Tirunelveli

News November 28, 2024

மின் கம்பங்கள் & மின் மாற்றிகள் அருகே நிற்க வேண்டாம்!

image

நெல்லை மின் பகிர்மான வட்ட கழகம் சார்பில் இன்று வெளியிட்டுள்ள விழிப்புணர்வு பதிவில், வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மழை காலங்களில் மின்கம்பங்கள் மற்றும் மின்மாற்றி அருகே பொதுமக்கள் நின்றால் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு ஏற்படும் நிலை உள்ளது. எனவே மின்கம்பங்கள் & மின்மாற்றிகளின் அருகே பொதுமக்கள் நிற்க வேண்டாம் என வலியுறுத்தியுள்ளனர்.

News November 28, 2024

நெல்லை வனத்துறை அதிகாரிகள் இடமாற்றம்

image

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு வனத்துறை அதிகாரிகள் அதிரடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில் நெல்லை மாவட்ட வன அலுவலராக இருந்த முருகன் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். அதேபோல் நெல்லை களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக கலா இயக்குநராக இருந்த மாரிமுத்து வேலூர் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

News November 28, 2024

சிறுவர்களை வேலைக்கு அமர்த்தினால் இரண்டு வருடம் சிறை

image

திருநெல்வேலி தொழிலாளர் உதவி ஆணையர் திருவள்ளுவன் நேற்று(நவ.27) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர் தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல் சட்டத்தின்படி, குழந்தைகளை எந்த ஒரு பணியிலும் அபாயகரமான தொழில்களிலும் பணியமர்த்தக் கூடாது. மீறினால், வேலை அளிப்பதற்கு 50 ஆயிரம் அபராதமும் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என எச்சரித்தார்.

News November 28, 2024

சுத்தமல்லி இளைஞர் கொலை வழக்கில் கோர்ட்டில் ஒருவர் சரண்!

image

நெல்லை, சுத்தமல்லி கொலை வழக்கில் தொடர்புடைய இளைஞர் சேரன்மகாதேவி கோர்ட்டில் சரணடைந்துள்ளார். இளைஞர் முத்துகிருஷ்ணன் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அதே பகுதியை சேர்ந்த முருகன் நேற்று சேர்ன்மகாதேவி கோர்ட்டில் நேற்று(நவ.,27) சரணடைந்துள்ளார். முத்துகிருஷ்ணன் உடலை வாங்க மறுத்து, அவரது உறவினர்கள் 4-வது நாளாக இன்றும்(நவ.,28) போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

News November 28, 2024

நெல்லையில் இன்று நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகள்

image

நெல்லை மாவட்டத்தில் இன்று(நவ.,28) மாலை 4 மணிக்கு நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. #மாலை 4:30 மணிக்கு பாளையங்கோட்டை சிவன் கோயிலில் கிருத்திகை மாத பிரதோஷ வழிபாடு நடைபெறுகிறது.#மாலை 5.30 மணிக்கு நெல்லை டவுன் நெல்லையப்பர் கோயிலில் ஆறுமுக சனதியில் விசாக வழிபாடு பஜனை நடைபெறுகிறது.

News November 28, 2024

கொலையானவர் வீட்டிற்கு சென்ற பசுபதி பாண்டியன் சகோதரி!

image

நெல்லை மாவட்டம் சுத்தமல்லியில் கொலை செய்யப்பட்ட முத்துக்கிருஷ்ணன் வீட்டிற்கு நேரில் சென்று அவர்களது குடும்பத்தினரிடம் பசுபதி பாண்டியன் சகோதரி பார்வதி சண்முகம் நேற்று ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து, உண்மை குற்றவாளிகளை விரைந்து கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாரிடம் வலியுறுத்துவதாக அவர் தெரிவித்தார். இந்த நிகழ்வின்போது முத்துகிருஷ்ணன் குடும்பத்தினர் & பார்வதி ஆதரவாளர்கள் உடன் இருந்தனர்.

News November 28, 2024

இளையோர் திருவிழா போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு

image

நெல்லை மாவட்ட அளவில் நேர யுவகேந்திரா சார்பில் இளையோர் திருவிழா டிச.4-ம் தேதி பாளை சேவியர்ஸ் கல்லூரியில் நடைபெற உள்ளது. இதில் 5 தலைப்புகளில் மாணவர்களுக்கு ஓவிய உள்ளிட்ட போட்டிகள் நடைபெற உள்ளன. பங்கேற்க விரும்புபவர்கள் டிச.2ம் தேதி மாலை 5 மணிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும் மேலும் தகவலுக்கு என் ஜி ஓ காலனியில் உள்ள நேரு யுவகேந்திரா அலுவலகத்தில் தொடர்பு கொள்ளலாம் என அலுவலர் ஞானசந்திரன் தெரிவித்துள்ளார்

News November 28, 2024

மாநகரில் இரவு காவல் சேவை அதிகாரிகள் விபரம்

image

திருநெல்வேலி மாநகர காவல் துறை ஆணையர் ரூபேஷ் குமார் மீனா உத்தரவுப்படி, நெல்லை மாநகர காவல் நிலைய பகுதிகளில் இன்று நவ.27 இரவு முதல் நாளை காலை வரை பணியில் இருக்கும் காவல் அதிகாரிகள் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, காவல் சேவை தேவைப்படும் பொதுமக்கள் அவர்களது சம்பந்தப்பட்ட கைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு சேவையை பெறலாம்.

News November 27, 2024

பெரியார் விருது பெற ஆட்சியர் அழைப்பு

image

சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக “சமூக நீதிக்கானதந்தை பெரியார் விருது” 1995ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. விருது பெறுவோருக்கு ரூ.5,00,000 தொகையும் தங்கப்பதக்கமும் வழங்கப்படுகிறது. நெல்லையில் தந்தை பெரியார் விருதிற்கான விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 20.12.2024 அன்றுக்குள் கிடைக்குமாறு சமர்பிக்கலாம் என ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

News November 27, 2024

பெரியார் விருது: நெல்லை ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக “சமூக நீதிக்கானதந்தை பெரியார் விருது” 1995ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. விருது பெறுவோருக்கு ரூ.5,00,000 தொகையும் தங்கப்பதக்கமும் வழங்கப்படுகிறது. நெல்லையில் தந்தை பெரியார் விருதிற்கான விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 20.12.2024 அன்றுக்குள் கிடைக்குமாறு சமர்பிக்கலாம் என ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!