Tirunelveli

News December 25, 2024

தமிழக அரசு ஒருபோதும் திவால் ஆகாது – சபாநாயகர் 

image

ராதாபுரம் சமத்துவபுரத்தில் பெரியாரின் 51வது நினைவு தினம் நேற்று (டிச.24) அனுசரிக்கப்பட்டது. இதில் தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது: தமிழக அரசு திவாலாகும் என ஒரு சிலரின் ஆசையாக உள்ளது, அது ஒருபோதும் நிறைவேறாது, ஆல் பாஸ் திட்டத்தை ஒன்றிய அரசு ரத்து செய்துள்ளதை தமிழக அரசு செயல்படுத்தாது என அவர் தெரிவித்திருந்தார்

News December 25, 2024

நெல்லையில் தடை உத்தரவு – போலீஸ் கமிஷனர் தகவல்

image

நெல்லையில் மாநகர போலீஸ் சட்டம் 1992-ன் படி நெல்லை மாநகரில் நேற்று(டிச.25) முதல் ஜனவரி 7ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு பொது அமைதி பாதுகாப்பை கருத்தில் கொண்டு கூட்டங்கள், ஊர்வலங்கள், போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது என நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் ரூபேஷ் குமார் மீனா நேற்று ( டிச.24 ) தெரிவித்தார்.

News December 24, 2024

நெல்லை மாநகர காவல் ரோந்து அதிகாரிகள்

image

நெல்லை மாநகர காவல்துறை சார்பில் இரவு நேரங்களில் ஏற்படும் குற்றங்களைத் தடுக்க நாள்தோறும் போலீசார் உதவி ஆணையர் தலைமையில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று (டிச.24) இரவு அதிகாரிகள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் இரவில் ஏதேனும் காவல் உதவி தேவைப்பட்டால் இவர்களை அணுகலாம்.

News December 24, 2024

பைக் வீலிங் செய்தால் நடவடிக்கை என எஸ்.பி எச்சரிக்கை

image

நெல்லை மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் விழா மற்றும் புத்தாண்டு தின கொண்டாட்டத்தின் போது பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பைக் ரேஸ், பைக் வீலிங்கில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இன்று மாலை முதல் நாளை காலை வரை திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் 1200 போலீசார் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடஉள்ளனர்.

News December 24, 2024

செல்போன் மூலம் இயங்கும் கருவிகள் பெற அழைப்பு

image

நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் வேளாண்மை இயந்திரம் ஆக்குதல் துணை இயக்கத் திட்டத்தில் செல்போன் மூலம் இயங்கும் தானியங்கி பம்பு செட் கட்டுப்படுத்தும் கருவி மானியத்தில் வழங்கப்படுகிறது. இதனை விவசாயிகள் பெற்று நெல்லை வருவாய் கோட்டத்தில் உள்ள விவசாயிகள் 9025732083 என்ற தொடர்பு கொண்டு பயன்படுத்தலாம் என்றார்.

News December 24, 2024

மாநகரில் கூடுதலாக 6 சோதனை சாவடிகள்

image

திருநெல்வேலி மாநகர காவல் எல்லைப் பகுதியில் ஏற்கனவே உள்ள சோதனை சாவடிகளுடன் சேர்த்து நேற்று முதல் கூடுதலாக 6 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் போலீசார் துப்பாக்கியுடன் வாகன சோதனையில் ஈடுபடுகின்றனர். இன்ஸ்பெக்டர் தலைமையில் நான்கு போலீசார் வீடியோ கேமரா உதவியுடன் சோதனைகளை தொடர்ந்து மேற்கொள்வார்கள் என மாநகர காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

News December 24, 2024

30 லாரிகளில் மருத்துவ கழிவுகள் அனுப்பி வைப்பு

image

நெல்லை மாவட்டம் கல்லூர் அருகே கேரளா மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு கழிவுகள் நேற்று அப்புறப்படுத்தப்பட்டது. அதில் நேற்று மற்றும் 18 லாரிகளில் கழிவுகள் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது, இன்று (டிச.23) 12 லாரிகளில் மருத்துவ கழிவுகள் அனுப்பி வைக்கப்பட்டது. இதுவரை மொத்தம் 30 லாரிகளில் கழிவுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.கழிவுகள் கொட்டப்பட்ட ஆறு இடங்களிலும் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டுள்ளது.

News December 24, 2024

நெல்லை வழியாக செல்லும் அந்தியோதயா ரயில் நேரம் மாற்றம்

image

ஜனவரி 1 முதல் நெல்லை வழியாக செல்லும் தாம்பரம் – நாகர்கோவில் (20691) அந்தியோதயா அதி விரைவு ரயிலின் நேரம் இரவு 11 மணிக்கு பதிலாக 10:40 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதே போல் பல்வேறு ரயில்களில் கால அட்டவணையும் மாற்றப்பட்டுள்ளது. ஏராளமான ரயில்கள் சென்னையில் இருந்து அரை மணி நேரம் அல்லது கால் மணி நேரம் புறப்படும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

News December 23, 2024

நாங்குநேரி வட்டார இரவு காவல் பணி அதிகாரி விபரம்

image

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவுப்படி, நெல்லை மாவட்ட காவல் சரக பகுதிகளில் இன்று (டிச.23) இரவு முதல் நாளை காலை வரை ஆய்வு பணி மேற்கொள்ளும் அதிகாரிகளின் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு அவசர காவல் தேவைப்படுபவர்கள், சம்பந்தப்பட்ட அதிகாரியை அவர்களது கைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

News December 23, 2024

கொலை வழக்கு குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

image

முன்னீர் பள்ளம் பகுதியை சேர்ந்த சங்கரலிங்கம் என்ற சங்கர் என்பவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இந்நிலையில் முன்னீர்பள்ளம் இன்ஸ்பெக்டர் சுரேஷ் கேட்டுக் கொண்டதற்கிணங்க எஸ்பி சிலம்பரசன் பரிந்துரையை அடுத்து கலெக்டர் உத்தரவின்படி இன்று சங்கரலிங்கம் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

error: Content is protected !!