India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நெல்லை அஞ்சல் முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் முருகன் செய்தி குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் பாளையங்கோட்டை தலைமை தபால் நிலையத்தில் குறைந்த கட்டணத்தில் வெளிநாடுகளுக்கு பார்சல் அனுப்பும் வசதியை அஞ்சல் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அற்புதமான வாய்ப்பை வணிக ஏற்றுமதியாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அஞ்சல் அலுவலக வணிக பிரிவை தொடர்பு கொள்ளலாம்.

கங்கைகொண்டான் அருகே வடக்கு செழியநல்லூரில் அருள்மிகு சயன வனதுர்கை, வைஷ்ணவி துர்கை அம்பாள் கோயில் உள்ளது. இங்கு கிழக்கு நோக்கி சயனக் கோலத்தில் 8 கரங்களுடன் பெண் குழந்தையை அணைத்தபடி துர்கை, அருகில் நாகராஜ பரிவார தேவதைகள் காட்சியளிக்கின்றனர். திருமண தடைகள் நீங்க வைஷ்ணவி துர்கைக்குப் பச்சை நிறப் பட்டுடன் மல்லிகை பூ மாலை சாற்றி, நெய் தீபம் ஏற்றிவைத்து, சர்க்கரை பொங்கல் நிவேதனம் செய்து வழிபட வேண்டும்.

வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று(மார்ச்.23) காலை 11 மணிக்குள் திருநெல்வேலி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே மக்கள் வெளியே செல்லும் போது முன்னெச்சரிக்கையாக குடை எடுத்து செல்வது நல்லது.

பீகாரை சேர்ந்தவர் சர்பரேக் ஆலம் (20). இவர் பழவூர் அருகே உள்ள கல்குவாரியில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று (மார்ச்.22) குவாரிக்கு புதிய இயந்திரம் வந்துள்ளது. இதனை கிரேன் மூலம் தூக்கி நிறுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டபோது எதிர்பாராத விதமாக கிரேன் கவிழ்ந்ததில் சர்ப்ரேக் ஆலம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து பழவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை மாவட்டத்தில் இன்று இரவு ரோந்துப்பணியில் ஈடுபடும் அதிகாரிகள் விவரங்களை மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மாவட்ட துணை கண்காணிப்பாளர் பிரதாபன், திருநெல்வேலி ஊரகம் ஆய்வாளர் வேல்கனி, நாங்குநேரி ஆய்வாளர் கண்ணன், வள்ளியூர் ஆய்வாளர் ராஜாராம், சேரன்மாதேவி ஆய்வாளர் ஜெயசீலன், அம்பை ஆய்வாளர் பேச்சிமுத்து ஆகியோரை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லை, அம்பாசமுத்திரத்தில் அருள்மிகு அகத்தீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு நின்ற கோலத்தில் வலது கையில் ருத்ராட்ச மாலையுடன் அகத்தீஸ்வரர் சின்ன முத்திரை காட்டியபடி இருக்கிறார். இங்கு சிவனுக்குரிய முறையில் பூஜை நடக்கிறது. சிவராத்திரி அன்று 4 கால பூஜை நடக்கிறது. இந்த ஆலயத்தில் வேண்டினால் திருமணத்தடையும், செயல்களில் வெற்றியும் கிடைக்கும் என பக்தர்கள் கருதுகின்றனர். *மற்றவர்களுக்கு பகிரவும்*

ராதாபுரம் அருகே இருக்கன் துறை கிராமம் புத்தேரி அருகே இயங்கி வரும் கல் குவாரியில் இன்று காலை கிரேன் பழுது பார்த்துக்கொண்டிருக்கும் போது கிரேன் சரிந்து விழுந்ததில் பீகாரைச் சேர்ந்த சர்ப்ரைஸ் ஆலம் என்பவர் படுகாயம் அடைந்தார்.சக ஊழியர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். பழவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நெல்லை மாவட்டத்தில் இன்று மார்ச் 22 அதிகாலை 7 மணி தற்போது வரை 64.80 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மூலைகரைப்பட்டியில் 15 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது .ராதாபுரம் வட்டாரத்தில் கடற்கரை கிராமங்களில்11 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. நம்பியார் அணைப்பகுதியில் 10 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. நாலுமுக்கு, ஊத்து தலா 4 மில்லி மீட்டர், நாங்குநேரி 10 மில்லி மீட்டர் மழை பதிவானது.

தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு இசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதனால் மார்ச்.26 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்நிலையில் இன்று நெல்லை மாவட்டத்தில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்ட ஆட்சியர் சுகுமார் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் நெல்லை மாவட்டத்தில் பிஎம் கிசான் திட்டத்தின் மூலம் சிறுகுறு விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6000வழங்கப்பட்டு வருகிறது. நெல்லை மாவட்டத்தில் 49,481 பி எம் கிஷான் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதுவரை சுமார் 22,000 பேர் பி எம் கிஷான் மற்றும் இதர விவசாயிகளின் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.