India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நெல்லை – செங்கோட்டை இடையே இயக்கப்படும் பயணிகள் தரையில் கூட்டம் அலைமோதும் நிலையில், ஒரு ரயிலில் மட்டும் இரு மார்க்கத்திலும் கூடுதல் பெட்டி இணைக்கப்பட்டது. அதிகாலை மற்றும் மாலை நேர ரயில்களில் முக்கியத்துவம் கருதி, அடுத்த 10 நாட்களுக்கு கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகத்தினர் உறுதி அளித்துள்ளதாக ராபர்ட் ப்ரூஸ் எம்பி தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் பணிபுரியும் வட்டாட்சியர்கள் 23 பேர் பணியிடை மாற்றம் செய்து மாவட்ட ஆட்சித் தலைவர் சுகுமார் உத்தரவிட்டு உள்ளார். அம்பாசமுத்திரம், திருநெல்வேலி, பாளையங்கோட்டை, ராதாபுரம், மானூர் உள்ளிட்ட பல்வேறு வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். மேலும், சிலருக்கு பதவி உயர்வுடன் கூடிய வட்டாட்சியர் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது

▶️நெல்லை கலெக்டர்- 0462-2501222.
▶️கலெக்டரின் நேர்முக உதவியாளர்- 0462-2500224.
▶️மாவட்ட வருவாய் அலுவலா்- 0462-2500466.
▶️தனித்துணை ஆட்சியர்-04633-290548.
▶️மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்-0462-2502968.
நெல்லை மக்களே இது போன்ற முக்கிய எண்களை தெரிந்தவர்களுக்கு SHARE செய்து உதவவும்.

பேட்டை நரிக்குறவர் பகுதியைச் சேர்ந்த மதுரை வீரன் மகள் முத்துலட்சுமி. (16) பாளை அருகே பர்கிட் மாநகர் காப்பகத்தில் தங்கி அருகே உள்ள பள்ளியில் படித்து வந்தார்.உடல் நலக் குறைவு ஏற்பட்டதால் அவரை காப்பக ஊழியர்கள் பாளை அரசு மருத்துவமனைக்கு நேற்று கொண்டு சென்றனர். செல்லும் வழியில் அவர் இறந்தார். இது குறித்து பாளை வட்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பேட்டை நரிக்குறவர் பகுதியைச் சேர்ந்த மதுரை வீரன் மகள் முத்துலட்சுமி. (16) பாளை அருகே பர்கிட் மாநகர் காப்பகத்தில் தங்கி அருகே உள்ள பள்ளியில் படித்து வந்தார்.உடல் நலக் குறைவு ஏற்பட்டதால் அவரை காப்பக ஊழியர்கள் பாளை அரசு மருத்துவமனைக்கு நேற்று கொண்டு சென்றனர். செல்லும் வழியில் அவர் இறந்தார். இது குறித்து பாளை வட்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் அபிஷேக பட்டியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் உதவி பேராசிரியருக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக துணைவேந்தரிடம் புகார் அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அதனை விசாரணை செய்ய தனி குழு அமைக்கப்பட்டது. மேலும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனை அடுத்து பேராசிரியர் கண்ணன் மீது நெல்லை காவல் நிலையத்தில் இரு பிரிவின் கீழ் இன்று வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

நெல்லையை சேர்ந்த இந்து முன்னணி மாநிலச் செயலாளர் குற்றாலநாதன் நேற்று (ஏப்.29) வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்படுவதாக சட்டசபையில் இன்று முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார். காங்கிரஸ் நெல்லை மாவட்ட தலைவர் ஜெயக்குமார் கொலை நடந்து ஒரு வருடமாகிறது. ஒரு குற்றவாளி கூட கைது இல்லை. ஜெயக்குமார் கடைசியாக எழுதியதாக கடிதம் வெளியானது என்னாச்சு? என கூறியுள்ளார்.

திருநெல்வேலி வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் நாளை நடைபெற இருந்தது. இதில் பல்வேறு குளறுபடிகள் கண்டுபிடிக்கப்பட்டு அந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதியரசர்கள் ஸ்ரீமதி, நிஷா பானு ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. தொடர்ந்து நாளை நடைபெற இருந்த சங்க தேர்தல் ரத்து செய்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் பின்னர் தேர்தலை நடத்த வேண்டும் என உத்தரவிட்டனர். இதனால் வழக்கறிஞர்கள் ஏமாற்றமடைந்தனர்

திருநெல்வேலி டவுன் பகுதியில் செயல்பட்டு வரும் காஜா பீடி நிறுவனத்தில் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மத்திய போலீஸ் பாதுகாப்புடன் வருமானவரித்துறையினர் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு பிரிவினர் இங்கே சோதனை மேற்கொண்டு வரும் நிலையில் மற்றொரு பிரிவினரும் வேறு இடங்களில் சோதனை நடத்தி வருவதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த ஜெயக்குமார் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது மர்ம மரணம் குறித்து சிபிசிஐ போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பதவி கடந்த சில மாதங்களாகவே காலியாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் போட்டியின்றி நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார்.
Sorry, no posts matched your criteria.