India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சுத்தமல்லி இந்திரா காலனியைச் சேர்ந்த வாலிபர் முத்துகிருஷ்ணன் 25 ஆம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். கொலையான முத்துகிருஷ்ணன் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் 4 நாட்களாக போராட்டம் நடத்தி வந்த நிலையில் அவர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து இன்று முத்துக்கிருஷ்ணன் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
நெல்லை வக்கீல்கள் சங்கம் சார்பில் ‘சட்டமும் சமுதாயமும்’ என்ற தலைப்பில் கருத்தரங்கு நாளை(நவ.,30) காலை 10.30 மணிக்கு வக்கீல் சங்க கட்டடத்தில் நடைபெறுகிறது. நெல்லை மாவட்ட முதன்மை நீதிபதி சாய் சரவணன் தலைமை தாங்குகிறார். வக்கீல்கள் சங்க தலைவர் ராஜேஷ்வரன் வரவேற்புரை ஆற்றுகிறார். சிறப்பு விருந்தினராக சென்னை ஐகோர்ட் நீதிபதி சிவஞானம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.
தைப்பூச பண்டிகையை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக டிசம்பர் 14 முதல் பிப்ரவரி 8 ஆம் தேதி வரை நிஜாமுதீன் – கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் மேல்மருவத்தூரில் 2 நிமிடம் நிற்கும். நெல்லை வழியாக செல்லும் அந்தியோதயா ரயில் 14 ஆம் தேதி முதல் பிப்ரவரி 11 ஆம் தேதி வரை 2 நிமிடம் நின்று செல்லும் எனவும் தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. SHARE IT.
களக்காடு வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் சண்முகநாதன் விடுத்துள்ள செய்தி குறிப்பில், களக்காடு வட்டாரத்தில் 3000 ஹெக்டேர் பரப்பளவில் வாழை சாகுபடி செய்யப்படுகிறது. ஈரப்பதம் அதிகரிக்கும்போது இலை புள்ளி நோய் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. பக்கக் கன்றுகளை அகற்றுதல், தோட்டத்தில் களை இல்லாமல் பார்த்துக் கொள்ளுதல், தண்ணீர் தேங்காமல் இருக்க வடிகால் வசதி ஏற்படுத்துதல் ஈரப்பதத்தை குறைக்கும் என்றனர்.
தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு இன்று(நவ.,29) காலை 9.30 மணிக்கு குட்டம் வெம்மக்குடியில் புதிய கலையரங்கை திறந்து வைக்கிறார். #காலை 10 மணிக்கு க.உவரியில் புதிய ஊராட்சி மன்ற கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். #காலை 10:30 மணிக்கு கூத்தன் குழியில் அங்கன்வாடி மையத்தை திறந்து வைக்கிறார். #மதியம் 12.15-க்கு பண்ணையார்குலத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அடிக்கல் நாட்டுகிறார்.
மாசுபட்டு வரும் தாமிரபரணி நதியை பாதுகாக்கும் திட்டம் ஏதும் உள்ளதா என நெல்லை எம்பி ராபர்ட் புரூஸ் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய ஒன்றிய அமைச்சர் ராஜ் பூஷன் சவுத்ரி, தாமிரபரணி நதியை பாதுகாக்கும் திட்டம் ஏதும் பரிசீலனையில் இல்லை என கூறினார். நதிகளின் மாசுபாட்டை குறைக்கும் விதமாக நமாமி கங்கே என்ற திட்டம் செயல்படுகிறது என்று பதில் அளித்தார். SHARE IT.
நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், மது பார் உரிமையாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. மாநகர போலீஸ் மேற்கு துணை கமிஷனர் கீதா தலைமை தாங்கி அறிவுரைகள் வழங்கி பேசினார். மது பார்களில் அரசு விதித்த கட்டுப்பாடுகளை சரியாக கடைபிடிக்க வேண்டும். டாஸ்மாக் மதுபானங்களை தனியார் பார்களில் விற்பனை செய்யக்கூடாது. பார் உரிமங்களை சரியான காலங்களில் புதுப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
நெல்லை மாநகரில் மாநகராட்சியிடம் உரிய கட்டிட அனுமதி பெறாமல் கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு அதிகாரிகள் நேற்று அதிரடியாக சீல் வைத்தனர். இந்நிலையில் இன்று இரண்டாவது நாளாக நெல்லை மாநகரப் பகுதியில் அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்ட வருகிறது. அதன்படி நெல்லை சந்திப்பு பெருமாள் வீதியில் உள்ள வணிக கட்டிடத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
நெல்லை மாநகர காவல்துறை முக்கிய அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. அதில், உங்கள் வீட்டை வாடகைக்கு கொடுக்கும்போது அந்த வீட்டில் அந்த நபர்கள்தான் குடியிருக்கிறார்களா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். வீட்டு உரிமையாளரின் அனுமதியின்றி குத்தகைக்கு அல்லது வாடகைக்கு பெற்ற நபர் அவ்வீட்டினை உள் வாடகைக்கு கொடுப்பது சட்டப்படி குற்றமாகும். இது போன்று செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
தமிழக சட்டப்பேரவை தலைவரும் ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினருமான அப்பாவு, தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த நேரத்தில் அதிமுகவை சேர்ந்த எம்எல்ஏக்களை மீது அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்யப்பட்டது. இதை எதிர்த்து, அதிமுக செய்தி தொடர்பாளர் பாபு முருகவேல் நேற்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.