India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெல்லை மாவட்டத்தில் 2009ம் ஆண்டு முன்னர் பிறந்தவர்கள் பிறப்பு சான்றிதழில் தங்கள் பெயர்களை பதிவு செய்ய வரும் டிச.31ஆம் தேதி கடைசி நாள் ஆகும். அதன் பின்னர் பிறப்பு சான்றிதழில் பதிவு செய்ய இயலாது. எனவே, ஏற்கனவே பிறப்பு சான்று பெற்ற அலுவலகங்களை அணுகி பதிவு செய்யலாம் என மாநகராட்சி கமிஷனர் சுகபுத்ரா தெரிவித்தார். இதுகுறித்து அறிவிப்பு மாநகராட்சி மற்றும் மண்டல அலுவலகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்ட ஆட்சியர் நேற்று(டிச.25) வெளியிட்ட செய்தி குறிப்பில்: குழந்தை திருமணத்தை தடுக்க கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு குழுக்கள் அமைக்கப்பட்டு மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலமும் தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. அம்பை, வள்ளியூர், களக்காடு, ராதாபுரம் இடங்களில் குழந்தைகள் பாதுகாப்புக்கான சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது என்றார்.
திருநெல்வேலி மாநகர் டவுன் மாதா பூங்கொடி தெரு பகுதியில் கிறிஸ்துமஸ் தினத்தனமான நேற்று(டிச.25) நள்ளிரவு சில நபர்கள் மது போதையில் மது பாட்டிலில் தீ வைத்து சுவற்றில் எரிந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று வந்த பகுதியில் விசாரணை நடத்தினர். மேலும் மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவுப்படி, நெல்லை மாவட்ட காவல் சரக பகுதிகளில் இன்று (டிச.25) இரவு முதல் நாளை காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் இரவு நேரத்தில் உதவிகள் தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரியை அவர்களது கைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
நெல்லை, வள்ளியூர் வழியாக இயக்கப்படும் நாகர்கோவில் – தாம்பரம் அந்தியோதயா ரயில் நேரம் ஜனவரி 1 ஆம் தேதி முதல் மாற்றப்பட்டுள்ளது. புதிய நேரப்படி இரவு 10:40 மணிக்கு தாம்பரத்தில் இந்த ரயில் புறப்படும், மறுநாள் பகல் 11 மணிக்கு நெல்லைக்கு வந்து, பின்னர் வள்ளியூர் வழியாக நாகர்கோவில் செல்லும் என தென்னக ரயில்வே ரயில்வே அறிவித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் அதிகரித்துள்ளதாக ஆங்கில நாளிதழில் செய்தி வெளியானது. இதுதொடர்பாக இன்று ஆட்சியர் கார்த்திகேயன் வெளியிட்ட செய்தி குறிப்பில் மாவட்டத்தில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மற்றும் கடும் சட்ட நடவடிக்கைகள் காரணமாக முந்தைய ஆண்டை காட்டிலும் குழந்தை திருமணங்களின் எண்ணிக்கை சுமார் 50 சதவீதம் குறைந்துள்ளது என கூறியுள்ளார்.
பிசானபருவ சாகுபடிக்காக, கூடுதலாக 1500 மெட்ரிக் டன் யூரியா உரங்கள் நெல்லைக்கு, வெளியிடங்களிலிருந்து ரயில் மூலம், இன்று (டிச.25)வந்து சேர்ந்தது. இதில், 800 மெட்ரிக்டன் தென்காசி மாவட்டத்திற்கும், 450 மெட்ரிக்டன் நெல்லை மாவட்டத்திற்கும், 150 மெட்ரிக்டன் கன்னியாகுமரி மாவட்டத்திற்கும்,100 மெட்ரிக் டன் தூத்துக்குடி மாவட்டத்திற்கும் பிரித்து, லாரிகள்மூலம் அனுப்பப்பட்டதாக, நெல்லை வேளாண்துறை தெரிவித்துள்ளது
நெல்லை, வள்ளியூர் வழியாக இயக்கப்படும் நாகர்கோவில் – தாம்பரம் அந்தியோதயா ரயில் நேரம் ஜனவரி 1ம் தேதி முதல் மாற்றப்பட்டுள்ளது. புதிய நேரப்படி இரவு 10:40 மணிக்கு தாம்பரத்தில் இந்த ரயில் புறப்படும், மறுநாள் பகல் 11 மணிக்கு நெல்லைக்கு வந்து, பின்னர் வள்ளியூர் வழியாக நாகர்கோவில் செல்லும் என தென்னக ரயில்வே ரயில்வே அறிவித்துள்ளது.
நெல்லை அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் செந்தில் குமார் நேற்று(டிச.24) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: அனைத்து தலைமை அஞ்சலகங்களிலும் அஞ்சல் அடையாள அட்டை விநியோகிக்கப்படுவதால் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம், இதற்கான விண்ணப்ப படிவங்களை ரூ.20 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். அனைத்தும் சரிபார்க்கப்பட்ட பின்னர் அடையாள அட்டை வழங்கப்படும்.
நெல்லை அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் செந்தில் குமார் நேற்று(டிச.24) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: அனைத்து தலைமை அஞ்சலகங்களிலும் அஞ்சல் அடையாள அட்டை விநியோகிக்கப்படுவதால் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம், இதற்கான விண்ணப்ப படிவங்களை ரூ.20 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். அனைத்தும் சரிபார்க்கப்பட்ட பின்னர் அடையாள அட்டை வழங்கப்படும்.
Sorry, no posts matched your criteria.