தேசிய முகமை நடத்துகிறது என வைத்துக்கொண்டாலும், தமிழ்நாட்டில் உள்ள கல்வி கட்டமைப்பை பிரதிபலிக்கக்கூடிய தேர்வாக உள்ளது. 12ஆம் வகுப்பு வரை படித்த மாணவர்கள் அவர்களது மதிப்பெண் அடிப்படையில் மருத்துவப் படிப்பில் இடம் கொடுத்தால்தான் நியாயமாக இருக்கும். நீட் தேர்வு தேவை இல்லை என்பதே அனைவரது கருத்தாக உள்ளது என்றார்.

News November 25, 2024

நெல்லை: அலட்சியமாக செயல்பட்ட பேரூராட்சிக்கு அபராதம்!

image

நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே முத்தையா தெருவை சேர்ந்தவர் அஜித் சிவராஜா(42). இவர், வீட்டு வரி பெயர் மாற்றம் செய்வது தொடர்பாக பேரூராட்சியை அணுகியுள்ளார். அங்கு அலட்சியமாக செயல்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்ற நிலையில், மன உளைச்சலுக்கு ஆளான அஜித் சிவராஜாவுக்கு பேரூராட்சி நிர்வாகம் ரூ.7,000 ரூபாய் அபராதம் வழங்க வேண்டும் என நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

News November 24, 2024

SDPI கட்சியின் மாநில தலைவராக மீண்டும் நெல்லை முபாரக் தேர்வு

image

SDPI கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் திருப்பூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேசிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தமிழகத்திற்கான புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சியும் இன்று (நவ.24) நடைபெற்றது. தமிழக தலைவராக மேலப்பாளையத்தைச் சேர்ந்த நெல்லை முபாரக் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!